பணமும் முதலீடும் - க்வாக் சகோதர்களுடன்மாதிரி
அனைத்தையும் ஒன்றிணைத்து
உங்களுக்கு தெரியுமா? புதிய ஏற்பாட்டில், இயேசு பேசிய 40 உவமைகளில், மொத்தம் 11 உவமைகளில் அவர் பணத்தைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதாவது, பதிவுசெய்யப்பட்ட இயேசுவின் உபதேசங்களில், இது மொத்தம் 27.5 சதவீதம். பணக் காரியங்களில் நம்முடைய மனநிலை எவ்வளவு முக்கியமென்பது இதிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா? மிக முக்கியமாக, பணக் காரியங்களில் கிறிஸ்துவை மையப்படுத்தின மனநிலை நமக்கு வேண்டும். அதற்கு, பணத்தைக் குறித்த நம்முடைய எண்ணங்களும், குணநலன்களும் நமக்குள் எப்படி உருவாகிறது என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு தொழில்முனைவோராக, நாங்கள் பணத்தைக் குறித்து பல புத்தகங்களை வாசித்திருக்கிறோம். அதில் பல கருத்துக்கள், பணத்தைக் குறித்து இயேசு போதித்தவைகளுக்கு எதிராக இருப்பதை பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட, வேதத்திற்கு முரணான கருத்தக்களை, நம்முடைய சமுதாயம் "சாதாரணமாக" ஏற்றுக்கொள்வதையும் பார்க்கிறோம். ஆனால், கிறிஸ்துவை பின்பற்றுகிற நமக்கு வேதம் கற்றுக்கொடுப்பது என்ன? "நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், ...உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர் 12:2). பணக் காரியங்களில் நம்முடைய மனம் மறுரூபமாக வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பணத்தில் மாத்திரம் அல்ல, நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாம் மறுரூபமாக வேண்டும்.
இருந்தாலும், வேலை பார்க்கும் பெரியவர்களுக்கு (வளரும் வாலிபருக்கும் கூட) பணம் இன்றைக்கு ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. ஆனாலும், நாம் அதைக் குறித்து அதிகம் பேசிக்கொள்வதில்லை. நம்முடைய பள்ளிகளிலும், பொதுவாக பணக்காரியங்கள் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. நம்முடைய திருச்சபைகளிலும் பெரும்பாலும் பணம் குறித்து பேசப்படுவதில்லை. அனால், பணக்காரியங்கள் இயேசுவுக்கு முக்கியம் என்பதால் நாம் இதைக் குறித்து படிப்பதும் மிக மிக முக்கியம். பணத்தைக் குறித்தும், பணத்தைக் கையாளுவதைக் குறித்தும் நாம் சிந்திக்கும் போது, தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய விருப்பத்தையும் முக்கியத்துவப்படுத்தி சிந்திக்க வேண்டும்.
இந்த ஒரு எண்ணத்துடன், இந்த தியானத்தை நிறைவு செய்கிறேன்: எல்லா பணமும் கர்த்தருடைய பணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
எங்களுடைய அனுபவ சாட்சியின் ஒரு பிரதியை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். உங்கள் பிரதிக்காக https://0to75units.com என்ற இணைய பக்கத்திற்கு வருகை தாருங்கள். அப்பொழுது நீங்களும் எங்களோடு கூட சேர்ந்து சொல்வீர்கள்: எல்லா பணமும் கர்த்தருடைய பணம்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்களுக்குத் தெரியுமா? புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லிய நாற்பது உவமைகளில், பதினோரு உவமைகளில் இயேசு பணத்தைக் குறித்து பேசியிருக்கிறார். அதாவது, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் போதனைகளில் இது 27.5 சதவீதம். பணத்தைக் குறித்த நம்முடைய மனநிலை எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். பணத்தைக் குறித்த நம்முடைய எண்ணங்களும் மனநிலையும் எப்படி உருவாகிறது என்பதை நாம் அறிந்துகொண்டால் தான், கிறிஸ்துவை மையப்படுத்தின ஒரு புரிதலுக்கு நாம் வர முடியும்.
More