கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்புமாதிரி

Christmas Encouragement By Greg Laurie

25 ல் 16 நாள்

நான் விரும்பும் கிறிஸ்மஸ்

கிறிஸ்மஸ் வாக்குறுதியை, நான் எப்போதும் மனதார நம்புகிறேன். என் சிறு வயதிலிருந்து நான் கொண்டாடிய கிறிஸ்மஸை விட, இந்த வருடம் ஏதோ ஒருவகையில் மேலும் சிறப்பானதாக இருக்கப் போகிறது.


ஆரம்ப செலவினங்களைக் கடந்தும், நாம் கிறிஸ்மஸை நேசிப்பதற்குக் காரணம் என்ன?
அது அழகு மிகுந்த, அதிசயம் நிறைந்த, எதிர்பார்ப்பு உணர்வுகளைத் தரும் கொண்டாட்டமாக இருப்பதும் ஒரு காரணம் என நினைக்கிறேன். மனதுக்கு இதமான இசை, ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் அழகிய குழந்தை முகங்கள், சுவை மிகும் உணவு எனக் கிறிஸ்மஸ் ஒரு உவகை தரும் பண்டிகை. நமது குடும்பம், நல்ல நண்பர்கள் என உறவுகள் சூழ இருப்பது, ஓர் ஆனந்த அனுபவம். அதில் சச்சரவு, அற்பத்தனம் இல்லாததும் முக்கியம் (கிறிஸ்மஸ் தள்ளுபடி விற்பனையில் அலைமோதும் கூட்டத்தைத் தவிர்த்து).

ஆனால், கிறிஸ்மஸ் வாக்குறுதிகளை, உண்மையாக எத்தனை முறை, நம்மால் நிறைவேற்ற முடிகிறது? இங்குக் கொஞ்சம், அங்குக் கொஞ்சமாக ஒரு சிலவற்றைச் செய்கிறோம். ஆக மொத்தத்தில், இது தொலைக்காட்சியில் வரும் எண்ணங்களைத் தூண்டும் முடிவில்லாத விளம்பரங்களைப் போலத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சில நேரங்களில், நமக்கு அறிமுகமில்லாத நபர்களுக்கும் கூடப் பரிசுப் பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம்; அது மன அழுத்தத்தை, எரிச்சலை உண்டு செய்கிறது. நம் மீது பிறர் வைக்கும் எதிர்பார்ப்பினால் இது நிகழ்கிறது. சில சமயங்களில் நாமே வாக்குறுதி அளித்து விட்டு சலனப்படுகிறோம்.


பின்னர் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு பிந்தைய மந்தநிலை - ஒருபோதும் பூர்த்தி செய்ய முடியாத பிறரது எதிர்பார்ப்புகளினால் ஏற்படும் சோர்வு. நாம் உண்மையில் கொடுக்க விரும்புவது அவர்களுக்குப் பிடிக்காது, அல்லது அவர்கள் விரும்புவதை நம்மால் வாங்கி கொடுக்க முடிவதில்லை. சில சமயம் நாம் எதிர்பார்ப்பதும் கிடைப்பதில்லை. கடைசியாகப் பணம் கட்ட வேண்டிய பற்றுச் சீட்டுகள் நமக்கு முன்பாக வரிசையாக...,

ஆக, கிறிஸ்மஸின் மோசமான பகுதி என்பது எது? இது ஒரு வகையில் ஆரவாரத்தன்மை மிகுந்த, வியாபார நோக்கமுடைய, சோர்வை ஏற்படுத்தும் ஒரு வெற்றுச் சடங்கு. பல மாதங்களுக்கு இதன் விளைவு முடிவில்லாமல் தொடர்கிறது.

கிறிஸ்மஸின் மிக உன்னதமான பகுதி என்ன? இது வரவிருக்கும் விஷயங்களைக் குறித்து வெளிப்படுத்தும் ஒரு அற்புத வண்ணக்காட்சி - அழகு, மனதை வருடும் இசை, தொழும் தேவ தூதர்கள், அன்பு, அரவணைப்பு, வாக்குறுதி, நம்பிக்கை..., இன்னும் அமையவிருக்கும் எதிர்கால வாழ்க்கைக்கு நமக்கு வாக்குறுதியாக்கப்பட்ட அனைத்தும்.

அறிந்து கொள்ளுங்கள்: கிறிஸ்மஸ் என்பது வாக்குறுதி. அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படாத ஒரு வாக்குறுதியாகும்.
கிறிஸ்மஸ் என்னும் பண்டிகையில், நாம் விரும்பும் அனைத்தும் இடம் பெற முடியாது. அது ஒரு விடுமுறை தினம் மட்டுமே. கிறிஸ்மஸ் உங்கள் வீட்டிற்கு நல்லிணக்கத்தைக் கொண்டு வர முடியாது. கிறிஸ்மஸ் பூமியில் அமைதியை ஏற்படுத்த முடியாது. கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கொண்டு வர முடியாது.

ஆனால், கிறிஸ்து தாமே இவற்றையும், இதற்கு மேலே பலவற்றையும் செய்ய முடியும். நம் உள்ளத்தின் ஆழத்தில் இதற்காகவே ஏங்குகிறோம்.

~ கிறிஸ்மஸ் அல்ல, கிறிஸதுவே.
~ மகிழ்ச்சி அல்ல, மேசியாவே.
~ நல்லெண்ணம் அல்ல, கர்த்தரே.
~ பரிசுகள் அல்ல, அவரது பிரசன்னமே.

இதில் ஏதாவது, அல்லது ஏதேனும் ஒன்று குறைவு பட்டாலும், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் கர்த்தர் ஒரு போதும் மாறாதவர்.
இதுவே நான் விரும்பும் கிறிஸ்மஸ் - இயேசு கிறிஸ்து.

பதிப்புரிமை © 2011அறுவடை ஊழியங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வேத வசனங்கள், புதிய கிங் ஜேம்ஸ் பதிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை © 1982 தாமஸ் நெல்சன், இன்க். அனுமதி பெற்றுப் பயன்படுத்தப்பட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

வேதவசனங்கள்

நாள் 15நாள் 17

இந்த திட்டத்தைப் பற்றி

Christmas Encouragement By Greg Laurie

இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக க்ரெக் லாரியுடன் கூடிய அறுவடை அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.harvest.org

சம்பந்தப்பட்ட திட்டங்கள்