கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்மாதிரி
நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது
நான் மனச்சோர்பு அடைந்திருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். தாவீது, யோனா, எலியா, யோபு, எரேமியாபோன்ற பலர் அடங்கிய ஆழமானதும் இருண்டதுமான மன அழுத்தத்துக்குள் சென்று வந்த வேதாகமத்துகதாநாயகர்களின் அடிப்படையில் பார்த்தால், மன அழுத்தம் என்பது கிறிஸ்தவர்கள் நடுவே இருக்கும் பொதுவானஉரையாடல் தலைப்பாக இருக்கின்றது. துரதிருஷ்டவசமாக, இது ஒரு தேவையில்லாத சிலருக்குத் தோன்றுகிறது.ஆனாலும் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்வில் அழுத்தம், களைப்பு, மனச் சோர்பு, உற்சாகமின்மை போன்றவைஅவர்களது வாழ்வில் ஆழமான மன அழுத்தத்துக்கும் உடைந்து போகுதலுக்கும் நடத்திச் செல்வதை அனுபவிக்கிறார்கள். நீண்ட காலமாக மரத்துப் போன, களைப்பான, ஆர்வமில்லாத நிலையை நான் அனுபவித்தேன். இறுதியில் நான்அனைத்தையும் விட்டு வெளியே வந்து ஓய்வு எடுத்து, பின்னர் நம்பிக்கையின் ஒளித்துளிகளைக் கண்டேன். இப்படிப்பட்ட அனுபவங்கள் இந்த விழுந்து போன உலகத்தில் சாதாரணமானவைகளே.
நமது ஆன்மாவின் ஒவ்வொரு காலநிலையைப் பற்றியும், அந்த சூழலில் நம் இதயம் வெளியிடும் கதறல்களையும்வேதாகமம் காட்டுகின்றது. இப்படிப்பட்ட கதறல்களின் ஒன்று தான் சங்கீதம் 77 ஆகும். இது மனிதனின் இயலாமையைமட்டுமல்ல, அதிலிருந்து வெளியேறும் வழியையும் காட்டுகின்றது. நம்மால் அசையவே முடியாது என்று நினைக்கும்போது துள்ளி எழுவதற்கான வழியை இது காட்டுகிறது. கர்த்தர் ஒரு மந்திரமான சுகமாக்குதலை நமக்கு வாக்குப்பண்ணவில்லை. அல்லது எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து, எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு என்றுசொல்லவில்லை. மன அழுத்தம் என்பது சிக்கல்கள் நிறைந்தது. கர்த்தர் மக்களை வெவ்வேறு வழிகளில் வெளியேகொண்டு வருகிறார். ஆனால் இந்த சங்கீதம் அனைத்துக்கும் பொதுவான சில விதிகளைச் சொல்கின்றது.
இந்த சங்கீதத்தை எழுதிய ஆசாப், தேவனை நோக்கிக் கதறுவதில் துவங்குகிறார் (வசனங்கள் 1-3). இங்கிருந்துநாம் ஒரு முக்கியமான வளர்ச்சியைக் காண்கிறோம்: கதறுவதிலிருந்து, கடந்த காலத்தில் கிடைத்த ஆசீர்வாதங்களைநினைத்துப் பார்ப்பதற்கு செல்கிறார் (வசனங்கள் 4-6), பின்னர் கர்த்தரிடம் கடினமான கேள்விகளைக் கேட்கிறார்(வசனங்கள் 7-9), பின்னர் நமது சிந்தனைகளை வேறு பக்கமாகத் திருப்புவதைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்(வசனங்கள் 10-12), தேவனைப் பெரியவராகவும் பிரச்சனைகளைச் சிறியவைகளாகவும் பார்க்கிறார் (வசனங்கள் 13-18), பின்னர் கர்த்தரே காப்பாற்றுகிறவர் என்று நம்புகிறார் (வசனங்கள் 19-20). இந்தக் கண்ணோட்ட மாற்றம் என்னும்தொடர் நிகழ்வானது நமது மூளைகளையும் நம் ஆவியையும் வேறு விதமாக சிந்திக்கவும் பார்க்கவும் பயிற்றுவிக்கிறது. நாம் இந்த சிந்தனைத் தொடர் நிகழ்வை நம் வாழ்வில் செய்யும் போது, நமது மன அழுத்தம் பெரும்பாலான சூழல்களில்அகன்று போகின்றது.
மன அழுத்தம் என்பது ஒரு குளிர்ந்த, இருண்ட குகை போல இருக்கலாம். அதன் முடிவில் வெளிச்சம் இல்லாததுபோலத் தோன்றலாம். நிலைமை எத்தனை மோசமாக இருக்கிறது என்பதை நோக்கி நம் மனம் சாயக்கூடும்.எதிர்காலத்திலும் இதே பிரச்சனைகள் தான் அதிகம் இருக்கப் போகின்றது என்று நினைக்கலாம். இருளில் இருந்துவெளிச்சத்துக்கு, தற்போதைய நிலையில் இருந்து கடந்த காலத்து இரக்கத்து, பிரச்சனைகளில் இருந்துவாக்குத்தத்தங்களுக்கு மாறும் ஒரு மனநிலை தான் நம்மை வெளியே கொண்டு வரும். ஆசாபைப் போல, நாம் ஒருநேரத்தை ஒதுக்கி, வித்தியாசமான சிந்தனைகளைத் தேர்ந்தெடுக்கலாம்: “உம்முடைய கிரியைகளையெல்லாம்தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்” (வசனம் 12). சிந்தனைகளை வழி மாற்றும் இந்த மனப்பூர்வமானதேர்ந்தெடுப்பு, நமக்கு விருப்பமாக இருக்கிறதோ இல்லையோ, நமது கண்ணோட்டத்தை மாற்றுகிறது. இருளானதுவெளிச்சத்துக்கு வழிவிடுகிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://livingontheedge.org/