சிறந்த தலைமைத்துவத்திற்கு ஆறு படிகள்மாதிரி

Six Steps To Your Best Leadership

7 ல் 7 நாள்

இனி செயலாக்கு

இந்த வேத திட்டத்தை அதைக்குறித்து ஒன்றும் செய்யாமல் முடிக்காதே. தலைவர்கள் தகவலின்மீது கிரியை செய்வார்கள், அது மறுரூபமாக்குதலை கொண்டுவரும். உன்னுடைய அடுத்தப்படி என்ன? நீ கேட்பதற்கும், நிணைப்பதற்கும், யூகிப்பதற்கும் மேலாக செய்ய தேவன் அவருடைய வல்லமையோடு தயாராக இருக்கிறார்.

  1. ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு: நீ யாரென்று அறிந்து, யாராக மாறவேண்டுமென்று அறிந்து இருந்தால், நீ என்ன செய்யவேண்டும் என்று அறிவாய். யாராக மாறவேண்டும் என்று தெரிந்தால், துவங்குவதற்கு என்ன ஒழுங்கு உனக்கு தேவை?
  2. நிறுத்த தேவையான தைரியம்: நீ யாராக மாறவேண்டும் என்ற முடிவின் பிரகாரம், எதை நீ நிறுத்த தைரியம் உனக்கு தேவை? எதிர்மறையான காரியங்களை மாத்திரம் எண்ணாதீர்கள். எதோ ஒரு முக்கியமான காரியத்தையும்கூட நீ நிறுத்தி வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டியதாக இருக்கும்.
  3. வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம்: யாரை வளர்ச்சி அடைய செய்வீர்கள்? நீங்கள் வழிநடத்தும் நபர்களுக்கு ஒரு தடுக்கும் மூடியாக மாறிவிடாதீர்கள். நீங்கள் நிறுத்த வேண்டிய காரியத்தை கொண்டு ஒருவரை ஒரு வேளை வளர்ச்சி அடைய செய்யலாம்.
  4. உருவாக்க ஒரு அமைப்பு: எங்கு இறுக்கமான சூழ்நிலையை உணருகிறீர்கள்? எங்கு பிரச்சனைகள் உருவெடுக்கின்றன? விரும்பும் முடிவுகளை பெற என்ன அமைப்பை உருவாக்கவேண்டும்?
  5. துவங்க வேண்டிய உறவு: நீங்கள் யாராக மாற விரும்புகிறீர்களோ, யாரை நீங்கள் சந்திக்கவேண்டும்? துவங்க வேண்டிய உறவுகள் என்ன? உங்கள் வாழ்க்கையின் முடிவை மாற்றக்கூடிய ஒரே ஒரு முடிவு தான் தேவையாக இருக்கிறது.
  6. துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள்: நீங்கள் மாற விரும்பும் நபர், மற்றும் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதற்க்கு என்ன அபாயங்களை நீங்கள் எடுக்கவேண்டும்? நீங்கள் தயாராக இருக்க காத்திருந்தாள், நீங்கள் எப்போதுமே தாமதமாகத்தான் இருப்பீர்கள்.

முடிவாக தேவன் உங்களை யாராக இருக்க சிருஷ்டித்தாரோ அதுவாக இரு. எப்போதும் சரியாக இருக்கும் தலைவனை காட்டிலும் எப்போதும் உண்மையாக இருக்கும் தலைவனையே மக்கள் பின்பற்றுவார்கள்.

தேவனோடு பேசு: தேவனே, என்னுடைய சொந்த பெலத்தால் செய்யக்கூடிய எல்லாவற்றை காட்டிலும், நீர் அதிகம் செய்ய வல்லவரென்று நான் நம்புகிறேன். எனக்கு அடுத்த படி எடுத்து வைக்க தேவையான ஞானம், தைரியம் மற்றும் பெலத்தை தரமாட்டீரா?

இன்னும் தகவலுக்கு என்னுடைய பழக்கங்கள் என்ற தலைப்பில் செய்திகளை கேளுங்கள்.

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Six Steps To Your Best Leadership

ஒரு தலைவனாக வளருவதற்கு தயாரா? பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்கள் ஒரு சிறந்த தலைவனாக மாறுவதற்கு தேவையான ஆறு வேதாகம படிகளை கற்றுத்தருகிறார். ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு, நிறுத்த தேவையான தைரியம், வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம், உருவாக்க ஒரு அமைப்பு, துவங்க வேண்டிய உறவு மற்றும் துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் Life.Church-க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://www.craiggroeschel.com க்கு செல்லவும்