இயேசுவுடன் ஒரு உறவை துவங்குதல்மாதிரி
"புதிய அடையாளம்"
தேவனின் பிள்ளைகளாகும் உரிமை இயேசுவால் ஏற்பட்டது. இதில் வியக்கத்தக்க செய்தி என்னவென்றால், இயேசுவினால், தேவன் இயேசுவை பற்றி என்ன சொல்கிறாரோ அதையே தான் நம்மை பற்றியும் சொல்கிறார். ஆயத்தமா? இதோ: "நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்." (மாற்கு 1:11)
இயேசுவினால், தேவன் இயேசுவை பற்றி என்ன சொல்கிறாரோ, அதையே உங்களை பற்றியும் சொல்கிறார். இந்த ஒரு வாக்கியத்தில், நாம் அனைவரும் உணரும் அடையாள குறைக்கு, சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், அன்புக்காக, அங்கீகாரத்திற்காக நச்சரிக்கும், ஆழமான ஏக்கத்திற்கு பதிலாக அளவில்லாமல் நமக்கு உறுதியளிக்கிறார். இந்த வாகுத்தத்ததின் மூன்று தனிதனி அம்சங்களை கவனியுங்கள்:
1. நீர் என் குமாரன்...
"நீர் என் குமாரன்" என்று தேவன் சொல்லும் பொழுது அவர் தம்மை நம்முடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார். நம்முடன் சம்பந்தப்பட வேண்டும் என்றும், நாம் இணைந்திருக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த புதிய அடையாளத்தின் முதல் கருத்து என்னவென்றால், தேவன் சம்பந்தப்பட விரும்பும் மக்களாக நாம் இருக்கிறோம் என்பது தான். "ஆம், அது தான் என் மகள், அது தான் என் மகன்" என்று அவர் கூறுகிறார். நாம் அவர் பிள்ளைகளாகி விட்ட பின் நம்மி ஒரு போதும் அவர் நிராகரிப்பதில்லை. சில நேரங்களில் நாம் மோசமாக நடந்துக்கொண்டால் கூட அவர் நம்மிடம் இவ்வளவு அன்பாக இறக்கிறார் என்பது அளவுக்கு அதிகமாக தோன்றுகிறது!
2. பிரியமாயிருக்கிறேன்…
குடும்ப உறவுகளில் சில நேரங்களில், நமக்கு எப்பொழுதுமே ஒருவரையொருவர் பிடிக்காது. உங்களுக்கு பிடிக்காத ஒரு குடும்ப நபர் இருந்தால், ஆம் இவன் தான் என் தம்பி என்று சொல்லிக்கொள்ள வேண்டும் ஆனால் எனக்கு இவனை பிடிக்கவில்லை என்று நீங்கள் உணரலாம்.
ஆனால் தேவன் அப்படிப்பட்டவர் அல்ல. "ஆம், இதோ என் மகன்" என்று மட்டும் அவர் சொல்வதில்லாமல், "என் மகனை நேசிக்கிறேன்" என்றும் உரிமைப் பாராட்டுகின்றார். "நான் அவரை நேசிக்கிறேன். என் இதயம் அவருடன், அவருக்காக இருக்கிறது."
3. உம்மில் பிரியமாயிருக்கிறேன்.
இந்த வாகுத்தத்தத்தின் வாக்கியத்தை "நான் உன் மேல் பிரியமாயிருக்கிறேன்" என்று சொல்லி இன்னும் மேன்மைப் படுத்துகிறார். நட்சத்திரங்களை அதன் இடத்தில் பதித்த தேவன் உன்னை பற்றி மேன்மைப் பாராட்டுகிறேன் என்று சொல்கிறார். மற்ற ஒரு நபரை பற்றி அல்ல, உங்களை பற்றி.
தேவன் நமக்காக வைத்திருக்கும் அன்பை நாம் அறிவதில் வளரும் போது, நம் அடையாளத்தை பற்றி நம் ஆத்துமாவில் இருக்கும் குறைகளெல்லாம் இந்த உறுதிப்படுத்தும் வாக்கியங்களால் நிறையும். நம்மை உறுதிப்படுத்துவதற்காக, முக்கியமாக இருப்பதற்காக, முக்கியமாக உணருவதற்காக, ரசிக்கப்படுவதர்காக, உயர்வாக நினைக்கப்படுவதற்காக நாம் செய்துக்கொண்டிருக்கும் அனைத்து காரியங்களுக்கும் இப்போது நமக்கு பதில் இருக்கிறது. மக்களிடதிலிருந்து அல்ல, நம் உள்ளத்தை நிரப்ப முடியாத பொருட்களிடமிருந்தும் அல்ல, பட்டம் பதவியிலிருந்து அல்ல... ஆனால் தேவனிடமிருந்து.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை புதிதாக துவங்குகிரீர்களா? கிறிஸ்தவத்தை பற்றி இன்னும் அறிய வேண்டும் என்று விரும்பியும், எப்படி, அல்லது எதை கேட்க வேண்டுமென்று தெரியவில்லையா? அப்படியானால், இங்கு துவங்குங்கள். டேவிட் ட்வைட் மற்றும் நிகோல் யூனிஸ் எழுதியுள்ள "Start Here" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக டேவிட் ட்வைட், நிகோல் யூனிஸ் மற்றும் டேவிட் சி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் விபரங்களுக்கு, http://www.dccpromo.com/start_here/ ஐ பார்க்கவும்.