உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்மாதிரி

Waiting Here for You, An Advent Journey of Hope

7 ல் 2 நாள்

நாம் காத்திருக்கும் போது தேவன் செயல்படுகிறார்

பிரதிபலித்தல்

எதார்த்தம் என்னவென்றால் காத்திருப்பதை நாம் அனைவருமே வெறுக்கிறோம். உண்மையாக, பெரும்பாலும் நாம் இது மாதிரி எதாவதை தான் சொல்கிறோம், "இதற்கு இவ்வளவு நேரம் ஆகுமென்று என்னால் நம்பவே முடியவில்லை; என்னிடம் இல்லாத நேரத்தை இது செலவழிக்கிறது!" ஏனென்றால், காத்திருப்பது வீண் என்றே பலரும் கருதுகிறோம். ஆனால் நமது தேவனிடம் இவ்வாறில்லை.

நாம் காத்திருக்கும்போது தேவன் செயல்படுகிறார். அவர் என்ன செய்கிறார் என்பதை நீங்கள்பார்க்க முடியவில்லை என்றாலும், உங்கள் வாழ்க்கையில் அவரது நோக்கங்களை நிறைவேற்ற தேவன் பரலோகம் மற்றும் பூமியின் நிகழ்வுகளைத் எப்போதுமே திட்டமிட்டு செயல்படுத்துகிறார். அவருடைய வழுவில்லா நேசத்தை நம்புங்கள் - உங்களை புணர்விக்கவும், மீட்பதற்கும் பரலோகத்திலிருந்து ஒரு இரட்சகரை அனுப்ப அவரை தூண்டியது அந்த அன்பு தான். உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டங்கள் இடைமறிக்கப்படாது. தேவனுக்காக காத்திருத்தல் ஒரு போதும் வீணாகாது என்பதை உணர்ந்து, பொறுமையாக காத்திருங்கள்.

தியானம்

வாரும் வாஞ்சைப்பட்ட இயேசு

வாரும் வாஞ்சைப்பட்ட இயேசு
மீட்பராக வந்த நீர்;
பாரமான பாவக்கேடு
நீங்கச் செய்து தேற்றுவீர்,
இஸ்ரவேலின் சர்வ வல்ல,
மேசியாவாம் கர்த்தர் நீர்;
மாந்தர் யாரும் எதிர்பார்த்த,
பாவ நாசர் தேவரீர்.

ரட்சித்தாளப் பாரில் வந்த,
பிள்ளையான ராயரே,
என்றும் உம்மை அண்டிக் கொள்ள,
அருள் செய்யும் மீட்பரே.
நித்திய ஆவி எங்கள் நெஞ்சில்.

தங்கி ஆள அருளும்;;
உம்தன் புண்யத்தாலே விண்ணில்,
நாங்கள் வாழச் செய்திடும்.

சார்லஸ் வெஸ்லி, 1707–1788

ஜெபம்

பிதாவே, நான் உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன். என் மனமும் கைகளும் உங்களது நோக்கங்களுக்காகவும் என் வாழ்க்கைக்கான திட்டங்களுக்காகவும் திறந்திருக்கும். அபரிமிதமாக தேவைப்படும் பொறுமையை எனக்குக் கொடுங்கள், நான் காத்திருகையில் என்னை வழிநடத்துங்கள். எனது உண்ளெண்ணங்கள் அவ்விடத்தில் தற்போது இல்லாவிட்டாலும், இந்த நிமிடத்திலும் பாதுகாக்கவும், காக்கவும், ஆயத்தமாக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் என் சார்பாக நீங்கள் இயக்குகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். என்னைச் சுற்றி வீசும் சந்தேக கடுங்காற்றை எதிர்கொள்ள உங்களிடம் அடைக்கலம் கொள்ள எனக்கு கிருபை புரியுங்கள். என் இருதயத்தை உங்களிடம் நிலைநிறுத்துங்கள். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Waiting Here for You, An Advent Journey of Hope

வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்!

More

உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன் என்ற திட்டதை வழங்கியதிற்காக ஆசிரியர் லூயி ஜிக்லியோவுக்கு (பேஷன் பதிப்பகம்), எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.passionresources.com க்கு செல்லவும்