மனதின் போர்களம்மாதிரி
நாம் நினைத்துப் பார்க்கையில்...
அநேக வருஷங்களுக்கு முன்பாக, ஒரு விலையேறப்பெற்ற பாடத்தை நான் கற்றுக்கொண்டேன்: நாம் எதை நோக்கிப்பார்க்கிறோமோ, நாம் அதைப்போலவே ஆகிவிடுவோம். இந்த எளிய சொற்கள் எனக்கு ஒருமிகப்பெரிய கருத்தை புரிந்துகொள்ள வைத்தது. நம்முடைய பெலத்தையும், கவனத்தையும் எவைகளின் மேல் வைக்கிறோமோ, அவைகளே, நம்மை நடத்த ஆரம்பித்து விடும். இது வேறு வார்த்தையில் சொன்னால், “மனம் போகிற பாதையில் தான், மனிதன் பின் தொடருவான்!”
ஐஸ்கிரீமை பற்றி நினைத்து விட்டால், கொஞ்ச நேரத்தில் என் காரில் ஐஸ்கிரீம் வாங்கப் போய் விடுகிறேன். என்னுடைய மனது, என் விருப்பத்தையும், உணர்ச்சியையும் தூண்டிவிடுகிறபடியால், அதற்கு இசைந்து கொடுத்துச் செல்ல ஆரம்பிக்கிறேன்.
எதிர்மறையான காரியங்களையே நினைத்துக் கொண்டிருப் போமானால், நாம் எதிர்மறையான மக்களாகி விடுவோம். நம்முடைய பேச்சு மற்றும் எல்லாமே எதிர்மறையாகி விடுகிறது. சீக்கிரத்தில் மகிழ்ச்சியை இழந்தவர்களாய், பரிதாபமாக வாழுகிறோம். இவையெல்லாம் நம்முடைய நினைவுகளில் ஆரம்பித்தன.
நீங்கள் சிந்திக்கிற காரியத்தினாலேயே, ஒருவேளை நீங்கள் பிரச்சனையில் இருக்கலாம். நீங்கள் எதை சிந்திக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கும்படி, நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்!
ஒருவேளை, எதினால் நாம் சோர்ந்து போய், வேதனையோடு இருக்கிறோம் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தால், எதிர்மறையான சிந்தனைகளினாலேயே இப்படி இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்து விடும். இவைகள் தான் அதைரியம், சோர்வு மற்றும் கவலையை கொண்டு வருகின்றன.
சரியானவைகளை நினைக்கத் தீர்மானிக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் தவறானவைகளையோ அல்லது சரியானவைகளையோ நாம் நினைக்க முடியும். மற்றவர்களிடம் உள்ள தவறுகளை நினைத்து வருந்த முடியும். நன்மைகளையும் நினைத்து தியானிக்க முடியும். சரியானவைகளை விசுவாசிக்கும் போது, நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாயும், சமாதானமாயும் இருக்கும்.
அன்புள்ள கணவர், பிள்ளைகள் என்று எனக்கு ஒரு அருமையான வாழ்க்கை உண்டு, உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி அருமையான ஊழியத்தில் தேவன் பயன்படுத்தும்படி நான் சிலாக்கியம் பெற்றிருக்கிறேன். ஆனாலும், என் வாழ்க்கை இன்னும் பூரணப்படவில்லை. ஒரு காலத்தில் பிசாசு செய்தது போல எதிர்மறையான சிந்தனைகளையே நான் நினைத்துக் கொண்டிருந்தேனேயானால்... நான் தோல்வியடைந்திருப்பேன்.
என் வாழ்க்கையில் நடந்த எல்லா நன்மைகளுக்காகவும், தேவனுடைய கிருபையை நோக்கிப் பார்த்து, நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னிடத்தில் இல்லாதவைகளை நான் நினைத்துப் பார்க்க விரும்ப மாட்டேன்.
“வாழ்க்கைப் பயணத்தில் உன் இலக்கு எதுவாக இருந்தாலும் உன் மனது எல்லாம் “வடையின்” மீது இருக்கவேண்டும், அதின் நடுவிலுள்ள “ஓட்டையில்” இருக்கக்கூடாது...” என்று ஒரு பழைய நண்பர் சுட்டிக்காட்டுவார். அநேகர் இல்லாதவைகளிலும், தவறானவைகளிலும் தான் கவனம் செலுத்துகிறார்கள்.
இவைகளிலெல்லாம், நம்முடைய சிந்தனைகள்தான் பெரும்பாலும் நம்முடைய முடிவை தீர்மானிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன. நம்முடைய சிந்தனைகளின் அடிப்படையில்தான் நாம் சந்தோஷமாயிருக்க முடியும். நீதிமொழிகள் 23:7 எனக்கு மிகவும் பிடித்த வசனம். சிந்தனைகளும் மெய்யானவை. அவைகள், நம் மனதிலிருந்து வெளிவரும் வெறும் வார்த்தைகள் அல்ல. எனவே, நாம் மனதில் எதை சிந்திக்க இடம் கொடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். நம்முடைய மனது ஒரு யுத்தக்களம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நம்முடைய எதிராளியானவன் எப்படியாவது மனதை பயன்படுத்தி நம்மை பிடிக்க முயற்சிப்பான்.
ஒருநாள், எங்களுடைய கூட்டத்திற்கு ஒருவர் வந்தார். ஆபாசமானவைகளைப் பார்ப்பதிலிருந்து விடுதலை பெற விரும்பினார். இன்டர்நெட்டில் அவர் தற்செயலாக இழிவான புகைப்படங்களை பார்க்க நேரிட்டது. அடுத்த நாள் அலுவலகத்தில் தன்னுடன் வேலை செய்பவரிடத்தில், “அதையெல்லாம் யார் பார்ப்பார்கள்?” என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்.
அதே இரவு, மீண்டும் அதே படங்களைப் பார்த்தார். அதைத் தொடர்ந்து பல இரவுகள் தன்னுடைய குடும்பதிற்கு தெரியாமல் இரகசியமாக அதை செய்து வந்தார். “இந்த சின்ன விஷயம் யாரை பாதிக்க முடியும்,” என்பது அவருடைய கருத்து.
எந்த அளவுக்கு அதிகமாய் அந்த புகைப்படங்களைப் பார்த்தாரோ, அந்த அளவுக்கு அதிகமாக பெண்களை, பொருட்களை போல நினைக்க ஆரம்பித்தார். தன்னுடைய இச்சைகளுக்கேற்ற பொருட்களாக. “உங்களுக்கு என்ன ஆயிற்று? உங்கள் மனப்போக்கை மாற்றுகிறீர்களா? அல்லது நான் உங்களை விட்டு போய் விடட்டுமா?” என்று ஒரு நாள் அவருடைய மனைவி கேட்டாள்.
அவருடைய வாழ்க்கை கீழ்நோக்கி சென்றுக்கொண்டே இருந்தபடியால், கடைசியில் ஜெபித்துவிட்டு அவர் சொன்ன காரியம், “ஒரு சில ஆபாச புகைப்படங்களைப் பார்க்கத் துவங்கினதால், இந்த அளவுக்கு அடிமையாகிவிடுவேன் என்று நான் நினைக்கவில்லை,” என்றார்.
வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், முற்போக்கான வாழ்க்கையை விரும்பி, பிற்போக்கான சிந்தனைகளுடன் நாம் இருக்க முடியாது. நம்முடைய நினைவுகளும், நோக்கங்களுமே நம்முடைய முடிவை தீர்மானிக்கின்றன.
நம்முடைய இரட்சகரும் நண்பருமான இயேசு, முற்போக்கான, அழகான, ஆரோக்கியமான சிந்தனைகளால், நம்முடைய மனது நிறைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எந்த அளவுக்கு அதிகமாக நாம் இவைகளையே நினைத்துக்கொண்டிருக்கிறோமோ, அந்த அளவுக்கு எளிதாக நாம் சாத்தானுடைய தாக்குதல்களை முறியடிப்போம்.
பொறுமையுள்ள அன்பின் தேவனே, உமக்கு பிரியமில்லாத காரியங்களில் நான் நினைவாய் இருந்தபடியால், என்னை மன்னியும். நல்ல, தூய்மையான நினைவுகளால் என் மனதை நிறைக்க, எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/