கிரெக் லாரியின் கிறிஸ்துமஸ் ஊக்குவிப்புமாதிரி
சத்திரத்தில் இடமில்லை
இன்று நாம் நவீனத் தொழில்நுட்பத்தின் நாட்களில் வாழ்கிறோம். தொலைக் காட்சி, இணையம், குரல் அழைப்புகள், டிவிடி ரெக்கார்டர்கள் மற்றும் கேமரா தொலைப்பேசிகள் இருப்பதால் நாம் எந்தவொரு நிகழ்வையும் தவறவிடுவதில்லை. இந்த அழகிய பொம்மை உபகரணங்கள், நாம் ஒரு தொலைப்பேசி அழைப்பைக் கூடத் தவற விடாமல் பார்த்துக் கொள்கிறது. ஆனாலும், அவைகளே நாம் விடுமுறைக் காலத்தை உண்மையாக அனுபவிக்கக் கூடாததற்குக் காரணமாகவும் இருக்க முடியும்.
பாருங்கள், கொஞ்சம் யோசித்துப் பார்ப்பதற்குள், கிறிஸ்மஸ் உங்கள் கண்களுக்கு முன்பாக சட்டெனக் கடந்து சென்றுவிடும்!. கிழித்து எறியப்பட்ட அட்டைப் பெட்டிகள் குவியலாக இருக்க, "ஓ, நான் மிகவும் மும்முரமாக ஷாப்பிங் செய்தேன், அந்த சந்திப்பு, இந்த நிகழ்ச்சி எனக் கலந்துகொள்வதில், கிறிஸ்மஸின் மையப் புள்ளியை உண்மையில் தவறவிட்டு விட்டேன் என வருந்தக் கூடும்.
பெரும்பாலான மக்கள், தங்களது முதல் கிறிஸ்மஸை முறையாக அனுசரிக்கவில்லை என்பதை அறிவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சில அடி தூரத்தில் என்ன நிகழ்கிறது என்பதைக் கவனிக்காமல், அவர்கள் வழக்கம் போல் தங்களது வியாபாரத்தை மேற்கொண்டனர்.
லூக்கா 2ஆம் அதிகாரத்தில், கிறிஸ்மஸ் கொண்டாட நேரமில்லாத ஒரு விடுதிக் காப்பாளர் நமக்கு அறிமுகமாகிறார். இது நமக்கு நன்கு தெரிந்த கதை. யோசேப்பும், மரியாவும், தாங்கள் தங்குவதற்காக ஒரு அறையைத் தேடி, அந்த விடுதிக் காப்பாளரிடம் வந்தனர். ஆனால், அந்த விடுதி நிறைந்து இருந்ததால், அவர் அவர்களை மாட்டுத்தொழுவத்தில் தங்கும்படி அனுப்பிவிட்டார்.
அந்த இளம் கர்ப்பிணிப் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் அவர் கொடுத்த இடம், குளிர்ந்த, இருண்ட, ஈரமான மாட்டுத் தொழுவமாகும் - அது ஒரு இருளடைந்த குகையைப் போல இருந்திருக்கக் கூடும். கிறிஸ்மஸ் தன்னை நோக்கி வருவதை அவர் உணரவில்லை. அதற்குரிய நேரத்தைக் கூட ஒதுக்க முடியாத அளவுக்கு, அவர் மற்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
இன்றைக்கும் இப்படிப்பட்ட மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை முற்றிலும் எதிர்க்கவோ, அல்லது வெறுக்கவோ தேவையில்லை. அவர்கள் உலக காரியங்களில் மூழ்கி உள்ளனர். கர்த்தர் மற்றும் ஆவிக்குரிய தேவைகள் குறித்த கவலை அவர்களுக்குத் துளியும் இல்லை. அவர்களது சுக வாழ்விற்கான தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்வதில் அதிக கவனமாகவும், கருத்தாகவும் இருக்கின்றனர். இது வரப்போகும் மேசியாவுக்கு விடுதியில் இடம் ஒதுக்க முடியாத அளவுக்கு, வேலையில் மூழ்கியிருந்த அந்த விடுதிக் காப்பாளர் மும்முரமாகச் செயல்பட்டதைப் போல.
நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்: இந்த கிறிஸ்மஸில், உங்களது உள்ளத்தில் இயேசுவுக்கு இடம் கொடுத்தீர்களா? இல்லையென்றால், மீண்டும் கூடுதல் கவனம் செலுத்தி, கிறிஸ்துவுக்கு உங்களது உள்ளத்தைத் திறந்து இடம் கொடுங்கள். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது!
பதிப்புரிமை © 2011அறுவடை ஊழியங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வேத வசனங்கள், புதிய கிங் ஜேம்ஸ் பதிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை © 1982 தாமஸ் நெல்சன், இன்க். அனுமதி பெற்றுப் பயன்படுத்தப்பட்டது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த விடுமுறைக் காலத்தின் வேலைப்பளுவும், அழுத்தமும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸதுவின் பிறப்பின் மகிழ்ச்சி நிறைந்த, டிசம்பர் மாதத்தின் உண்மையான கொண்டாட்டத்தைப் பறித்துவிட அனுமதிக்காதீர்கள்! பாஸ்டர் கிரெக் லாரியின் சிறப்புக் கிறிஸ்மஸ் தியான வழிகாட்டுதலின் வழியாகத் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஓர் ஆண்டில் மிகவும் கொண்டாடப்படும் இந்த நேரத்தின் உண்மையான அர்த்தத்தை, அவர் மன ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறார். கிரெக் லாரி அவர்களது அறுவடை ஊழியங்கள்
More