உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்மாதிரி
இயேசுவே நமது விருந்து
பிரதிபலித்தல்
இயேசு நமது தேவைகளை கொடுப்பவர் மட்டுமல்ல; இயேசுவே நமது தேவை. உங்களுடைய இருதயத்தை அவருக்காக படைத்தவர் அவரே. இவ்வுலகில் ஆதாயம் கொள்ள நாம் நகமும் சண்டையுமாக போராடினாலும், இயேசு இல்லாமல் ஒரு போதும் முழுமையான திருப்தி அடைய முடியாது
உங்கள் ஆழ்மனதில் வளர்ந்து வரும் ஆழத்தில் ஒரு அதிருப்தி – மக்களால், இன்பங்களால், கொண்டாட்ங்களால், பொருட்களால் மற்றும் சாதனைகளால் முழுமையாக திருப்தி செய்ய முடியாத ஒரு ஆவல் இருக்குமாயின் – நீங்கள் இயேசுவிற்காக படைக்கபட்டவர் என்ற கருத்திற்கு உங்கள் மனதை திறக்க வேண்டிய தினம் இன்றே. ஆனால் "சிறியவைகளை" விலகி அவரே உங்களின் "மேன்மையாக" இருக்க கேளுங்கள் இயேசு உங்களுக்கு போதுமானவர், மேலும் அவர் இங்கே உள்ளார்.
தியானம்
இம்மானுவேலே வாரும் வாருமே
இம்மானுவேலே வாரும் வாருமே,
மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்.
மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே!
இம்மானுவேலின் நாள் சமீபமே.
ஈசாயின் வேர்த் துளிரே வாருமே
பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே
பாதாள ஆழம் நின்று இரட்சியும்,
வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்.
மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே!
இம்மானுவேலின் நாள் சமீபமே.
லத்தீன், சி. 12 ஆம் நூற்றாண்டு
சால்டெரியோலம் கன்டினம் கத்தோலிக்கம், கோல்ன், 1710
ஜான் மேசன் நீல் அவர்களால் மொழி பெயர்கப்பட்டது. 1818-1866, மற்.
சரணங்கள் 1 & 4
ஜெபம்
பிதாவே, இந்த உலக மக்களிலும் விஷயங்களின் திருப்திக்காக நான் எவ்வளவு கடினமாகத் தேடினேன் என்பது உங்களுக்குத் மட்டுமே தெரியும். ஆனால் அவைகள் உடைந்தவை, நானும் உடைந்தவன்,. நீங்கள் மட்டுமே என் பசியுள்ள இருதயத்தை நிரப்ப முடியும். உங்களுடைய அன்பு மட்டுமே மற்றோருக்கு நிகரற்றது. நீங்கள் எப்போதும் மாறாதவர். எனது கண்களை இன்று திறவுங்கள். உமது செல்வத்தையும் மகிமையையும் எனக்குக் காட்டுங்கள். உம்மை மேலும் அறிய எனக்கு உதவுங்கள். எனக்கு முன் வைக்கப்பட்டுள்ள உங்களது விருந்தை காட்டுங்கள், அதில் எனது ஆனந்தத்தை உங்களிடம் காண்பேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்!
More