கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்புமாதிரி
கிறிஸ்மஸ் எதைக் குறிக்கிறது
இன்று நம் உலகத்தைப் பார்க்கும்போது, ஏசாயா 9: 6-7-ல் அருளப்பட்ட வாக்குறுதியின் ஒரு பகுதி இன்னும் நிறைவேறவில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. குமாரன் கொடுக்கப்பட்டார். குழந்தை பிறந்தது. ஆனால் அவரது இறையரசு இதுவரை இவ்வுலகில் நிறுவப்படவில்லை. நீதியும், நியாயத்தீர்ப்பும் வழங்கப்பட்டு சமாதானம் அருளப்படவில்லை.
ஆனால், ஓர் நல்ல செய்தி என்னவென்றால், கிறிஸ்து ஒருநாள் இவ்வுலகிற்குத் திரும்பி வருவார். இந்த பூமியில் தனது ராஜ்யத்தை நிறுவுவார். அது கர்த்தரின் நீதி நிறைந்த ஆட்சியாக இருக்கும்.
இயேசு இறையரசை தனது தோள்களில் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக, அவரது தோள் சிலுவையைச் சுமக்க வேண்டியிருந்தது. அவர் அரசர்களின் அரசராக, அந்த மகிமையின் கிரீடத்தை அணிவதற்கு முன்பாக, வெட்கக்கேடான முள் கிரீடத்தை அணிந்துகொண்டு, உலகத்தின் பாவங்களுக்காகத் தனது உயிரைப் பலியாகக் கொடுக்க வேண்டி இருந்தது. முதல் முறையில், அவரது வருகையைக் குறித்து, ஒரு நட்சத்திரம் அறிவித்தது. ஆனால் அடுத்த முறை அவர் திரும்ப வரும்போது, வானம் ஒரு சுருளைப் போலச் சுருட்டப்பட்டு அகன்று போகும். நட்சத்திரங்கள் அனைத்தும் வானத்திலிருந்து கீழே விழும். அவரே அதை ஒளிரச் செய்வார்.
கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார். கர்த்தர் உங்களுக்கு அருகில் வந்தார், அதனால் நீங்களும் அவரை நெருங்கி வரலாம் - உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தையும், அர்த்தத்தையும் கொடுக்க, உங்கள் பாவங்களை மன்னிக்க, மரணத்திற்கு அப்பால் ஒரு புதிய வாழ்வின் நம்பிக்கையை உங்களுக்கு வழங்க, அவர் வந்தார். கிறிஸ்மஸ் என்பது டின்சல் அல்லது ஷாப்பிங் அல்லது பரிசுகள் வழங்குவது மட்டுமல்ல. கிறிஸ்மஸ் என்பது மரத்தடியில் உள்ள பரிசுகளைப் பற்றியது அல்ல. மாறாக, கிறிஸ்து நம் பாவங்களுக்காகச் சிலுவை மரத்தின் மீது தமது உயிரையே கொடுத்த உன்னதமான பரிசு. அது நமக்கு நிரந்தரமான புதிய வாழ்வைக் கொடுத்தது.
பதிப்புரிமை © 2011அறுவடை ஊழியங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வேத வசனங்கள், புதிய கிங் ஜேம்ஸ் பதிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை © 1982 தாமஸ் நெல்சன், இன்க். அனுமதி பெற்றுப் பயன்படுத்தப்பட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்
More