இயேசுவுடன் ஒரு உறவை துவங்குதல்மாதிரி
"விதிகளும் உறவும்"
கிறிஸ்தவம் என்றால் என்ன என்று நீங்கள் ஒரு சர்ச் செய்தால், "இயேசுவின் போதகங்களை பின்பற்றுவது" என்ற ஒன்றை நீங்கள் கண்டுப்பிடிப்பது அதிக சாத்தியம். அது உண்மை தான். இயேசுவின் போதகங்களை பின்பற்றுவது கிறிஸ்தவம். அதில் என்ன பிரச்சனை என்றால் அனேகர் இயேசுவை பின்பற்றுவது என்ற கருத்தை விதிகளை பின்பற்றுவதாக மாற்றி விடுகின்றனர். அது சரி அல்ல.
பைபிளின் சம்பவம் நமக்கு தெளிவுப்படுத்துவது என்னவென்றால் இயேசுவை நாம் அறிவதன் நோக்கம் ஒரு உறவுக்காக, விதிகளுக்காக அல்ல. தேவன் தம்மை பற்றி பைபிள் மூலம் என்ன சொல்லுகிறார் என்று நீங்கள் ஆராய ஆரம்பித்தால், அவருடன் ஒரு அன்பான, உறுதியான உறவில் இருப்பதே முக்கியம் என்றி நீங்கள் அறிவீர்கள்.
போதகக் கருத்துக்களை பின்பற்றுவது தான் கிறிஸ்தவத்தின் முக்கிய அங்கம் என்று சொல்வது, திருமணத்தின் முக்கிய அங்கம் வீட்டு கட்டணங்களை பங்கிடுவது தான் என்று சொல்வதை போன்றது. ஒரு அருமையான காதல் கதையில் நாம் அதனை எதிர்பார்ப்பதில்லை!
விதிகளுக்கும் உறவுக்கும் உள்ள கண்ணோட்டம் தான் கிறிஸ்தவத்தை மற்ற மதங்களிலிருந்து வேறுப்படுத்துவது. நாம் "நல்லவர்களாக" இருக்கும் வழியை செய்ய வேண்டிய சடங்குகளாலும், உறுதியான நம்பிக்கைகளாலும் அனேக மதங்கள் கற்பிக்கின்றன. ஆனால், கிறிஸ்தவம் வேறு இடத்திலிருந்து துவங்குகிறது.
ஆதி காலத்திலிருந்தே, இயேசுவை பின்பற்றுபவர்கள் விதிகளை பின்பற்றுவதற்கோ அல்லது நல்லவர்களாக இருப்பதற்கோ பெயர் பெற்றவர்கள் அல்லர். அவர்களைப் பற்றி சொல்லக்கூடியது என்னவென்றால் அவர்கள் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பது தான் (அப்போஸ்தலர் 4:13). அவர்கள் இயேசுவை அங்கீகரித்தார்கள் என்பது அல்ல, இயேசுவின் ஒழுங்கு முறைகளை கடைப்பிடித்தார்கள் என்பதும் அல்ல, ஆனால், அவருடன் இருந்தார்கள் என்பது தான்.
"படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும்" பைபிள் குறிப்பிடும் இந்த மக்களே இயேசுவுடன் இருந்ததால் தைரியமான தலைவர்களாக மாறினார்கள். தம்முடன் ஒரு உறவுக்குள் அழைக்கும் போது இயேசு அதே உண்மையை தான் நமக்கு அளிக்கிறார், "அவருடன் இருக்க".
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை புதிதாக துவங்குகிரீர்களா? கிறிஸ்தவத்தை பற்றி இன்னும் அறிய வேண்டும் என்று விரும்பியும், எப்படி, அல்லது எதை கேட்க வேண்டுமென்று தெரியவில்லையா? அப்படியானால், இங்கு துவங்குங்கள். டேவிட் ட்வைட் மற்றும் நிகோல் யூனிஸ் எழுதியுள்ள "Start Here" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக டேவிட் ட்வைட், நிகோல் யூனிஸ் மற்றும் டேவிட் சி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் விபரங்களுக்கு, http://www.dccpromo.com/start_here/ ஐ பார்க்கவும்.