இயேசுவுடன் ஒரு உறவை துவங்குதல்மாதிரி

Beginning A Relationship With Jesus

7 ல் 7 நாள்

"இப்போது என்ன?"

ஒரு கிறிஸ்தவராக இருப்பது, இயேசுவில் இருப்பதை பற்றி தான். இயல்பாக சொல்லப்போனால், அவரில் தங்கி இருக்கிற, நிலைத்திருக்கிற ஒரு வாழ்க்கையை நீங்கள் துவங்குகிறீர்கள். அப்படியானால் என்ன அர்த்தம்? உங்கள் இருதயம், ஆத்துமா, சிந்தை மற்றும் பெலனை முழுமையாக கொண்டு வருவதன் மூலம், அவருடன் உள்ள உறவில் வளர முற்படுகிறீர்கள் என்று அர்த்தம் (மாற்கு 12:30; லூக்கா 10:27).

இயேசு கிறிஸ்துவுடன் உறவில் தங்கியிருக்க இதோ ஐந்து வழிகள்:

மற்ற கிறிஸ்தவர்களுடன் உறவில் இருப்பது

திருச்சபை என்பது இயேசுவுடன் உறவில் இருக்கும், இயேசுவால் மன்னிக்கப்பட்ட, இயேசுவுக்காக வாழ விரும்பும் மற்ற மக்கள். ஒரு திருச்சபையில் இருப்பது இயேசுவுடன் உள்ள உறவில் வளர உதவுகிறது. நாம் திருச்சபையில் தான் மற்ற விசுவாசிகளுடன் கற்கிறோம், வளருகிறோம், கேள்விகள் கேட்கிறோம், சேவைசெய்கிறோம், சேர்ந்து தேவனை தேடுகிறோம், ஆராதிக்கிறோம்.

வேதாகமத்தை வாசித்து கற்பதன் மூலம் அவருடைய வழிநடத்துதலில் இருப்பது

நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் உள்ள உறவில் வளருகையில், வேதாகமத்தைப் பற்றி அதிகமாக அறிய ஆரம்பிப்பீர்கள். வேதாகமம் தேவனுடைய வார்த்தை. அவர் தம்மை பற்றியும், நம் வாழ்க்கை பற்றிய அவரது வாஞ்சை மற்றும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ள முக்கியமான விதங்களில் ஒன்று வேதாகமம். வேதாகமத்தை நீங்கள் அதிகமாக அறியும் போது, தேவனையே நீங்கள் அதிகம் அறிவீர்கள்.

ஜெபத்தின் மூலம் தேவனுடன் உரையாடுவது

ஜெபத்தின் நோக்கம் மற்ற நோக்கமுடைய உரையாடல்களின் நோக்கம் போன்றது தான்: ஒரு அர்த்தமுள்ள உறவில் சேர்ந்து வளருவது தான். ஜெபம் அனேக தலைப்புகளை உள்ளடக்கியது என்று அர்த்தம். கருத்துகளை பகிர்தல், கவனிப்பது, உதவி கேட்பது, நாம் புரிந்துக்கொள்ளும்படி வெளிப்படுத்துவது, அறிக்கை செய்து மன்னிப்பு கேட்பது, நன்றி சொல்வது, அல்லது ஒன்றித்து இருப்பது - இவை அனைத்துமே ஜெபத்தின் அடங்கியவை.

சேவை செய்வதன் மூலம் நடவடிக்கை எடுப்பது

சேவை செய்வது, அக்கறை காட்டுவது, மற்ற மக்களிடம் கடந்து செல்வது தேவனின் அன்பு உள்ளத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, நீங்கள் இயேசுவுடன் உள்ள உறவில் வளரும் ஒரு முக்கியமான வழியுமாக இருக்கிறது. ஏன்? ஏனென்றால் இயேசுவும் இதைத் தான் செய்தார். "மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும்... வந்தார்" என்று இயேசு சொன்னார். (மாற்கு 10:45)

ஆராதனை மூலம் தேவனுக்கு அன்பை தெரிவிப்பது

ஆராதனை என்பது நாம் தேவனிடம் நம் போற்றுதலையும், நன்றியையும், வியப்பையும் மனமாரத் தெரிவிப்பது. தனிமயாகவோ அல்லது ஒரு அரங்கத்தில் ஆயிரக்கணக்கானோருடனோ ஆராதனை செய்யலாம். ஒரு ஆலய கட்டடத்திலோ அல்லது ஒரு மலையோர பசும்புல்லிலோ செய்யலாம். ஆராதனை என்பது தேவனிடம் உங்கள் உண்மையான, நேர்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல்.

இந்த திட்டம் உங்களுக்கு விருப்பமாக இருந்திருந்தால், இந்த திட்டம் இடம் பெறும் முழு புத்தகத்தையும் வெல்ல ஒரு வாய்ப்பை நீங்கள் விரும்பினால், http://www.dccpromo.com/start_here/ க்கு செல்லுங்கள்.
நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Beginning A Relationship With Jesus

இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை புதிதாக துவங்குகிரீர்களா? கிறிஸ்தவத்தை பற்றி இன்னும் அறிய வேண்டும் என்று விரும்பியும், எப்படி, அல்லது எதை கேட்க வேண்டுமென்று தெரியவில்லையா? அப்படியானால், இங்கு துவங்குங்கள். டேவிட் ட்வைட் மற்றும் நிகோல் யூனிஸ் எழுதியுள்ள "Start Here" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக டேவிட் ட்வைட், நிகோல் யூனிஸ் மற்றும் டேவிட் சி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் விபரங்களுக்கு, http://www.dccpromo.com/start_here/ ஐ பார்க்கவும்.