உயிர்த்தெழுதலின் கதைமாதிரி

The Story of Easter

7 ல் 1 நாள்

திங்கட்கிழமை

நாம் எப்படி கர்த்தர் விரும்புகிற முன்மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டுமேன்று இயேசு வாழ்ந்து காட்டினார். அதை விளக்குகிறது இந்த பகுதி.. இயேசு, "நான் செய்வது போல் செய்யுங்கள்" என்றார். மிக ஆச்சரியப்படும்படியாக, இந்த கட்டளையின்படி வாழ பலத்தையும் கொடுக்கிறார். நம்முடைய சொந்த பலத்தில் பிதாவின் குமாரன் இயேசுவைப் போல் வாழ முயற்சி செய்யும்படி நம்மிடம் கேட்கவில்லை - அவருடைய உயிர்த்தெழுதல் அவரது பலத்தைப் பெற நமக்கு உரிமை அளித்தது. இன்று, கிறிஸ்து நமக்கு விட்டுப் போன முன்மாதிரியை நாம் தியானிக்க வேண்டும். பாதங்கள் கழுவும் செயல் உங்கள் சொந்த உறவுகளிலும் சூழ்நிலைகளிலும் எப்படி தெரிகிறது? இயேசு தம் நண்பர்களுக்காக செய்ததைப் போலவே மற்றவர்களுக்கும் நீங்கள் இந்த அடிப்படை வழிமுறையைப் பயன்படுத்தக்கூடுமாவென்று சிந்தியுங்கள்?

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Story of Easter

உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church பற்றி மேலும் விபரங்களை அறிய www.life.churchஐ தயவு செய்து பார்வையிடுங்கள்