உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்மாதிரி

அடக்கம் அனைவருக்கும் நல்லது
பிரதிபலித்தல்
அரசருக்கேல்லாம் அரசர் இயேசு, அனாலும் தாழ்வான சேவகராகவே வந்தார். அடக்குமுடைமை நீங்கள் தாழ்ந்தவர் என எண்ணுவதில்லை, ஆனால் இயேசுவே உங்களை மேன்மை படுத்தினார் என்பதை மறவாதிருத்தல். எனவே, இயேசுவை போல் நீங்கள் எவ்வாறு மாறுவீர்கள்?
அடக்கமுடைமை இயேசுவுடன் இருப்பதால் விளையும் துணையின். அவருடன் நெருக்கமாக நடக்கும் எவரும் தம்மை பற்றி தேவையின்றி உயர்ந்து எண்ண மாட்டார்கள். இயேசுவால் நேசிக்கபடவும், அவருடன் உறவு கொள்ள அழைக்கபடுவதுமே நம்மை சரிநிலை படுத்தவும் அவருடைய அருளுள்ளத்தையும், அருட்கனிவையும் ஏற்க போதுமானது.
அடக்கமாய் இருக்க நீங்கள் பலவீனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. கடவுள் நம்பிக்கையுடன் வாழ உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்திருக்கிறார். செருக்குடையவர் உண்மையாய் ஒருபோதும் கடவுளின் பெயரை புகழ்ந்து உயர்த்த மாட்டார்கள். ஆனால் அவர் அடக்கமானவர்களை புதிய உயரத்திற்கு எழுப்புவார்.
தியானம் மற்றும் பிராத்தனை
ஒரு தனிப்பட்ட அடக்கம் பற்றிய இறைமுறையீட்டுப் பாசுரத்தொகுதி
இயேசுவே புகழாரத்திற்கு ஏங்காமல் என்னை விடுவியிங்கள்.
இயேசுவே, நன்மதிப்பிற்கு ஏங்காமல் என்னை விடுவியிங்கள்
இயேசுவே முன்மதிக்கு ஏங்காமல் என்னை விடுவியிங்கள்
இயேசுவே, கலந்துரைக்க ஏங்காமல் என்னை விடுவியிங்கள்.
இயேசுவே அங்கீகாரத்திற்கு ஏங்காமல் என்னை விடுவியிங்கள்.
இயேசுவே ஆறுதலுக்காகவும், தொல்லையின்மைக்கும் ஏங்காமல் என்னை விடுவியிங்கள். இயேசுவே அவமானபட அஞ்சாமல் என்னை விடுவியிங்கள்
இயேசுவே விமர்சனங்களுக்கு அஞ்சாமல் என்னை விடுவியிங்கள்.
இயேசுவே புறக்கணிப்பை அஞ்சாமல் என்னை விடுவியிங்கள்.
இயேசுவே என்னை மறந்துபோக அஞ்சாமல் என்னை விடுவியிங்கள்.
இயேசுவே தனிமைக்கு அஞ்சாமல் என்னை விடுவியிங்கள்.
இயேசுவே அவதியுறுவதற்கு அஞ்சாமல் என்னை விடுவியிங்கள்.
மற்றவர்கள் என்னை விடவும் நேசிக்கபட வேண்ட இயேசுவே எனக்கு அருட்கனிவு புரியுங்கள்
மற்றவர்கள் எனக்கு பதிலாக தேர்ந்தெடுக்கபட,
வேண்ட இயேசுவே எனக்கு அருட்கனிவு புரியுங்கள்.
மற்றவர்கள் பெற்றிடவும், நான் கவனிக்கப்படாமல் இருக்குமாறு,
வேண்ட இயேசுவே எனக்கு அருட்கனிவு புரியுங்கள்.
சாந்தமான, அடக்கமுடைய இயேசுவே எனது மனதையும் உம்முடையதை போன்றே ஆக்குங்கள்.
சாந்தமான, அடக்கமுடைய இயேசுவே என்னை உமது புனித ஆவியால் வலிமை படுத்துங்கள்.
சாந்தமான, அடக்கமுடைய இயேசுவே உமது வழியினை எமக்கு கற்றுக்கொடுங்கள்.
சாந்தமான, அடக்கமுடைய இயேசுவே,
எனது சுயமரியாதையை சற்றே ஒதுக்கி வைக்க உதவுங்கள்
மற்றொருடன் அன்புடன் ஒத்துழைக்க அறிந்து
உமது பிதாவின் வீட்டில் இருக்க சாத்தியமாக்குங்கள். ஆமேன்.
ரபேயலின் பிராத்தனையிலிருந்து தழுவபட்டது,
கார்டினல் மெரி டெல் வால், 1865‐1930
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்!
More