இயேசுவுடன் ஒரு உறவை துவங்குதல்மாதிரி

Beginning A Relationship With Jesus

7 ல் 6 நாள்

"தேவன் யார்?"

தேவனை பின்பற்ற துவங்கும் போது, அவரைப் பற்றிய சில முக்கிய காரியங்களை அறிவது உதவியாக இருக்கும். தேவனின் நான்கு குணாதிசயங்களைப் பற்றி பேசுவோம்:

தேவன் நித்தியர்

தேவன் தம்மை காலத்திற்கு அப்பாற்பட்டவராக வருணிக்க என்னென்ன சொற்கள் இருக்கின்றனவோ, அனைத்தையும் பயன்படுத்துகிறார்: என்றென்றும் நிலைக்கும், நித்திய, எப்போதுமுள்ள, இன்றும் என்றும் சதாகாலமும் இருக்கும். தேவன் நித்தியர். நித்தியர் என்பது ஒரு மிக, மிக நீண்ட காலவரம்பைக் குறிப்பதில்லை. "காலத்திற்கு அப்பாற்பட்ட" என்பது அர்த்தம். "காலத்தின் அளவுக்கும் வெளியே" என்று அர்த்தம்.

தேவன் உறவுள்ளவர்

தேவன் மூன்று நபர்களாக, முற்றிலும் ஒருவராக இருக்கிறார் என்று அனேக இடங்களில் வேதாகமம் நமக்கு கற்பிக்கின்றது. இதனைத் தான் திரித்துவம் என்று அழைக்கிறோம். தனிமையான தெய்வ உருவமாக அவர் இல்லாமல், வேதாகமத்தின் தேவனானவர் பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன் (இயேசு கிறிஸ்து) மற்றும் பரிசுத்த ஆவியராகிய தேவனாக இருக்கிறார். இவர்கள் மூன்று தனி நபர்கள் தான், ஆனால் முற்றிலும் ஒருமையாக வாழ்ந்து, பணி செய்கின்றனர்.

தேவன் பூரணர்

தேவனில் குறைபாடு இல்லை, அவருக்கு முன்னேற்றம் தேவையில்லை. அவரது குணத்திற்கோ, தூய்மைக்கோ, அறிவுக்கோ, ஆற்றலுக்கோ, திறனுக்கோ எந்தக் குறைபாடும் இல்லை. குறிப்பாக நம்மைப் போலல்லாமல், தேவன் நன்னடத்தையில் பூரணர். "தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை" என்று வேதாகமம் கூறுகிறது. (1 யோவான் 1:5)

தேவன் "சர்வ"மயமானவர்.

தேவன் சர்வவியாபி, அவர் சர்வவல்லவர், அவர் சர்வஞானி. இந்த வார்த்தைகளின் அர்த்தம், (வரிசைப்படியாக), தேவன் "எங்கும் இருப்பவர்", அவர் "எல்லாம் வல்லவர்", "அனைத்தையும் அறிந்தவர்" என்பது தான். ஒரே நேரத்தில் அவரால் எல்லா இடங்களிலும் இருக்க முடியும். எல்லாவற்றின் மேலும் அவர் வல்லவர், அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.

ஆயினும், இவை ஏன் முக்கியம்?
தேவனின் நித்தியத்தை புரிந்து கொள்வது எனக்கு நம்பிக்கையளிக்கிறது. அவர் உறவுள்ளவர் என்று அறிவதால், நான் அவருடன் உரையாடலில் ஈடு்படலாம். தேவன் பூரணர் என்பதால், எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், தேவனை நான் நம்பலாம் என்று அர்த்தம். அவர் அனைத்தும் என்பதால், வல்லமையை கொண்டிருப்பவர் அவர் தான் என்றும், அவர் நம்மை தனிமையாக விடவில்லை என்றும், தீமை அனைத்தும் தோற்கடிக்கப்படும் என்றும் அர்த்தம்.

எனவே, தேவன் யார்? அவர் தான் உங்களைப் படைத்தவர், நீங்கள் கனவிலும் நினைக்க முடியாத அளவு உங்களை நேசிப்பவர், அவர் தான் உங்களுடன் ஒரு நித்திய உறவை ஏற்படுத்த தன் சொந்த மகன் இயேசு கிறிஸ்துவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்.

தேவனை அறிவது மக்களைப் பற்றிய நமது நோக்கத்தை மாற்றுகிறது. அவர்களை தற்காலிகமான சரீரங்களாக அல்லாமல், நித்திய ஆத்துமாக்களாக பார்க்க ஆரம்பிக்கிறோம்.

தேவனை அறிதல் கஷ்டங்களை வித்தியாசமாக சந்திக்க உதவுகிறது. தேவனை அறிதல் என்றால் நம் வாழ்க்கை கட்டுப்பாட்டை மீறி செல்வதாக எப்போதும் உணரத் தேவையில்லை.
 தேவனை அறிதல் நம்மைத் தாழ்மையிலும் குறிக்கோளிலும் நிலைநிறுத்துகிறது. தேவனை அறிதல் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது.
நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Beginning A Relationship With Jesus

இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை புதிதாக துவங்குகிரீர்களா? கிறிஸ்தவத்தை பற்றி இன்னும் அறிய வேண்டும் என்று விரும்பியும், எப்படி, அல்லது எதை கேட்க வேண்டுமென்று தெரியவில்லையா? அப்படியானால், இங்கு துவங்குங்கள். டேவிட் ட்வைட் மற்றும் நிகோல் யூனிஸ் எழுதியுள்ள "Start Here" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக டேவிட் ட்வைட், நிகோல் யூனிஸ் மற்றும் டேவிட் சி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் விபரங்களுக்கு, http://www.dccpromo.com/start_here/ ஐ பார்க்கவும்.