சிறந்த தலைமைத்துவத்திற்கு ஆறு படிகள்மாதிரி

Six Steps To Your Best Leadership

7 ல் 6 நாள்

நீங்கள் எடுக்க வேண்டிய ஒரு இடர்

நீ ஒரு வாலிபனாகவோ, அல்லது கல்லூரி மனவனாகவோ, அல்லது வேலைபுரிந்துக் கொண்டிருப்பவரோ, அல்லது பதவிஓய்வு பெற்றவராகவோ இருந்தாலும்கூட இதுவே அபாயமான முடிவுகள் எடுக்க சரியான வேளை. வளரும்போதும் சரி சரியும்போதும் சரி அபாயமான முடிவுகளை எடுங்கள். பத்திரமாக வாழ்ந்து யாருமே பெரிய காரியத்தை சாத்தித்ததில்லை.

தவறான அபாயமான முடிவுகளை எடுக்க நான் சொல்லவில்லை. நல்ல உறவுகளை கெடுக்கும் வண்ணமான முடிவுகளை எடுக்காதீர்கள், அல்லது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் முடிவுகள், சரியாக நடந்துகொண்டிருக்கும் எதையும் கெடுத்துவிடாதீர்கள். ஆனால் நான் என்ன கோட்பாடை சொல்லுகிறேன்? என்ன எண்ணத்தோடு நீங்கள் இருக்கிறீர்கள்? என்ன ஆழமான நோக்கத்தை கொண்டிருக்கீறீர்கள்? விசுவாசத்தில் ஒரு அபாயமான முடிவை எடு.

ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் சொன்னது எனக்கு ரொம்ப பிரியம், "தனியாக அபாயமான இடங்களுக்கு செல்லுங்கள், அங்கே தான் கனி இருக்கிறது."

நீங்கள் அந்த பணக்கார ஆனால் வேதாகமத்தின் அயோக்கியனை குறித்து அறிந்திருப்பீர்கள். அவன் தனியாக அபாயமான முடிவோடு இயேசுவை காணும்படியாக மரமேறினான். பிரதான ஆயக்காரனாக வளரும் அளவு திறமை கொண்டவனாக இருந்தான், அந்த புகழையும் கொண்டிருந்தான். ஆனால் அவன் புகழையெல்லாம் அபாயத்தில் வைத்து இயேசுவை காணும்படியாக ஒரு மரத்தை ஏறினான். இயேசு சகேயுவை கண்டார், அவரை அவன் வீட்டிற்க்கு அழைத்தார், உடனடியாகவே சகேயுவின் வாழ்க்கை முற்றிலும் ஐஸ்வரியமானதாய் மறுரூபமாகிற்று.

நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே இருக்க விரும்பினால், நீ செய்துகொண்டிருப்பதையே செய். உன்னை மாற்ற விரும்பினால், நீ செய்யும் கிரியையை மாற்று. வேறு மாதிரி சொல்லவேண்டுமென்றால், உன் ஜீவியத்தின் கனியை மாற்றவேன்றுமென்றால் நீ தனியாக அபாயமான வையாக செல்லவேண்டும்.

நீ ஒரு புத்தகத்தை எழுத துவங்கவேண்டுமா, யாரையோ நட்பிற்கு அழைக்கவேண்டுமா, ஒரு தயாரிப்பை துவங்கவேண்டுமா, ஒரு ஊழியத்தை துவங்கவேண்டுமா, ஆலயத்திற்கு செல்ல துவங்கவேண்டுமா, ஒரு வளையொலியை ஆரம்பிக்கவேண்டுமா? தேவன் வழிநடத்தும் விதத்தில், என்ன அபாயத்தை நீ எடுக்கவேண்டும்?

செயலாக்கு: நீ எடுக்க இருக்கும் அபாயமான முடிவை நீ நம்பும் ஒருவரிடம் பகிரு. பிறகு, முதல் படியை எடு.

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Six Steps To Your Best Leadership

ஒரு தலைவனாக வளருவதற்கு தயாரா? பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்கள் ஒரு சிறந்த தலைவனாக மாறுவதற்கு தேவையான ஆறு வேதாகம படிகளை கற்றுத்தருகிறார். ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு, நிறுத்த தேவையான தைரியம், வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம், உருவாக்க ஒரு அமைப்பு, துவங்க வேண்டிய உறவு மற்றும் துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் Life.Church-க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://www.craiggroeschel.com க்கு செல்லவும்