சிறந்த தலைமைத்துவத்திற்கு ஆறு படிகள்மாதிரி
துவங்க வேண்டிய உறவு
நாம் இந்த வேதாகம திட்டத்தை செயலுக்கு முன்பாக யார் என்ற ஆள்தத்துவத்தை வைப்போமென்று முடிவெடுத்து துவங்கினோம். நீ யாரென்பதை மாற்றுவதற்கு, நீ யாரோடு இருக்கிறாய் என்பதை மாற்றவேண்டும்.
புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியை எழுதிய பவுல் அப்போஸ்தலன், வேதாகமத்திலே மிக உணர்ச்சிபூர்வமான மாறுதல்களை அனுபவித்தார். அவருடைய வாழ்க்கையின் மாறுதல் அவருடைய பெயரையே சவுளிலிருந்து பவுளாக மாற்றும் அளவு உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
சவுல் கிறிஸ்துவர்களை வெறுத்து அவர்களை கொன்றுபோட விரும்பியது. பவுல் கிறிஸ்துவர்களை அவருடைய வாழ்நாட்கள் முழுவதும் நேசித்தது. சவுல் இயேசுவின் சீடர்களை வெறுத்து அவர்களை கொன்றுபோடும்படியாக பிரயாணம்செய்தார். பவுல் வழியில் இயேசுவை சந்தித்து பிறகு அவரை பிரஸ்தாபப்படுத்தும்படி பிரயாணம் செய்தார். சவுல் தேவனோடு சேர பக்திவைராக்யம் கொண்ட மக்களோடு நேரத்தை செலவழித்தார். பவுல் உடைக்கப்பட்ட மக்களோடு நேரத்தை செலவழித்து தேவன் அவருடைய வழியை பவுலுக்கு காட்டும்படி செய்தார்.
முதலில் பவுல் இயேசுவை சந்தித்தார், அவர் அவருக்கு வெளிச்சத்தை காட்டினார். பிறகு அனனியாவை சந்தித்தார், அவர் அவருக்கு புது பெலனைப்பெறவும் சரியாக பார்க்கும் தெளிவான பார்வையை கொடுத்தார். அதற்குப்பிறகு பவுல் பர்ணபாவை சந்தித்தார், அவர் பவுலுக்காக நின்று பவுலை கண்டு பயப்பட்ட சபையின் முக்கிய தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த பட்டியல் சென்றுகொண்டே இருக்கிறது. ஆனால் பவுல் சரித்திரத்தின் முக்கிய ஒரு தலைவராக திகழ்கிறார்.
பவுலைப்போல நீயும் உன் வாழ்க்கையின் முடிவை மாற்றக்கூடிய ஒரே ஒரு உறவின் தூரத்தில் இருக்கலாம். கேட்பவர்களோடு மாத்திரம் நேரத்தை செலவழிக்க்காதே. உன்னை நீட்டி, இழுத்து, அழுத்தி, குழப்பக்கூடிய அப்படிப்பட்ட மக்களோடு நேரத்தை செலவழிக்க துவங்கு.
பவுலிடம் கற்று உன்னை தவறுகாண்பவர்களை சந்தி. நாம் புரிந்துகொள்ளாத காரியத்தை நாம் நியாயந்தீர்க்கிறோம். வெறுமனே உங்களுடைய வயதில், உங்கள் தொழில், அல்லது உங்களுக்கு இணையான அனுபவத்தைக்கொண்ட நபர்களோடு மாத்திரம் சந்திக்காதீர்கள். நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்களா? உங்களைவிட சில படிகள் முன்னாள் இருக்கும் சிலரை கண்டுபிடியுங்கள். நீங்கள் 30 வயதுள்ளவராக இருந்தால், 40 வயது நபர் ஒருவரை சந்தித்து அவர்கள் எவ்வாறு 30 வயதுள்ளவர்களை விட வித்தியாசமாக யோசிக்கிறார்கள் என்று கேளுங்கள்.
அதிகமாக செவிகொடுத்து, கேள்விகள் கேட்டு, நல்ல முன்மாதிரிகளை பின்பற்ற வாருங்கள். மற்றவர்களை போல வெறுமனே போலியாக நடிக்காதீர்கள். அவர்களைப்போல நினைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
முடிவாக, நீங்கள் இயேசுவோடு ஒரு உறவில் இல்லையென்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு உறவின் தேவையில் இருக்கிறீர்கள். அது என்னுடைய வாழ்வில் உண்மையாக இருந்தது. இன்றைய வாசிப்பின் கடைசி பகுதி பவுல் அப்போஸ்தலனுடைய இயேசுவோடு கொள்ளும் உறவை குறித்ததாக இருக்கிறது.
தேவனோடு பேசுங்கள்: தேவனே, நீர் என்னை யாராக உருவாக்கினீர் என்று அறிந்திருக்கிறீர். நான் யாரை சந்திக்கவேண்டும் என்று எனக்கு காட்டி உதவமாட்டீரா? சரியான உறவுகளை சரியாக பின்பற்ற எனக்கு ஞானத்தையும் பெலத்தையும் தாரும்.
நீங்கள் இயேசுவோடு ஒரு உறவை துவங்க எண்ணுகிறீர்களா என்று எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .
இந்த திட்டத்தைப் பற்றி
ஒரு தலைவனாக வளருவதற்கு தயாரா? பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்கள் ஒரு சிறந்த தலைவனாக மாறுவதற்கு தேவையான ஆறு வேதாகம படிகளை கற்றுத்தருகிறார். ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு, நிறுத்த தேவையான தைரியம், வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம், உருவாக்க ஒரு அமைப்பு, துவங்க வேண்டிய உறவு மற்றும் துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள்.
More