கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்புமாதிரி

உண்மையாகத் தேடுபவர்கள்
வேதாகமத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் கதைகளில் ஒன்று, கிறிஸ்து பிறப்பின் கதை. அநேகமாக வேதாகமத்தை நன்கு அறிந்திருக்காத பெரும்பாலான மக்களும் கூட, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது சூழலில் இந்தக் கதையைக் கேட்டிருக்கக் கூடும். ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும் நிச்சயமாக, நாம் திரும்பத் திரும்பக் கேட்கும் ஒரு கதை, ராஜா பிறக்கவிருக்கும் இடத்திற்கு நேராக நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்ட ஞானிகள் குறித்த சம்பவம்.
இந்த ஞானிகள் கிழக்கிலிருந்து வந்தவர்கள் என்று மத்தேயுவின் நற்செய்தி கூறுகிறது (பார்க்க மத்தேயு 2:1). இவர்கள் வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றில் திறமையானவர்கள். தங்கள் கலாச்சாரத்தில் மிகவும் பயபக்தியுடன் மதிக்கப்பட்டனர். குறிப்பாக, கனவுகளை விளக்கும் திறனுக்காக இவர்கள் போற்றப்பட்டனர்.
விஞ்ஞானம், கணிதம், வரலாறு மற்றும் அமானுஷ்யம் பற்றிய அவர்களின் அறிவின் காரணமாக, அவர்கள் மேதிய-பாரசீக மற்றும் பாபிலோனியப் பேரரசுகளில் மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த ஆலோசகர்களாக, மத மற்றும் அரசியல் செல்வாக்குடன் திகழ்ந்தனர். சூத்திரதாரி மற்றும் மந்திரவாதிகளை விட, இவர்கள் மிக உயர்ந்த இடத்திலிருந்தனர். அவர்கள் ராஜாக்களைப்போல இல்லாவிட்டாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்கள்.
ஆனாலும், இந்த ஞானவான்களிடம் மிகுதியான அறிவு இருந்தும், அவர்களால், வாழ்க்கையின் தேடல்களுக்கான பதில்களைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் தேடுபவர்கள் என்று நீங்கள் கூறலாம். ஆம், அவர்கள் உண்மையாகத் தேடினார்கள் என்பதை நாங்கள் அறிவோம், ஏனென்றால் அவர்கள் இயேசு இருக்கும் இடத்திற்கு நட்சத்திரத்தால் வழி நடத்தப்பட்டனர். கர்த்தர் ஒரு சிறப்பு வழியில் அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்: "அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்" (மத்தேயு 2:10). பின்னர் அவர்கள் தங்கம், தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றை அவருக்குப் பரிசாகக் கொடுத்துத் தொழுதனர்.
எரேமியா 29:13ல் கர்த்தர் நமக்குச் சொல்கிறார், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்கள் என்றால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." நீங்களும் கர்த்தரை உண்மையான தேடுபவராக இருந்தால், உண்மையான தேவனை அறிய விரும்பினால், அவர் உங்களுக்கும் தன்னை வெளிப்படுத்துவார்.
பதிப்புரிமை © 2011அறுவடை ஊழியங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வேத வசனங்கள், புதிய கிங் ஜேம்ஸ் பதிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை © 1982 தாமஸ் நெல்சன், இன்க். அனுமதி பெற்றுப் பயன்படுத்தப்பட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

ஒரு புதிய ஆரம்பம்

சீடத்துவம்

நம்மில் தேவனின் திட்டம்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
