உயிர்த்தெழுதலின் கதைமாதிரி

The Story of Easter

7 ல் 2 நாள்

செவ்வாய்

திராட்சைத் தோட்டத்தின் படத்தில், நாம் யார் என்பதை நாம் உறுதிப்பட தெரிந்து கொள்ள வேண்டும். நாம்தான் கிளைகள். நம்முடைய ஒரே ஒரு வேலை, இயேசு என்னும் கொடியை கெட்டியாய் பிடித்திருப்பதுதான். அவ்வாறு செய்வதன் மூலம் நாம் நமது தனித்துவ செயலான கனிதரும் நோக்கத்தை நிறைவேற்றுவோம்: திராட்சைத் தோட்டத்தில் நடைபெறும் பிற வேலைகள் அனைத்தையும் தோட்டக்காரர் நிறைவேற்றுவார். கர்த்தர் தான் அந்த தோட்டக்காரர். நான் இல்லை. நீங்கள் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம், கொடியின்மேல் தொடர்ந்து இணைந்திருந்து, நம் மூலமாய் காரியங்கள் செய்ய அவரை அனுமதிப்பதே. நீங்கள் யார், எதற்காக அழைக்கப்பட்டீர்கள் என்பதை குறித்து தியானியுங்கள். கெட்டியாய் படர்ந்திருத்தல். நிலைமாறாதிருத்தல். தொடர்ந்து இணைந்திருத்தல். இறுக்கமாய் பிடித்துக் கொள்ளுதல். அமைந்தொழுகுதல். இவையே நாம்
செய்ய வேண்டியன. வேறு ஒன்றும் இல்லை.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

The Story of Easter

உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church பற்றி மேலும் விபரங்களை அறிய www.life.churchஐ தயவு செய்து பார்வையிடுங்கள்