சிறந்த தலைமைத்துவத்திற்கு ஆறு படிகள்மாதிரி
வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம்
இயேசு பூமியில் அவருடைய மூன்று ஆண்டு ஊழிய வாழ்க்கையில் செய்த ஒரு காரியம் வளர்ச்சி அடையவைக்கவேண்டிய மனிதர்களை அவர் தேடினார். அவர் 12 பேரை கண்டுபிடித்தார். ஆனால் நீ இயேசு அல்ல, அதனால் ஒருவரை வைத்து தொடங்கலாமே?
நீ மற்றவர்களை வளர்ச்சி அடைய செய்யாவிட்டால், இதோ ஒரு வாக்குத்தத்தம் - உன் ஊழியத்திற்கு நீயே ஒரு தடையாக இருப்பாய். உன் ஊழியம் நீ என்ன செய்கிறாயோ ஆனால் வளருவதில்லை, அது நீ வளர்ச்சி அடைய செய்யும் நபர்களால் தான் வளரும்.
தேவ குமாரன் இயேசுவே அவருடைய கிரியை நிறைவேற மனிதர்களின்மீது நம்பிக்கை வைத்தாரென்றால், நாம் ஒன்றும் தனியாய் கிரியை செய்து சாதிக்க முடியாது. மக்களை வளரும்படி கட்டு அப்போது நீ மிகபெரிய ஒரு காரியத்தை கட்டுவாய்.
நேற்று நாம் நிறுத்த தேவையான தைரியத்தை குறித்து பேசினோம். நீ விரும்பும் முக்கியமான வேலைகளையும் கூட நீ நிர்த்தவேண்டியதாக இருக்கும். ஒரு அறிக்கை, வரவிருக்கும் திட்டம் இவைகளை மற்றவர்களிடம் ஒப்படையுங்கள். ஒருவரால் உன்னைப்போல 50 சதவீதம் தான் ஒரு வேலையை செய்யமுடியும் என்றாலும் அவரால் வளரமுடியும் என்றால், அந்த வேலையை அவருக்கு ஒப்புவித்து அவர் வளருவதை பாருங்கள்.
இயேசுவின் முதல் பெரிய கிரியை வளர்ச்சி அடைய வைக்க வேண்டிய மக்களை கண்டுபிடித்தார். அவருடைய கட்சி கிரியை அவருடைய சீஷர்களுக்கு முக்கியமான ஊழியத்தை கொடுப்பதாக இருந்தது. அதை நாம் பெரிய ஊழிய அழைப்பு என்று அழைக்கிறோம். அது இன்னும் சரியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.
எதை நீங்கள் விட்டுக்கொடுக்க முடியும்? யாருக்கு கொடுக்க முடியும்? எவ்வாறு அவர்களை வளரவும் பயிற்சிவிக்கவும் முடியும்?
ஒருவரை வளர்ச்சி அடைய வைக்கும்போது, அவர் விலைமதிப்பை உணர்ந்தவராக மாறுவார், தலைமை தன்மையில் வளருவார். நீ மற்ற காரியத்தில் கவனம் செலுத்தலாம், நீங்கள் வழிநடத்தும் எதுவும் பெலன் பெரும்.
நீ உன்னுடைய ஊழியத்தில் கட்டுப்பாடு கொள்ளலாம், அல்லது வளரலாம், இரண்டையுமே கொண்டிருக்க முடியாது. யாரை நீ வளர்ச்சி அடைய செய்வாய்?
தேவனோடு பேசு: தேவனே, உம்முடைய மக்களில் சிலரை வழிநடத்த என்னை நம்பினதற்காக நன்றி. யாரை நான் வளர்ச்சி அடைய செய்யவேண்டும்? அவர்கள் என்ன செய்ய வேண்டும் எந்தப்பதற்காக வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்?
இன்னும் அறிந்துகொள்ள என்னுடைய வலையொளியின் 16 மற்றும் 17 பகுதியை கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒரு தலைவனாக வளருவதற்கு தயாரா? பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்கள் ஒரு சிறந்த தலைவனாக மாறுவதற்கு தேவையான ஆறு வேதாகம படிகளை கற்றுத்தருகிறார். ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு, நிறுத்த தேவையான தைரியம், வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம், உருவாக்க ஒரு அமைப்பு, துவங்க வேண்டிய உறவு மற்றும் துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள்.
More