உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்மாதிரி
நான் யாருக்கு அஞ்சுவேன்?
பிரதிபலித்தல்
கலகம் மற்றும் சீற்றத்தின் நடுவில், உங்கள் விழியை இயேசுவின் மேல் வையுங்கள். உங்களுக்காக அவர் போரிடுகிறார். இம்மானுவேல் அருகிலிருக்கிறார். குற்றச்சாட்டுகள் பறந்தாலும் எதிரி உங்கள் எண்ணங்களைத் தாக்கினாலும், மக்கள் உங்களை வெட்டி கிழே எறிய முயன்றாலும், உங்கள் பெயரை சேற்றில் இழுத்தடித்தாலும், சூழ்ச்சிகள் ஏவப்பட்டாலும் தீய கவர்ச்சி கர்ஜித்யாலும், உங்கள் சதை தோல்வியுற்றாலும், பழிவாங்க அலறினாலும் - உங்கள் நம்பிக்கை உங்களுக்காக போராடும் அவர் ஒருவரிடம் தான். தேவனின் அன்பிலும் அவருடைய வல்லமைமிக்க பெயரிலும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்
தியானம்
புயலின் மத்தியிலும் என்னை நம்புவதற்க்கு பயப்படாதீர்கள்
புயலின் மத்தியிலும் என்னை நம்புவதற்க்கு பயப்படாதீர்கள்,
நான் உன்னுடனே இருக்கிறேன்.
உங்கள் தேவையற்ற அச்சங்கள் அமைதியடைய நான் வருகிறேன்,
சோர்வுற்றவர்களே, பயம் வேண்டாம்.
பல்லவி
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்,
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்,
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்,
வழிகள் அனைத்திலும் உன்னுடன் இருக்கிறேன்.
உனது விருப்பம் போல்
நான் எப்போதுமே உன்னருகில் இல்லாததுபோல் தோன்றினாலும்;
ஆனால் அமைதியிலும் புயலிலும்,
உனது ஆபத்துக்கள் அனைத்தையும் நான் காண்கிறேன்.
பல்லவி
என்னுடைய வல்லமைமிகுந்த கையை நம்புவதற்கு பயப்படாதீர்கள்;
அதுவே இரட்சிப்பை கொண்டுவந்தது.
உனக்கு ஒரு கிரீடம் கொடுக்க,
உனக்கு உயிரைக் கொடுக்க மிகவும் துயருற்றேன்.
பல்லவி
J.W. ஹோவ், சரணங்கள் 1–3
ஜெபம்
பிதாவே, புயலின் நடுவில் நான் உங்கள் மீது நம்பிக்கை வைக்கிறேன். நீங்கள் எனக்காக போராடுகிறீர்கள், எனது எதிரிகள் அனைவரை விடவும் நீரே உயர்ந்தவர். இன்று நான் எதிர்கொள்ளும் எதுவும் உங்களை விட வல்லமை வாய்ந்த்தில்லை. நீரே என் கால்களுக்குக் கீழே திடமான ஆதாரம். என்னைச் சுற்றியுள்ளவர்களைச் சூழ்ந்தமைக்கு நன்றி. நீங்கள் என்னை காண்கிறீர்கள், உங்கள் அன்பினால் என்னைக் பாதுகாகின்றீர் என்பதை அறிந்து, என் எதிரிகளின் முன்னிலையில் எனக்கு சமாதானம் கொடுங்கள். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்!
More