கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்புமாதிரி
கிறிஸ்மஸைத் தவறவிடாதீர்கள்
“உலகிற்கு மகிழ்ச்சி! கர்த்தர் வந்தார். பூமி தனது அரசரைப் பெறட்டும். ஒவ்வொரு உள்ளங்களும், அவர் தங்குவதற்கு ஏற்ற விதமாக தமது இதயத்தில் ஓர் அறையைத் தயார் செய்யட்டும்."
- உலகிற்கு மகிழ்ச்சி
இந்த கிறிஸ்மஸில், அதைக் கொண்டாடும் மைய நோக்கத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். தனது வேலையில் அதி மும்முரமாகச் செயல்பட்ட அந்த சத்திரத்துக் காப்பாளர் இயேசுவைத் தவறவிட்டது போல இருக்காதீர்கள் (லூக்கா 2ஐப் பார்க்கவும்). கர்த்தருக்காக நேரத்தை ஒதுக்குங்கள். கிறிஸ்து தனது வாழ்க்கையை ஆளுகை செய்ய அனுமதிப்பதற்கு மிகவும் பயந்த ஏரோது ராஜாவைப் போல இருக்க வேண்டாம் (மத்தேயு 2 ஐப் பார்க்கவும்). உங்கள் உள்ளத்தைக் கிறிஸ்துவை நோக்கித் திருப்புங்கள். இறுதியாக, கிறிஸ்துவை தவறவிட்ட ரோமானியப் பேரரசைப் போல உங்கள் வாழ்க்கை இருக்க வேண்டாம், ஏனென்றால், அவர் கிறிஸ்துவிற்கு தர வேண்டிய தமது உள்ளத்தை, மற்ற கடவுள்களுக்கு அளித்தார். இயேசுகிறிஸ்துவை வணங்கும் இடத்தில், வேறெதுவும் அமருவதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
கிறிஸ்மஸ் காலையில் நாங்கள் எங்கள் கிறிஸ்மஸ் பரிசுகளைத் திறந்து பார்ப்போம், ஆனால் காலப்போக்கில், அதன் எல்லா புதுமையும் தேய்ந்து மங்கிப் போகும். ஒரு காலத்தில் நீங்கள் மிக விலையுயர்ந்ததாகக் கருதிய பரிசு, தற்போது அலமாரியில் ஓர் ஓரமாகக் கிடக்கும் அல்லது வேறு யாரோ ஒருவருக்கு அதைக் கொடுத்திருப்பீர்கள். உங்கள் சமீபத்திய புதிய மொபைல் தொலைப்பேசியின் மாடல் அதிக மெகாபிக்சல்கள் அல்லது சிறிய வடிவினில் அல்லது வேகமாக இயங்கும் விதத்தில் அல்லது அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி கொண்டதாக வரும். காலப்போக்கில், உங்கள் பழைய கிறிஸ்மஸ் பரிசுகளும், அது போல பெரும்பாலும் மறந்துவிடும். ஆனால் கர்த்தர் நமக்கு இறுதியாக மங்காத ஓர் பரிசை அளித்துள்ளார் - அது அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து.
இந்த ஆண்டு கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்குத் தவறவிடாதீர்கள். வாட்ஸ் மற்றும் ஹேண்டல், அவர்கள் எழுதியது போல், "எல்லா உள்ளங்களும் அவர் தங்குவதற்கு ஏற்ற விதமாக ஓர் அறையை, தங்களது இதயத்தில் ஆயத்தம் செய்யட்டும்."
பதிப்புரிமை © 2011அறுவடை ஊழியங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வேத வசனங்கள், புதிய கிங் ஜேம்ஸ் பதிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை © 1982 தாமஸ் நெல்சன், இன்க். அனுமதி பெற்றுப் பயன்படுத்தப்பட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்
More