சிறந்த தலைமைத்துவத்திற்கு ஆறு படிகள்மாதிரி
நிறுத்த தேவையான தைரியம்
இந்த உலகில் யாரொருவன் தேவன் தந்த மிக சிறந்த தலைமைத்துவ சாத்தியகூரோடு பிறந்திருந்திருந்தால், அது சிம்சோன்தான், ஆனாலும் அவன் நிறுத்த தேவையான தைரியத்தை கொண்டிராமல் இருந்ததால் அவனுடைய ஜீவியம் முற்றிலும் இடிந்து விழுந்தது.
அவன் வாழ்க்கை நியாயாதிபதிகள் 16:1 -இலிருந்து கீழாக செல்ல துவங்கியது: ஒரு நாள் சிம்சோன் காசாவிற்கு சென்று அங்கு ஒரு வேசியை கண்டான்.
காசா சிம்சோனின் ஊரான சோராவிலிருந்து 25 மையில் தூரம் உள்ளது. காசா என்பது சிம்சோனை வெறுத்த பெலிஸ்தரின் தலைநகரமாக இருந்ததது. இன்னும் சிம்சோன் வாழ்ந்த நாட்களில் வாடகை மோட்டார் வண்டிவசதியேதும் இருக்கவில்லை. சிம்சோன் ஒரு வேசியை காண எதிரிகளின் பிரதேசத்திற்கு 25 மையில் நடந்து சென்றான்.
அதாவது 56,250 படிகள். சிம்சோன் அவனுடைய வாழ்க்கையை திடீரென்று அளித்துவிடவில்லை. அவன் 56,250 படிகள் தவறான திசையில் எடுத்துவைத்தான்.
நம்முடைய குழுக்களில், நிறுவனங்களில், தொழில்களில், ஆரோக்கியத்தில் மற்றும் குடும்பங்களிலும் இதே தவறுதான் நடக்கிறது. நாம் திடீரென்று ஒரே மூச்சில் வாழ்க்கையை அளித்துவிடுவதில்லை. எப்போதும் ஒரு தவறான முடிவு, ஒரு தவறான படி, ஒரு தவறான பழக்கம், ஒவ்வொரு நாளாக நடக்கிறது.
ஆகவே தேவையானது என்ன? நிறுத்த தேவையான தைரியம். இல்லை என்று சொல்ல. குறைவாக செய்ய. தவறான திசையில் செல்லாமல் இருக்க தடுக்க. உன்னை நிறுத்த என்ன தேவையாக இருக்கிறது?
வெறுமனே தெளிவான தவறுகளை மாத்திரம் நிறுத்துவது குறித்து மாத்திரம் அல்ல. நீங்கள் ஒரு மேலாளரா? ஒருவேளை ஒரு அரைகுறையான சந்திப்பை நிறுத்துவதாக இருக்கலாம். மோசமான திட்டத்திற்கு அதிக சாத்தியத்தை செலவிடுவது பெரிய முடிவுகளை தராது. எந்த திட்டங்களை நீங்கள் நிறுத்தவேண்டும்? நீங்கள் தலைவனாக வளர எந்த முக்கிய பணிகளை நீங்கள் நிறுத்தவேண்டும்? ஒரு தலைவனாக சாதிக்க, நீங்கள் குறைவாக செய்யவேண்டியதாக இருக்கும்.
ஒருவேளை அது வேலையைக்குறித்து மாத்திரம் இல்லாமல் இருக்கக்கூடும். ஒருவேளை சிம்சோனைப்போல ஒன்று, இரண்டு, அல்லது 2,000 படிகளை உறவுகளில், பழக்கவழக்கங்களில், அள்ளாது ஆரோக்கியத்தில் நீங்கள் தவறான திசையில் எடுத்து வைத்திருக்கக்கூடும். ஆனால் நிறுத்துவதற்கு தைரியம்கொள்ள இன்னும் தாமதமாகிவிடவில்லை.
கருத்தில் கொள்ளுங்கள்: நான் யாராக வளரவேண்டுமென்பதில், எதை நிறுத்த எனக்கு தைரியம் தேவை? எந்த முடிவுகள் தவறான விளைவுகளை கொண்டுவரும்? எந்த உணர்வுகளும் இடங்களும் என்னை பிரச்சனைகளுக்கு உள்ளாக்குகிறது? யார் எனக்கு நிறுத்த உதவ முடியும்?
இந்த திட்டத்தைப் பற்றி
ஒரு தலைவனாக வளருவதற்கு தயாரா? பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்கள் ஒரு சிறந்த தலைவனாக மாறுவதற்கு தேவையான ஆறு வேதாகம படிகளை கற்றுத்தருகிறார். ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு, நிறுத்த தேவையான தைரியம், வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம், உருவாக்க ஒரு அமைப்பு, துவங்க வேண்டிய உறவு மற்றும் துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள்.
More