சங்கீதம் 27:1-6

சங்கீதம் 27:1-6 TAOVBSI

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன். கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 27:1-6

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27   - சகோதரன் சித்தார்த்தன் சங்கீதம் 27:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

4 நாட்களில்

காலையில் கண் விழிக்கும் போது - நேற்றைய தின கவலைகளைப் பார்க்கின்றீர்களா? அல்லது இன்றைய நாளின் – புதிய தேவ கிருபையை உற்று நோக்குகின்றீர்களா? ஒவ்வொருநாளும் நாம் நெருக்கத்திற்கா அல்லது விசுவாசத்திற்கா? எதற்கு முதலிடம் தருகிறோம். ”என்கையிலஒன்னும் இல்லை” என்பதை விட யாவும் தேவன் - அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற அறிவுடன் செயல்படுகின்றோமா? கர்த்தர் என் வெளிச்சம் – யாருக்குப் பயப்படுவேன் (சங்கீதம் 27:1) சொல்லிப்பாருங்கள் உங்கள் இருள், சந்தேகம் விலகி ஓடும். கர்த்தர் என் இரட்சிப்பு என்னும் போது உங்கள் நம்பிக்கையிழந்த சூழ்நிலை மாறி – பெலவீனத்தில் பெலன் உண்டாகும். இந்த சங்கீதம் தேவன் அவர் ஏதோ தூரத்தில் இருந்து நம்மை பார்த்துக்கொண்டு இருப்பவர் அல்ல- அவரே எனது கோட்டை. நிலையற்ற உலகில் எனது அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவே என்று யோசிக்கச் சொல்கிறது. நெருக்கத்திலே நாம் அவரை அழைக்கலாம் - வாங்க!

நம்மில் தேவனின் திட்டம் சங்கீதம் 27:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

நம்மில் தேவனின் திட்டம்

5 நாட்களில்

நம்மில் தேவனின் திட்டம் என்பது நாம் இழந்து போன தேவனின் பிள்ளைகள் என்ற முழுமையான நிலையை மீண்டும் பெறுவதாகும். தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு, தேவன் நம்மை உருவாக்கும் போதே நமக்கு தந்தருளின இயல்பான வலிமைகள், திறமைகள் இவற்றை உரிமைப் படுத்தி விசுவாசத்தில் செயல்படுவதற்கு வழி காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தேவனின் பரிபூரண சித்தத்துடன் இணைந்து தேவனுடைய அழியாத வாக்குறுதிகளில் நம்பிக்கை உடையவர்களாக விசுவாசத்துடன் தொடர்ந்து வாழ கிருபை பெற்றுக்கொள்கிறோம். நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நாம் ஆன்மீக உன்னத அந்தஸ்தை இழந்து விட்டோம். தேவன் நம் ஒவ்வொருவருக்காக திட்டம் பண்ணின வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையுடன் செல்லுவோம்.