உயிர்த்தெழுதலின் கதைமாதிரி

The Story of Easter

7 ல் 4 நாள்

வியாழன்

இயேசு மரித்த போது அவரோடு கூட இருந்த அவரது சீஷர்களின் நிலைமையில் உங்களை வைத்துக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் இதயம் உடைந்திருக்கும். உங்கள் சிந்தனை அலைபாய்ந்து கொண்டிருக்கும். இது யூதர்களின் ராஜாவுக்கு சம்பவிக்கக் கூடிய ஒரு காரியமே அல்ல. அவர் அனைத்தையும் சரிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உடைந்ததை சரி செய்திருக்க வேண்டும். இழந்ததை மீட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது அனைத்தைமே இழந்தது போல தெரிகிறது. எல்லாம் தகர்ந்து விட்டது. எதுவும் சரியில்லை. சிலுவைக்கும் காலியான கல்லறைக்கும் இடையே உள்ள அந்த காலகட்டத்தில் எப்படியிருந்திருக்கும் என்று சிறிது நேரம் கற்பனை செய்யுங்கள். நம்பிக்கை அற்றுப் போனது. கிருபை வருவதற்கு முன்னான நேரம். அப்படிப்பட்ட வாழ்க்கைநிலையில் உள்ள ஒருவருக்காக அந்த உணர்வுடன் ஜெபம் செய்யுங்கள். அவர்களை எப்படி அணுக வேண்டும் என்றும், இந்த வாரம் உங்கள் உயிர்த்தெழுதல் ஆராதனை ஆசாரிப்புக்கு அவர்களை எப்படி அழைக்க வேண்டும் என்றும் தேவனிடம் கேளுங்கள்.
நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

The Story of Easter

உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church பற்றி மேலும் விபரங்களை அறிய www.life.churchஐ தயவு செய்து பார்வையிடுங்கள்