இயேசுவுடன் ஒரு உறவை துவங்குதல்மாதிரி

Beginning A Relationship With Jesus

7 ல் 2 நாள்

"கேள்விகள்"

உறவுகளின் கலையில் வல்லவர்கள் தான் பொதுவாக மிகச் சிறந்த கேள்விகளையும் கேட்பார்கள். இதில் தான் தேவன் மிகவும் வல்லவர்.

அவர் கேட்கும் ஆழமான சில கேள்விகளை கவனித்துப் பாருங்கள்:

எங்கே இருக்கிறாய்? (ஆதியாகமம் 3:8-9)

வேதாகமத்தின் துவக்கத்திலேயே, தேவன் தன் குணாதிசயத்தின் இந்த அம்சத்தை ஆதாம் ஏவாளுடனான தமது உறவின் மூலம் வெளிப்படுத்துகிறார். அது ஒரு நம்பிக்கைக்குரிய, வெளிப்படையான, தினசரி உறவாக இருந்தது.

ஆதியாகமம் 3ல், ஆதாமும் ஏவாளும் தேவனிடமிருந்து பிரிந்து வாழ தேர்ந்தெடுத்ததை பற்றி நாம் வாசிக்கிறோம். அந்த உறவு முறிந்த போது, தேவன் ஆதாமையும் ஏவாளையும் தேடி வந்தார். அவர்களை தண்டிக்கவோ, வெட்கப்படுத்தவோ அல்ல, அந்த உறவை சரி செய்யவே வந்தார்.

தேவன் உங்கள் வாழ்க்கையை கலக்கும் போது, நீங்கள் அவரை அறியவும் அவருடன் ஒரு உறவில் வாழவுமே உங்களையும் அவர் தேடி வந்திருக்கிறார்.

உங்களுக்கு என்ன வேண்டும்? (யோவான் 1:35-39)

யோவான் 1ல் அறிய ஆர்வம் கொண்ட சில மக்களிடம் தேவனின் கேள்வியை போல இயேசுவும் ஒரு கேள்வி கேட்கிறார். "என்ன தேடுகிறீர்கள்" என்று அவர்களிடம் கேட்டார். (யோவான் 1:38)

அந்த மனிதர்களோ அவர் கேட்ட கேள்வியை தவிர்த்து, தலைப்பை மாற்றி இயேசுவிடம் "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்" என்று கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு முகவரியை கொடுப்பதற்கு மாறாக, "வந்து பாருங்கள்" என்று பதிலளித்தார் (யோவான் 1:39) பதில் கொடுப்பதற்கு மாறாக, ஒரு அழைப்பை கொடுக்கிறார்.

பல நேரங்களில், "உம்மிடமிருந்து ஏதாவது வேண்டும்" என்று நம்மில் அநேகர் கூறுகிறோம், ஆனால் தேவன் நம்மிடம் கூறுவது, "நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்."

நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்? (மத்தேயு 16:13-15)

இங்கு தான் கிறிஸ்தவம் துவங்குகிறது. இந்த கேள்விக்கு உங்கள் பதில் தான் உங்கள் ஆரம்பம், ஏனென்றால் நீங்கள் இயேசுவைப் பற்றி எப்படி யோசிக்கிறீர்கள் என்பது இங்கு தான் தெளிவடைகிறது. அதிர்ஷ்டவசமாக, இயேசு தன்னைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்று யோவான் 10:36, யோவான் 11:25, யோவான் 10:11, மற்றும் யோவான் 8:58 உட்பட வேதாகமத்தில் பதிவாகியிருக்கிறது.

இவை இயேசுவின் அறிக்கைகளில் சில மட்டுமே - தன் அடையாளத்தைப் பற்றிய கேள்விக்கு எப்படி பதிலளிப்பார் என்று காட்டுகின்றன. ஆனால் இயேசு இங்கு நிறுத்தவில்லை. இதை இன்னும் தனிப்பட்டதாக்குகிறார்.

இதை விசுவாசிக்கிறாயா? (யோவான் 11:25-26)

இயேசு எப்பொழுதுமே காரியங்களைத் தனிப்பட்டதாக்குகிறார். தன் சீடர்களிடம் கேட்டார், "நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?". யோவான் 11:25-26ல் மார்த்தாளிடம் கேட்டார், "இதை விசுவாசிக்கிறாயா?"

இதே கேள்விகளை இயேசு நம்மிடமும் கேட்கிறார். இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது தேவனுடன் உறவில் இருப்பதற்கும், தேவனையும் சத்தியத்தையும் கண்டடைவதின் ஒரு பகுதி. சத்தியத்தைக் கண்டடைவது இயேசு கிறிஸ்துவை கண்டடைவதில் துவங்குகிறது.
நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Beginning A Relationship With Jesus

இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை புதிதாக துவங்குகிரீர்களா? கிறிஸ்தவத்தை பற்றி இன்னும் அறிய வேண்டும் என்று விரும்பியும், எப்படி, அல்லது எதை கேட்க வேண்டுமென்று தெரியவில்லையா? அப்படியானால், இங்கு துவங்குங்கள். டேவிட் ட்வைட் மற்றும் நிகோல் யூனிஸ் எழுதியுள்ள "Start Here" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக டேவிட் ட்வைட், நிகோல் யூனிஸ் மற்றும் டேவிட் சி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் விபரங்களுக்கு, http://www.dccpromo.com/start_here/ ஐ பார்க்கவும்.