உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்மாதிரி
ஏற்ற சமயம்
பிரதிபலிப்பு
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தேவ பிள்ளைகளுக்கு ஒரு இரட்சகர் வருவார் என்னும் வாக்குறுதியை தேவன் அளித்திருந்தார். இதை குறித்து ஒவ்வொரு நாளும் மக்கள் ஏங்கிக் கொண்டும், மீட்புக்காக ஜெபித்துக் கொண்டும் இருந்தனர். பின்னர் தக்க சமயத்தில், சரியான இடத்தில், சரியான நேரத்தில், இயேசு பிறந்தார். தேவன் நாம் நியமிக்கும் நேரத்தில் வரமாட்டார், அவர் எப்போதும் சரியான நேரத்தில் வருவார்.
நாம் எல்லோருமே எதற்காது காத்துக் கொண்டிருக்கிறோம், தேவன் நம்மை மறந்துவிட்டாரோ என்றெல்லாம் அடிக்கடி யோசித்திருப்போம். நமது காத்திருப்பில், கிறிஸ்துவின் பிறப்பு நம்மை ஊக்குவிக்கட்டும். தேவன் இன்னும் வரவில்லை என்பதால் (நீங்கள் பார்க்க முடிந்தவரை), அவர் உங்களை கைவிட்டுவிட்டார் என்று அர்த்தமில்லை. அவருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் வருடங்கள் ஒரு நாள் போலவே இருக்கிறது. இந்த நிமிடம் அவர் தனது மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும் வேலை செய்கிறார். சூழ்நிலைகள் மாறாக தோன்றினாலும், தேவன் தம்முடைய கால அட்டவணையில், உங்களுக்காக நீண்டகாலமாக நியமிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற குறித்த நாளில், வந்து அதை நிறைவேற்றுவார். நேரம் சரியாக இல்லை என மனம் தளர்ந்து விடாதீர்கள்.
அவர் மேல் நம்பிக்கை வைத்து காத்திருங்கள், பரலோகத்திலிருந்து இரங்கினவரும், நமக்காக சரியான நேரத்தில் வந்தவருமாகிய அவருக்கு நாம் அவர் நேசிக்கும் பிள்ளைகளும், விலையேறப்பெற்றவர்களுமாய் இருக்கிறோம்.
தியானம்
சந்தோஷத்தின் சத்தத்தைக் கேளுங்கள்
மீட்பர் வருகிறார்
நீண்ட காலமாக வருவேனென்று உறுதியளித்திருந்த மீட்பர் வருகிறார்;
எல்லாருடைய இருதயமும் சிங்காசனத்தை ஆயத்தம் பண்ணட்டும்,
எல்லா நாவுகளும் பாட்டும்.
பிசாசின் பாவம் பிடியில் இருக்கும்
நம்மை மீட்க வருகிறார்.
வெண்கள கதவுகளை உடைந்த,
இரும்பு தாழ்ப்பாள்களை முறிக்கிறார்.
அவர் தம்முடைய கிருபையினால்
இருதயம் நொருங்குண்டவர்களை கட்டவும்
காயங்கட்டவும் வருகிறார்
எளிமையானவர்களை இரட்சிக்க மேன்மைப்படுத்த வருகிறார்
பிலிப் டாட்ரிட்ஜ், 1702-1751
ஜெபம்
அப்பா பிதாவே, இந்த காத்திருப்பில் என்னை சந்தியும், எனது பார்வையில் எதுவும் முழுமையாக இல்லை என்றாலும் இன்னும் என் இதயத்தை அமைதிப்படுத்தி நீர் அருகில் இருப்பதை அறிய எனக்கு உதவும். நான் உமது திட்டங்கள் நல்லவை என்றும் உமது ஒரே குமாரனின் பிறப்பையும் நம்புகிறேன்.
ஆனால் சில நேரங்களில் என்னைச் சுற்றியுள்ள இடத்திற்கு அப்பால் பார்க்கிறேன். உம்மை நோக்கி பார்க்கும் இத்தருவாயில் என் நம்பிக்கையை புதுப்பியும். எதிர்பார்ப்புக்கான இந்த பருவத்தில் என் வாழ்க்கையில் நீரே மகிமைப்படும். ஆமென்.
*வீடியோவைப் பார்த்து தமிழ் துணைத் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்!
More