பணமும் முதலீடும் - க்வாக் சகோதர்களுடன்மாதிரி

Money and Investing with the Kwak Brothers

7 ல் 5 நாள்

முதலீடு செய்தல் பகுதி 1

தேவனுடைய இராஜ்யத்திற்கு அடுத்ததாக இயேசு அதிகமாய் பணத்தைக் குறித்து தான் உபதேசித்திருக்கிறார் என்றால், அதை நான் தற்செயலாக பார்க்கவில்லை. பணம் எவ்வளவாய் மக்களுடைய மனதை பாதிக்கிறது என்பதை இயேசுவும் அறிந்திருந்ததாலேயே, அவர் தொடர்ச்சியாக பல இடங்களில் இதைக் குறித்து உபதேசித்திருக்கிறார் என்று புரிகிறது.

புறதேசத்துக்கு பிரயாணமாய் போகும் ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரிடம் ஆஸ்திகளை ஒப்படைத்து சென்ற உவமையை இயேசுவின் போதனைகளில் நீங்கள் வாசித்திருப்பீர்கள். இந்த கதை என்னமாய் முடியும் என்பதையும் நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அந்த மனுஷன் பிரயாணத்தை முடித்து திரும்ப வருகிறார். முதல் இரண்டு ஊழியக்காரர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை இரண்டு மடங்காக பெருக்கியிருந்தார்கள் (ஒருவனிடம் ஐந்து தாலந்தும், மற்றொருவனிடம் இரண்டு தாலந்தும் எஜமான் கொடுத்திருந்தார்). மூன்றாவது ஊழியக்காரனோ, அந்த பணத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில், அதை புதைத்து வைத்ததாக தன் எஜமானிடம் சொல்கிறான்.

இப்போது உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அநேக கிறிஸ்தவர்கள் தவறாமல் ஆலய ஆராதனைகளில் பங்கு கொள்கிறார்கள். தங்கள் உதடுகளினால் கர்த்தரை மகிமைப்படுத்துகிறார்கள். ஆனால், தங்கள் பொருளாதாரத்தால் கர்த்தரை மகிமைப்படுத்துவது இல்லை.

இல்லாமையை குறித்த பயத்தோடு நாம் செயல்படுவோமானால், நம் கரங்களில் இருக்கிறவைகளை மிகவும் கெட்டியாக பிடித்துக்கொள்வோம். இதனால், நம்மை நேசித்து, போஷித்து, கிருபையால் நடத்துகிற பரலோக தகப்பனுக்கு நேராக, விரித்த கரங்களோடு நிற்கும் அனுபவத்தை தவறவிடுகிறோம். நமக்காக இயேசு எதையும் பிடித்து வைத்துக்கொள்ளவில்லை. சிலுவை மரணத்திலும், விரித்த கரங்களோடு, தமது ஜீவனையும் நமக்காக கொடுத்தார்.

"ஒரு பொய்யை நம்புவதின் விளைவு தான் பயம்" என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. இன்றைக்கு நம்மில் அநேகர் பொருளாதாரத்தைக் குறித்த பல பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறோம் என்பதே கசப்பான உண்மை. அப்படிப்பட்ட பொய்களில் ஒன்று தான், நம்முடைய பரலோக தகப்பன் நம்முடைய தேவைகளில் நமக்கு உதவி செய்யமாட்டார் என்பது. நாம் பெற்ற அனைத்து நன்மைகளும், அவர் கரத்தின் ஈவு என்று சொல்கிற அநேகர், தங்களுடைய அன்றாட வாழ்வில் கர்த்தரின் கரத்தை நம்பி, பயமின்றி சந்தோஷமாய் வாழ்வது இல்லை என்பதே உண்மை.

அந்த மூன்றாவது ஊழியக்காரன் அப்படி நடந்துகொண்டதன் காரணம், அவனுக்குள் இருந்த பயம். அந்த பயமே அவனது கரத்தை இறுக்கமாக மூடிக்கொள்ள செய்தது. இன்றைக்கு, நீங்கள் உங்கள் கரங்களை பயமில்லாமல் விரித்து, தேவனுக்கு நேராக உயர்த்த, உங்களை உற்சாகப்படுத்துகிறேன். ஆவியானவர், பகுத்தறிவுக்குள் உங்களை நடத்துவதற்கு இடம் கொடுங்கள். கர்த்தருக்கு பணம் முக்கியமல்ல. ஆனால், நீங்கள் நீங்கள் மிகவும் முக்கியம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், உக்கிராணத்துவம் குறித்த காரியத்தில், தேங்கிய குளங்களாக அல்ல, பாய்ந்தோடும் நதிகளாகவே நாம் இருக்கவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Money and Investing with the Kwak Brothers

உங்களுக்குத் தெரியுமா? புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லிய நாற்பது உவமைகளில், பதினோரு உவமைகளில் இயேசு பணத்தைக் குறித்து பேசியிருக்கிறார். அதாவது, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் போதனைகளில் இது 27.5 சதவீதம். பணத்தைக் குறித்த நம்முடைய மனநிலை எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். பணத்தைக் குறித்த நம்முடைய எண்ணங்களும் மனநிலையும் எப்படி உருவாகிறது என்பதை நாம் அறிந்துகொண்டால் தான், கிறிஸ்துவை மையப்படுத்தின ஒரு புரிதலுக்கு நாம் வர முடியும்.

More

இந்த திட்டத்தை எங்களுக்கு வழங்கிய க்வாக் (Kwak) சகோதரர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய https://thekwakbrothers.com என்ற இணைய பக்கத்திற்குச் செல்லவும்