பணமும் முதலீடும் - க்வாக் சகோதர்களுடன்மாதிரி
உதாரகுணமும் கொடுத்தலும்
கற்பனையாக ஒன்று சொல்கிறேன். நாள் முழுவதும் வேலை பார்த்த களைப்புடன் நீங்கள் வீடு திரும்பும்போது, வழியில் ஏழ்மையான தோற்றத்தில் ஒருவர் வழிப்போக்கர்களிடம் தர்மம் கேட்டு கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். எப்படியும் இந்த நபர் போதைக்கு அடிமையானவராக தான் இருப்பார். அதற்காக தான் ஏழ்மை வேடத்தில் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று எண்ணி, கடந்து செல்லும் பல மனிதரில் நீங்களும் ஒருவராய் அவர்களுக்கு உதவி செய்யாமல் கடந்து செல்கிறீர்கள். ஆனால், உங்கள் மனதில் ஒரு மூலையில், குற்ற உணர்ச்சி இருக்கும். நீங்கள் உண்மையில் ஒரு "நல்ல மனிதரா" என்ற கேள்வி உங்கள் இருதயத்திற்குள், அந்த இரவு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.
பணம் மட்டும் ஏராளமாய் உங்களிடம் இருந்திருந்தால், கஷ்டபடுகிற மனிதர்களை பார்க்கும் போதெல்லாம், ஆயிரங்களில் அள்ளிக் கொடுக்கலாமே என்று ஆசைப்பட்டு நீங்கள் யோசித்திருப்பீர்கள். உண்மையில், உதாரகுணம் என்பது நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதில் அல்ல. இன்னும் சொல்லப்போனால், ஜெப ஆலயத்தில் மிகுதியான பணத்தை காணிக்கை கொடுத்த ஐசுவரியவான்களோடு, வெறும் இரண்டு காசு காணிக்கை கொடுத்த ஏழை விதவையையும் இயேசு கிறிஸ்து கவனிக்கிறார். அந்த விதவை தன் ஏழ்மையிலிருந்து கொடுத்ததால், அவளே மற்ற எல்லாரை பார்க்கிலும் அதிகமாக கொடுத்தாள் என்று இயேசு கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகள் நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம். ஆனால், நிச்சயமாக அன்றைக்கு அங்கிருந்தவர்களில் அநேகர் இயேசுவை பைத்தியம் பிடித்தவர் போல பார்த்திருப்பார்கள்.
நிச்சயமாக, இயேசு தாம் பேசுவது இன்னதென்று அறிந்தே பேசினார் என்று உறுதியாக நம்புகிறேன். பணத்தை காணிக்கையாக பெறுவதால் ஈர்க்கப்படுவதற்கு, இயேசுவிடம் பணம் இல்லாமல் இல்லை. அவர் ஏற்கனவே எல்லாவற்றையும் உடையவர். அவருக்கு பணத்தின் மீது அக்கறை இல்லை. ஆனால், அவருக்கு நம்மீது அக்கறை உண்டு.
இதைத் தான் இந்த சம்பவத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன். மற்ற அனைவரையும் விட, அந்த ஏழை விதவை அதிகமாக கொடுத்தாள் என்று இயேசு அங்கீகரித்துப் பேசுகிறார் என்றால், அவள் வெறும் பணத்தை மட்டும் கொடுக்கவில்லை. அவள் வேறொன்றையும் கூட கர்த்தருக்கென்று கொடுத்தாள்: அவள் இருதயத்தை.
இன்றைக்கு கர்த்தர் என்னிடம் பேசிய ஒரு காரியம்: கர்த்தருக்கு நம்முடைய பணம் தேவையில்லை; அவர் நம்முடைய இருதயங்களை விரும்புகிறார். கொடுப்பது எப்படியென்று கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? கர்த்தருக்கு உங்கள் இருதயத்தை கொடுங்கள். உதாரகுணத்தில் வளர விரும்புகிறீர்களா? கர்த்தருக்கு உங்கள் இருதயத்தை அர்ப்பணிப்பதில் தாரளாமாக இருங்கள்.
இன்றைக்கு, பல கிறிஸ்தவர்கள் கர்த்தருக்காக பல கிரியைகள் செய்ய விரும்புகிறார்கள், ஆனால், கர்த்தரை தங்கள் இருதயத்தில் கிரியை செய்ய அனுமதிப்பதில்லை. நம்முடைய வருமானத்தில் 10% கர்த்தருக்கு கொடுப்பதைக் காட்டிலும், நம்முடைய இருதயத்தை 100% அவருக்கு கொடுப்பதையே கர்த்தர் விரும்புகிறார்.
வானத்திற்கு கீழே பூமிக்கு மேலே சகலத்தையும் உடையவர் நம்முடைய பரலோக பிதா. அவருக்கு நாம் படைக்கக் கூடிய மிகச் சிறந்த காணிக்கை, நாமே.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்களுக்குத் தெரியுமா? புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லிய நாற்பது உவமைகளில், பதினோரு உவமைகளில் இயேசு பணத்தைக் குறித்து பேசியிருக்கிறார். அதாவது, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் போதனைகளில் இது 27.5 சதவீதம். பணத்தைக் குறித்த நம்முடைய மனநிலை எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். பணத்தைக் குறித்த நம்முடைய எண்ணங்களும் மனநிலையும் எப்படி உருவாகிறது என்பதை நாம் அறிந்துகொண்டால் தான், கிறிஸ்துவை மையப்படுத்தின ஒரு புரிதலுக்கு நாம் வர முடியும்.
More