சிறந்த தலைமைத்துவத்திற்கு ஆறு படிகள்மாதிரி

Six Steps To Your Best Leadership

7 ல் 4 நாள்

உருவாக்க ஒரு அமைப்பு

தொடர்ந்து உங்கள் வேலையில், குழுவில், வீட்டில் அல்லது வாழ்க்கையில் வந்துகொண்டே இருக்கும் பிரச்சனையை யோசித்துப்பாருங்கள். நீங்கள் ஒருவேளை தவறான நபர்கள், வீட்டு பிரச்சனைகள், அல்லது அமைப்பிலேயே ஒரு பிரச்சனை இருக்கும் என்பதாக யோசிக்கலாம்.

தலைவர்களாக, பிரச்சனையை மேலே வைத்துக்கொண்டு, கீழே இருப்பவர்கள் மீது பழியை போட்டுக்கொண்டிருக்கலாம்.

ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம், "நமக்கு அமைப்புகள் இல்லை", "நாம் உறவுகளில் தான் இயங்குகிறோம்"; "நமக்கு அமைப்புகள் தேவையில்லை". உண்மையில் சொன்னால், நாம் அமைப்புகளை கொண்டிருக்கிறோம். உங்கள் அமைப்பு ஒருவேளை நாளை மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று கண்காணிப்பதாக இருக்கும், அல்லது வரும் பிரச்சனைகளை கையாளுவதாக இருக்கும், பிறகு வீட்டிற்கு மன அழுத்தத்தோடு செல்வதாக இருக்கும். ஆனால் அதுவும் ஒரு அமைப்பு தான்.

அமைப்புகளை விரும்பியோ விரும்பாமலோ கொண்டிருக்கிறோம், ஆனால் நிச்சயம் கொண்டிருக்கிறோம். அமைப்புகள் நீ உருவாக்கினதாக இருக்கலாம் அல்லது நீ சகித்ததாக இருக்கலாம். ஆகவே நல்ல முடிவுகளை பெற மேம்பட்ட அமைப்புகளை உருவாக்கு.

வேதாகமத்தின் முதல் அதிகாரத்தில், உலகம் ஒழுங்கின்மையாக இருந்தது, அதைநோக்கி தேவன் சொன்னார், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று. பிறகு காலையை மாலையிலிருந்து, பூமியை வானத்திலிருந்து, நிலத்தை தண்ணீரிலிருந்து, பறவைகளை மீண்களிலிருந்து மற்றும் அநேகவற்றை பிரித்தார். நீங்கள் கவனிக்கலாம் தேவன் ஒவ்வொரு அமைப்பையும் தனியாக கையாண்டு அது சிறப்பிக்கும்வரை அதிலிருந்து விலகுவதில்லை. முடிவிலே தேவன் மனிதனை சிருஷ்டித்தார், அவனுக்கு முழு உலகத்தையும் கவனிக்க வழிமுறையை கொடுத்தார் - அதோடுகூட வாரத்தில் ஒரு நாள் இளைப்பாரவும்.

சிருஷ்டிப்பு ஒரு அமைப்பிலிருந்துதான் வந்தது. பவுல் அப்போஸ்தலன் சபையை அநேக தேவையான அல்லது தேவையில்லாத பயன்பாட்டோடுகூடிய அங்கங்களைக்கொண்ட ஒரு சரீரமாக வர்ணிக்கிறார். அது ஒரு அமைப்பு. ஒரே ஒரு தலைவன் - இயேசுவை கொண்ட ஒரு அமைப்பு.

உலகத்தைப்போல, சபையைப்போல, உன் சொந்த சரீரம்போல, உன் வாழ்க்கை அநேக அமைப்புகளால் நிறைந்திருக்கிறது. ஆரோக்கியமான அமைப்புகள் விபத்தாக அல்லது திடீரென்று அமைவதில்லை. அவைகள் ஒரு தீர்மானத்தோடு அமைகின்றன.

விரும்பும் பலன்களை பெற என்ன அமைப்புகளை நீ உருவாக்க வேண்டும்?

கருத்தில் கொள்ளுங்கள்: என்னுடைய முக்கிய அமைப்பான என் ஜீவனின்மீது இயேசுவை தலைவராக ஏற்படுத்தியிருக்கின்றேனா? என்ன பிரச்சனைகளை நான் சந்திக்கிறேன், என்ன அமைப்புகள் அவைகளை தீர்க்கும்?

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Six Steps To Your Best Leadership

ஒரு தலைவனாக வளருவதற்கு தயாரா? பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்கள் ஒரு சிறந்த தலைவனாக மாறுவதற்கு தேவையான ஆறு வேதாகம படிகளை கற்றுத்தருகிறார். ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு, நிறுத்த தேவையான தைரியம், வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம், உருவாக்க ஒரு அமைப்பு, துவங்க வேண்டிய உறவு மற்றும் துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் Life.Church-க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://www.craiggroeschel.com க்கு செல்லவும்