கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்புமாதிரி
கர்த்தர் நமக்கு அளித்த பரிசு (பாகம் 2)
கர்த்தர் நமக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற பரிசை அனுபவித்து மகிழ்வதற்காகவே நாம் கிறிஸ்மஸைக் கொண்டாடுகிறோம். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு என்பது கர்த்தரிடமிருந்து கிடைத்த உன்னதமான பரிசு. நாம் அதைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள். ஆனால் கிறிஸ்துவின் பரிசு மனிதக்குலத்திற்கான அவரது திட்டத்தை விளக்குகிறது.
கிறிஸ்துவின் பரிசு தற்செயலானதொரு நிகழ்வு இல்லை. பெத்லகேமில் ஒரு தொழுவம் அமைவதற்கு முன்பாகவே ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதற்கு முன்பாக, ஏதேன் என்ற தோட்டம் உருவாக்கப்படும் முன்பாக, தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்காகச் சிலுவையில் பலியாக மரிப்பதற்கு அனுப்ப முடிவு செய்தார்.
ஆதியிலேயே, மனுகுலம் தனது மகிமையை இழந்து போகும் என்பதைக் கர்த்தர் அறிந்திருந்தார். அதனால்தான் உலக தோற்றத்திலேயே, இயேசுக் கிறிஸ்து மனுகுலத்தின் பாவங்களுக்காகப் பலியாக மரிப்பார் என்பது வேதத்தில் எழுதப்பட்டுள்ளது (வெளிப்படுத்துதல் 13:8 ஐப் பார்க்கவும்).
கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து வாழ்ந்து, மரித்து, மரித்தோரிலிருந்து எழுந்திருப்பார் என்பதைக் கர்த்தர் ஆதியிலேயே தீர்மானித்தார். கர்த்தர் நமக்கு அளித்த இந்தப் பரிசு, நம்மை மீட்பதற்கான அவரது திட்டத்தை நிரூபிக்கிறது.
இயேசு கிறிஸ்து நமக்குப் பரிசாக அருளப்பட்டதே கிறிஸ்மஸ். நாம் அவரை நெருங்கிச் சேர்வதற்காக, இயேசு நம் அருகில் வந்தார்.
கிறிஸ்மஸ் என்பது அலங்கார ஜோடனை அல்ல. ஷாப்பிங் செல்வது அல்ல. மரத்தடியில் மறைத்து வைக்கப்பட்ட பரிசுகளைப் பற்றியது அல்ல. கிறிஸ்து நம் பாவங்களுக்காகச் சிலுவையின் மீது தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்த விலை மதிப்பற்ற கர்த்தரின் பரிசு. நமக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பது கிறிஸ்துமஸ்.
அதைத்தான் அவர் நிறைவேற்றி வெற்றி சிறந்தார். இதுவே அவர் அளிக்கும் பரிசு. நீங்கள் அதை அடைவீர்கள் என்றால், எல்லாவற்றிலும் மேலான மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்மஸை அனுபவிப்பீர்கள்.
பதிப்புரிமை © 2011அறுவடை ஊழியங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வேத வசனங்கள், புதிய கிங் ஜேம்ஸ் பதிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை © 1982 தாமஸ் நெல்சன், இன்க். அனுமதி பெற்றுப் பயன்படுத்தப்பட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்
More