கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்புமாதிரி
கர்த்தர் நமக்களித்த பரிசு (பாகம் 1)
கிறிஸ்மஸ் என்றவுடன், உங்களது சிறு வயதில் கிடைத்த பரிசுப் பொருட்கள் தான் மனதில் உடனடியாகத் தோன்றும். டிசம்பர் மாதம் என்றாலே, விளையாட்டுப் பொருட்கள் பரிசாகக் கிடைப்பதைக் குறித்து கற்பனையில் மனம் மூழ்கித் திளைக்கும்.
ஆனால், கிறிஸ்மஸ் என்றாலே, ஒருவருக்கொருவர் பரிசுகளைக் கொடுத்து மகிழ்வது மட்டுமல்ல, கர்த்தர் தமது ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸதுவை நமக்குப் பரிசாக அருளினார் என்பதே கிறிஸ்மஸ் நமக்கு நினைவு படுத்தும் உண்மையான செய்தி.
பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில், கர்த்தர் கிருபையாக நமக்களித்த அந்த ஒப்பற்ற பரிசைக் குறித்த மூன்று காரியங்களை, நான் உங்களுக்குச் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன். இன்றும், நாளையும் அதைக் குறித்து நாம் தியானிக்கலாம்.
முதலாவது நாம் ஆழமாக உணர்ந்து மனதில் பதிய வேண்டிய உண்மை, கர்த்தர் நமக்களித்த அந்த பரிசு ஒரு எளிமையான சூழலில் அருளப்பட்டது. சிலர் பரிசை கொடுக்கும்போது, அதை அழகிய, கவர்ச்சிகரமாக வண்ண காகிதங்களால் அலங்கரித்து அளிப்பார்கள். ஆனால் கர்த்தரோ, ஒரு சிறிய ஊரிலிருந்த, மாட்டுத் தொழுவத்தில் வைத்து, மிக எளிமையான பின்னணியில் அந்த பரிசை நமக்கு அளித்தார்.
இதுவே கிறிஸ்மஸின் பேரழகு. கிறிஸ்து மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததன் நிமித்தம், நாம் விண்ணகத்தில் குடியேறும் வாய்ப்பு பிறந்தது. நமது மீட்பர் பட்டுத் துணியால் சுற்றி அரவணைக்கப்படவில்லை, எளிய துணியில் பொதிந்து வைக்கப்பட்டார். உலகத்தின் மாபெரும் பரிசு, ஒரு மாட்டுத் தொழுவத்தில், எளிய கந்தை துணியில் சுற்றி வைக்கப்பட்டு அருளப்பட்டது.
இரண்டாவதாக நான் சுட்டிக் காட்ட விரும்புவது, இந்த விலையேறப் பெற்ற பரிசைப் பெற்றுக் கொள்வதற்கு, நாம் தகுதியற்றவர்கள். இந்த உண்மையைத் தயவாய் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்: நாம் கர்த்தருக்கு விரோதமாகப் பாவியாக இருந்த போதிலும், இந்த உன்னதமான பரிசை அவர் நமக்கு அருளினார் (ரோமர் 5:8).
இந்தப் பரிசை பெற்றுக் கொள்வதற்காக நாம் எந்தவொரு நற்செயலையும் செய்யவில்லை. இதை எந்தவொரு தகுதியின் அடிப்படையிலும் அடைய முடியாது. இதுவே கிறிஸ்மஸின் மிக ஆச்சரியமூட்டும் நற்செய்தி. தமது ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவர் எவராக இருந்தாலும், அவர்களை அழிவிலிருந்து மீட்டெடுத்து, என்றும் நிலைத்திருக்கும் வாழ்வை அடைவதற்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் (யோவான் 3:16).
கிறிஸ்மஸிற்கு இன்னும் சில தினங்களே உள்ளது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து உங்கள் உள்ளத்தில் பிறப்பதற்கு, அதை ஆயத்தப்படுத்துங்கள். இயேசு பலியாக மரிப்பதற்காகவே பிறந்தார். அதனால் நாம் பிழைத்து உயிர் அடைந்தோம். இந்த உண்மையை உணர்ந்து தியானியுங்கள்.
பதிப்புரிமை © 2011அறுவடை ஊழியங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வேத வசனங்கள், புதிய கிங் ஜேம்ஸ் பதிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை © 1982 தாமஸ் நெல்சன், இன்க். அனுமதி பெற்றுப் பயன்படுத்தப்பட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்
More