இயேசுவுடன் ஒரு உறவை துவங்குதல்மாதிரி
சலுகை
கிறிஸ்தவ விசுவாசத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, இயேசுவோடு கூட கொண்டிருக்கும் உறவானது ஒரு சலுகையே. அது கட்டாயப்படுத்தப்பட்டதல்ல.
ஒரு விசை ஒரு வாலிபன் இயேசுவிடம் ஒடி வந்து, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவன் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான் (மாற்கு 10:17-22). இயேசு எப்பொழுதும் செய்வதுப் போல, இந்த வாலிபன் தன்னை நன்கு அறிந்துக்கொள்ள வகை செய்யும்படி உரையாடினார்.
ஆகவே, இயேசு அந்த ஆர்வமுள்ள வாலிபனிடம் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. யூதர்களுடைய கட்டளைகளை பட்டியலிட ஆரம்பித்தார். அந்த வாலிபன், "ஆம், ஆம், நான் அவைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கிறேன்!" என்று குறிக்கிட்டான். ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பதே வியப்பானது. இயேசு அவனை பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்தார் என்பதாக மாற்கு 10:21 சொல்கிறது.
இயேசு அவனை பார்த்து. அவர் பிரசங்கம் பண்ணவில்லை. அவர் சுட்டிக்காட்டவில்லை. மாறாக, அவர் நேரடியாக அந்த வாலிபனை நோக்கி தன் இருதயத்தின் முழு கவனத்தையும் செலுத்தி, தன்னிடத்தில் உறவாட அழைக்கிறார்.
இயேசு அன்புகூர்ந்தார். பார்வையில் அன்பு வளர்ந்தது. அது அந்த வாலிபனுடைய கட்டளைகளை கடுமையாக கடைப்பிடித்தாலோ அல்லது அவனுடைய ஆச்சரியாமான செயல்கலினாலோ அல்ல. அவன் அவனாக இருந்ததினால் இயேசு அவனிடத்தில் அன்புகூர்ந்தார்.
அந்த வாலிபன் உண்மையாகவே இயேசுவினுடைய யோசனையை விரும்பி ஒரு நல்ல தேர்வை செய்ய விரும்பினான் என்பது தெளிவாக தெரிகிறது. அனால் இயேசு: "நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்." (மத்தேயு 19:21).
இயேசு அந்த வாலிபனை பார்த்து அன்புக்கூருகையில், அவனுடைய உண்மையான இருதயத்தை வெளிப்படுத்த அவனிடத்தில் என்ன கேட்கவேண்டும் என்பதை சரியாக அறிந்திருந்தார். அவனுடைய பொக்கிஷங்களை பற்றி பேசியதும் அவனுடைய இருதயத்திற்குள் நேரடியாக சென்றார்.
ஆகவே இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புக்கூர்ந்து, தன்னுடைய உறவுக்குள் வருவதற்கான தெரிவை முன்வைத்தார். ஆயினும் வாலிபன் அவ்விடத்தைவிட்டு சென்றுவிட்டான். இது தான் தேவனுடைய வியப்பூட்டும் செயல். நம்மிடத்தில் உறவாட தேவன் சகல் அதிகாரங்களையும் கொண்டுள்ளார். ஆனால், நாம் ஆம் அல்லது இல்லை என்று சொல்கிற விருப்பத்தை நம்மிடத்தில் விட்டு விடுகிறார்.
சில நேரம் மக்கள், "நாம் தேவனிடத்தில் உறவில் இருக்க அவர் விரும்பினால், நம்மை ஏன் அவ்வாறாக திட்டமிட்டு நிரலாக்கவில்லை?" என்று சொல்வார்கள். ஆனால் அன்பை முன்பே திட்டமிட்டு நிரலாக்க முடியாது. ஒரு வேலை இயேசுவிற்கு ஆம் என்று சொல்லவோ அல்லது கிறிஸ்தவர்களாக மாறவோ வற்புறுத்தப்பட்டால், தேவனுடைய குணாதிசயங்கலுக்கும் கிறிஸ்தவத்தின் கருப்பொருளுக்கும் எதிரானதாக இருக்கும்—குறிப்பாக இயேசுவினுடைய விருப்பம் அன்பினை சார்ந்தது, ஒரு புனிதமான அன்பு அது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை புதிதாக துவங்குகிரீர்களா? கிறிஸ்தவத்தை பற்றி இன்னும் அறிய வேண்டும் என்று விரும்பியும், எப்படி, அல்லது எதை கேட்க வேண்டுமென்று தெரியவில்லையா? அப்படியானால், இங்கு துவங்குங்கள். டேவிட் ட்வைட் மற்றும் நிகோல் யூனிஸ் எழுதியுள்ள "Start Here" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
More