உயிர்த்தெழுதலின் கதைமாதிரி

The Story of Easter

7 ல் 5 நாள்

வெள்ளி

பவுல் பிலிப்பியர் 3 இல் "கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்" என்று எழுதியிருக்கிறார்: இந்தக் கோர காட்சியை நாம் அனுபவிக்க விரும்புவது சாத்தியமல்லவென்றாலும், நாம் உண்மையாகவே கிறிஸ்துவை அறிய முடியுமென்பது தான் இந்த சம்பவம் காட்டும் அற்புதம். அந்த கொடூரத்தின் மத்தியிலும் மின்னுகிற சமாதானம், சந்தோஷம், அமைதி மற்றும் கிருபையை நாம் பார்க்கும் போது, இயேசுவின் மரண அழகை, நாமும் அவர் போல் காண்பிக்க முடியும். தேவனையே முழுவதுமாக நம்பிய அவரது எளிய வாழ்க்கை. தன் நெருங்கிய நண்பனிடம் ஒப்படைத்த தன் தாயைத் தவிர அவருக்கு வேறு எந்த உலக கவலையுமே இல்லை. சூதாடும் சேவகன் கையில் விழுந்த அங்கிதான் அவரது ஒரே சொத்து. அவ்வளவான எளிமை. அவ்வளவான தெளிந்த கவனம். தேவனின் திட்டத்திற்கு அவ்வளவான அர்ப்பணிப்பு. தன் பிதாவிடம் அவர் வைத்த முழுமையான நம்பிக்கை. அதுவே நாமும் ஆசிக்கக்கூடியது.
நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

The Story of Easter

உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church பற்றி மேலும் விபரங்களை அறிய www.life.churchஐ தயவு செய்து பார்வையிடுங்கள்