உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்மாதிரி
சலனமில்லாதிருங்கள்
இறைவனுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கையில் ஒரு சலனமற்ற சமயம்.
பிரதிபலித்தல்
அமைதியான தருணங்கள் மிகவும் அரிது மேலும் சலனமின்மையை கண்டறிவது கடினம், ஆனால் இன்றைய தினம் சில நிமிடங்கள் அமைதியாகவும் ஆழமாகவும் ஆண்டவரை கருத்தில் கொள்ளுங்கள். வாசிக்காமலும் படிக்காமலும் கவன சிதைவில்லாமலும் முயற்சி செய்யுங்கள்- இயேசுவின் நபரையும், அவர் உங்களுக்காக செய்த அனைத்தை பற்றியும் சலனமின்றி தியானியுங்கள. அவரது பிறப்பு, பாலபருவம் மற்றும் இருளான தளர்ந்த உலகின் மேல் ஒளி விடியலை பற்றி எண்ணுங்கள். அவரது இறப்பு தியாகம் மற்றும் வாழ்வின் வரத்தை உங்களுக்கு நீட்டித்ததையும் நினையுங்கள். அவரது உயிர்த்தெழுதல், கல்லறை மற்றும் இருளின் மேல் அவரது வல்லமை பற்றியும் தியானியுங்கள். அவருடைய திருமுன் பருகி சலனமின்றி அவரது திருமுகத்தை நாடுங்கள். அவர் வருகையில் நேரடியாக காணும் தினத்தை பற்றியும் நினையுங்கள்.
தியானம்
அவர் முன்னிலையில் ஒரு நொடி அமைதியாயிருங்கள். இயேசுவை பற்றி நினையுங்கள் மற்றும் அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்
வேண்டுதல்
பிதாவே, உங்களுக்காக நான் இங்கே காத்திருக்கிறேன். நிசபத்தில் என்னை எதிர் கொள்ளங்கள். இந்நொடியே என்னை சந்தியுங்கள். உமது புத்திரன் மற்றும் ஆவியின் மூலமாகவும் உள்ளும் என்னை நேர்கொள்ளுங்கள். ஆமேன்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்!
More