பணமும் முதலீடும் - க்வாக் சகோதர்களுடன்மாதிரி

Money and Investing with the Kwak Brothers

7 ல் 6 நாள்

முதலீடு செய்தல் பகுதி 2

என் நண்பர் காலேப் ஒருமுறை என்னிடம், "டேனியல், இன்றைக்கு அநேக ஜனங்கள் தங்களுடைய அலைபேசியை சார்ஜ் செய்வதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட, தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை சார்ஜ் செய்வதற்கு பெலப்படுத்துவதற்கு கொடுப்பதில்லை" என்று சொன்னார்.

அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை வெகுவாய் பாதித்தது. என்னுடைய வாழ்க்கையை யோசித்துப் பார்த்தேன். பேட்டரி சார்ஜ் தீர போகிறது என்று ஒவ்வொரு முறை என் அலைபேசி எனக்கு தகவல் கொடுக்கும்போது, அதற்கு சார்ஜ் ஏற்ற துரிதமாக செயல்படுவேன். நம்முடைய ஆவி தொய்ந்து போகும்போது, எத்தனை முறை இதேபோல துரிதமாக செயல்பட்டோம்? தேவ வார்த்தையால் நம்முடைய சிந்தையை நிரப்பும்படிக்கு, உடனடியாக வேத புத்தகத்தை தேடி என்றாகிலும் ஓடியிருக்கிறோமா? நம்முடைய மனது சோர்வடையும்போது, நம்மை பலப்படுத்தக்கூடிய ஒரு ஆவிக்குரிய புத்தகத்திலோ, அல்லது ஒரு பிரசங்கத்தைக் கேட்பதிலோ நேரம் செலவிட்டிருக்கிறோமா? இல்லை என்றே எண்ணுகிறேன். உங்களை குறித்து தெரியவில்லை, குறைந்த பட்சம் இந்த வார்த்தைகளை எனக்கு நானே பேசுகிறேன். காரணம், இதில் நான் குறைவுள்ளவனாக உணர்கிறேன்.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால், நம்முடைய ஆவியும், சிந்தையும் சோர்வடையும்போது, அதை பெலப்படுத்த நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும். சில காரியங்கள் தானாக நடைபெறும் என்று நாம் காத்திருக்கக் கூடாது, நாம் தான் முயற்சி எடுத்து நடத்த வேண்டும். இப்படி சில காரியங்களில் நாம் கவனக்குறைவாக இருப்பதே, நாம் சந்திக்கிற பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

பணம், முதலீடு சம்பத்தப்பட்ட காரியங்களிலும் நாம் இதே மனப்பான்மையை தான் கடைபிடிக்கிறோம். முதலீடு என்று வரும்போது, நம்முடைய பணம் எங்கே போகிறது என்பதை குறித்து நாம் கவலைப்படுவதில்லை. முதலீடு செய்து விட்டு, அதை நமக்காக அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று அவர்கள் பொறுப்பில் விட்டுவிடுகிறோம்.

இதனால் நான் சொல்ல வரும் காரியம் என்ன? பொருளாதாரத்தை குறித்து உங்களை மறுபடியும் பள்ளியில் / கல்லூரியில் சேர்ந்து படிக்க சொல்கிறேனா? நிச்சயமாக இல்லை. அதற்கு அதிகம் செலவாகும். ஒரே ஒரு கேள்வியை மாத்திரம் இன்றைக்கு உங்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன், "நம்முடைய கரங்களில் நாம் பெறும் பணம் அனைத்தும் கர்த்தருக்கு சொந்தமானது என்று நீங்கள் நம்புவீர்கள் என்றால், நாம் கர்த்தருடைய பணத்திற்கு உண்மையுள்ள உக்கிராணக்காரனாக இருப்பது அவசியம் தானே?"

ஒரு நில விற்பனை சார்ந்த தொழில்முனைவோராக, நான் பல மனிதரை கடந்து வந்திருக்கிறேன். அவர்கள் நினைத்திருந்தால், அவர்களுடைய பணத்தை முறையாக திட்டமிட்டு முதலீடு செய்து, பெருமளவு லாபத்தை எடுத்திருக்க முடியும். ஆனால், சூழ்நிலை தானாக வந்து அமையும் வரை, அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவார்கள்.

நீதிமொழிகள் 27:23 ல் வாசிக்கிறோம், “உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு." உங்கள் பணம் சார்ந்த காரியங்களை நீங்கள் உதாசீனப்படுத்தாமல், அவைகளை பெருக்க என்னென்ன முயற்சிகள் எடுக்கலாம் என்று பரிசுத்த ஆவியானவரிடம் அமர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். இந்த உலக வாழ்க்கையில் கர்த்தர் உங்களை நம்பி கொடுத்த பணத்திற்கு, உண்மையுள்ள உக்கிராணக்காரனாக செயல்படுவதில் எந்தெந்த வகையில் வளரலாம் என்று சிந்தியுங்கள். இந்த நாள் முழுவதும் இந்த தியானம் உங்கள் எண்ணங்களில் இருக்கட்டும்.

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Money and Investing with the Kwak Brothers

உங்களுக்குத் தெரியுமா? புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லிய நாற்பது உவமைகளில், பதினோரு உவமைகளில் இயேசு பணத்தைக் குறித்து பேசியிருக்கிறார். அதாவது, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் போதனைகளில் இது 27.5 சதவீதம். பணத்தைக் குறித்த நம்முடைய மனநிலை எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். பணத்தைக் குறித்த நம்முடைய எண்ணங்களும் மனநிலையும் எப்படி உருவாகிறது என்பதை நாம் அறிந்துகொண்டால் தான், கிறிஸ்துவை மையப்படுத்தின ஒரு புரிதலுக்கு நாம் வர முடியும்.

More

இந்த திட்டத்தை எங்களுக்கு வழங்கிய க்வாக் (Kwak) சகோதரர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய https://thekwakbrothers.com என்ற இணைய பக்கத்திற்குச் செல்லவும்