மனதின் போர்களம்மாதிரி
மறைந்து கிடக்கும் தவறுகள்
நீண்ட காலமாக என்னுடைய கணவர் டேவும், நானும், சபையில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தோம். சபையில் மற்ற விசுவாசிகளிடம் சிரித்த முகத்துடன் நன்றாக பழகி வந்தோம். நாங்கள்தான் ஒழுங்குள்ள முன்மாதிரியான தம்பதிகள் என்று அனைவரும் நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.
ஆனால், உண்மையில் நாங்கள் அப்படி இல்லை. எங்கள் குடும்ப வாழ்க்கையில் சண்டைகள் உண்டு. அது வீட்டுக்கு மட்டும் தான் தெரியும். சபைக்கு வந்த பிறகு எல்லா சண்டைகளையும் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைப்போம். எங்கள் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று எங்கள் நண்பர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று விரும்பினோம்.
டேவும் நானும் அடிக்கடி சண்டை போடுவோம். ஆனால், சண்டையை ஒரு வெளிப்படையான, மேலோட்டமான போராட்டம் என்று நாம் நினைக்கக்கூடாது. சண்டை என்பது மறைந்து கிடக்கும் கோபத்தின் விளைவு என்று ஓரளவுக்கு சொல்லலாம்.
பலமுறை எங்களுக்குள் முறுமுறுத்து, வாக்குவாதம் பண்ணினாலும், எங்களுக்குள் எல்லாம் சரியாக இருக்கிறது போல வேஷம் போடுவோம். எங்களிடத்திலுள்ள பிரச்சனையை, அப்பொழுது உணராதிருந்தோம். இருதயத்தின் நிறைவினால் நம்முடைய வாய் பேசும் என்று வேதம் சொல்லுகிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்ட வார்த்தைகளை மட்டும் கொஞ்சம் கவனித்திருந்தால், எங்கள் தவறை உணர்ந்திருப்போம். உதாரணமாக, பொது இடங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் எங்களைப்பற்றியே நகைச்சுவையாக கேலி செய்வோம். “அவளுக்கென்னவோ, அவள் தான் எஜமானி என்று நினைப்பு”, என்று டேவ் சொல்லுவார். “அவளுக்கு எது வேண்டுமோ, அதை அடைகிறவரைக்கும் என்னை விடவே மாட்டாள். ஜாய்ஸ் எல்லாரையும், எல்லாவற்றையும் ஆக்கிரமிக்க விரும்புகிறாள்”, என்று சொல்லி, அதன் பிறகு பேச்சை நிறுத்தி, என்னுடைய நெற்றியில் முத்தமிட்டு சிரிப்பார்.
“டேவுக்கு சரியாக காது கேட்கவில்லைபோலிருக்கு,” என்று நான் சொல்லுவேன். “குப்பையை கொட்டுவதற்கு நாலு தடவை சொல்ல வேண்டியதாயிருக்கிறது,” என்று சொல்லி, நான் சிரிப்பேன். இது, “ஜோக்” என்று எல்லோரும் நினைத்துக் கொள்ளவேண்டும், என்று நினைப்போம்.
எங்களுக்குள்ளே மறைந்து கிடந்த தவறுகள் யாருக்கும் தெரியாது. ஆனாலும், அவைகள் எங்களுக்குள்ளேயேதான் மறைந்து கிடந்தன. எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருபவர்கள், இன்னும் அதிக குழப்பங்களையும், கோபங்களையும் பார்ப்பார்கள். ஆனால், “விளையாட்டிற்காகத்தான் அப்படி செய்தோம்,” என்று சிரித்த முகத்துடன் சொல்லி விடுவோம். எங்களுக்குள்ளே பிரச்சனைகள் உண்டு என்று யார் நினைக்க முடியும்?
குடும்ப சூழ்நிலை கொடுமையாக இருக்கும்போது, அது பிசாசுக்கு ரொம்பவும் பிடிக்கும். பிரிவினையே அவனுடைய இலக்கு. துரதிர்ஷ்டவசமாக, அவன் அடிக்கடியாக இதில் வெற்றி பெறுகிறான். பிரச்சனைகளை நாம் நேரில் சந்திக்காமல், பிறர் முன் நாடகமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து சாத்தான் சந்தோஷப்படுகிறான்.
அந்தக்காரச் சக்தியின் தன்மை இது. இப்படி சண்டைபோடுவதின் விளைவுகளை டேவும் நானும் உணராதுபோயிருந்தால், சாத்தான் மென்மேலும் ஜெயித்திருப்பான்.
நாங்கள் எங்களையே ஆராய்ந்து, தேவனையும், எங்களிருவரையும் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டோம் என்று ஒத்துக்கொண்டோம். எங்கள் ஜோக்குகளும், சிரிப்புகளும், நாடகமும், “உள்ளாக மறைந்து கிடந்த வேதனையை மறைக்கும் ஒரு முகமூடியே,” என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது.
பிசாசின் தாக்குதல்களை ஜெயிக்கவேண்டுமானால், டேவும் நானும் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய வேண்டியதாயிருந்தது. மறைந்து கிடந்த தவறுகளை இருளிலிருந்து வெளிச்சத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
நம்மெல்லோருக்கும் இந்த செய்தி பொருந்தும். திறந்த மனதோடு வேதத்தின்படி, நம்முடைய குறைகளையும்,தவறுகளையும் கண்டுபிடிக்க வேண்டும். “நான் தவறு செய்துவிட்டேன்,” என்று நமக்கு சொல்லத் தெரிய வேண்டும்.
டேவும் நானும் கெட்டப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தோம். இன்னும் சொல்லப்போனால், சாத்தான் எங்கள் மனதை அதிகமாய் குழப்பியிருந்தான். ஒருவருக்கொருவர் இப்படி நடந்துகொண்டதினால், எங்களுடைய தவறை எங்களுக்கு சுட்டிக்காட்ட உதவி தேவைப்பட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் எங்களுக்கு உதவினார்.
நாங்கள் எங்கள் குடும்ப சூழ்நிலையை சமாதானமும், மகிழ்ச்சியுமுள்ளதாக மாற்றும்படிக்கு, தேவனுடைய வார்த்தையை அதிகமாக படித்தோம். பரிசுத்த ஆவியானவரும் எங்களைப் பெலப்படுத்தினார். இப்போது பொது இடங்களிலும், தனி இடங்களிலும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்துகொள்ளுகிறோம்.
கடைசியில், சாத்தானுடைய பொய்களுக்கு செவிக்கொடுக்க நிறுத்தி விட்டோம். ஒரு காலத்தில் எங்கள் மனதில் கிடந்த சாத்தானின் அரண்களை, ஆவிக்குரிய போராயுதங்களினாலும், தேவனுடைய வசனத்தினாலும், துதியினாலும், ஜெபத்தினாலும், பெரிய வெற்றியை அனுபவித்து வருகிறோம்.
அன்பின் இயேசுவே, கட்டுண்டவர்களை விடுதலையாக்கும்படி நீர் வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சாத்தான் தான் என்னைத் தாக்குகிறான் என்றும்... அவனிடத்திலிருந்து ஜெபத்தினாலும், உம்முடைய வார்த்தை எனும் ஆயுதத்தை பயன்படுத்தியும் நான் விடுதலையை அனுபவிக்க, எனக்கு உதவினபடியால் உமக்கு நன்றி. இப்பொழுதும், எப்பொழுதும் நான் விடுதலையோடு நிலைத்திருக்க ஜெபிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/