மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 11 நாள்

விட்டுக்கொடுக்காதே

“இருபத்து மூன்று வருஷங்களாக, நான் ஒரு விசுவாசியாகத்தான் இருக்கிறேன்,” என்று செரில் சொன்னாள். “நான் இரட்சிக்கப்பட்ட நாளில் எப்படியிருந்தேனோ, அதே போலத்தான் இன்றும் பெலவீனமாகவே இருக்கிறேன். எந்த ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை. எனக்கு எதுவும் புரியவில்லை,” என்று தன் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட அவள் சொன்னாள். “எது சரி என்று எனக்கு தெரிந்திருந்தாலும், நான் அதைச்செய்வதில்லை. சில நேரங்களில், வேண்டுமென்றே மட்டமான, அன்பற்ற காரியங்களை நான் செய்து விடுகிறேன். நான் எப்படிப்பட்ட விசுவாசி?”

“ஒருவேளை, ஒரு வளருகிற விசுவாசி”, என்று நான் சொன்னேன்.

“வளருவதா? நான் சொன்னதை நீங்கள் கேட்டீர்களா”? என செரிலின் முகம் திடுக்கிட்டது.

“ஆம், நான் கேட்டேன். நீ வளராவிட்டால், உன் தோல்விகளைப் பற்றி புலம்ப மாட்டாய்; இருக்கிற ஆவிக்குரிய நிலையிலேயே திருப்தியாகி, உன்னையே மேன்மை பாராட்டி இருப்பாய்”.

“ஆனால், நான் அதைரியப்பட்டு, அநேகமுறை கர்த்தரை விட்டு விலகியிருக்கிறேனே”!

நீ சொன்னது சரிதான் என்று நான் செரிலிடம் சொன்னேன். நாமும் நிறைய நேரங்களில் அப்படித்தான் இருக்கிறோம். நம்மில் எவரும் பூரணரல்ல. நாம் சற்று கவனமாக இல்லாவிட்டால், பிசாசானவன் நம்முடைய பெலவீனத்தையும், நாம் எவைகளையெல்லாம் செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்ட நாம் இடமளித்து விடுவோம். அப்பொழுது, நாம் எளிதாக வேதனைப்பட்டு, விட்டுக்கொடுத்து விடுகிறோம்.

ஆனால், ஆவியின் வழியோ அப்படியல்ல. நாம் நம்முடைய வாழ்க்கையை எப்படி கெடுத்துப் போட்டிருந்தாலும், தேவன் நம்மை விட்டு விடாமல், ஆவியானவர் மூலம் நம்மை தொடர்ந்து எச்சரிக்கிறார் உந்தித் தள்ளுகிறார்.

நாம் வாழ்க்கையில் எவைகளையெல்லாம் செய்யாமலேயே இருக்கிறோம், எவ்வளவு மோசமாக இருக்கிறோம் என்றே எப்பொழுதும் யோசித்துக் கொண்டிருந்தால், நம்முடைய மனதின் போராட்டத்தில், பிசாசானவன் முன்னேறி விட வழி வகுக்கிறவர்களாய் நாம் இருப்போம்.

செரில் குழப்பம் நிறைந்தவளாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் பிசாசை எதிர்த்து, அவளுடைய மனதின் போராட்டங்களிலிருந்து விடுபட முடியும்.

மாபெரும் வெற்றிக்குப் பிறகு தான் பரிசுத்தமும், வெற்றியுமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை அடைய முடியும் என்று செரில் நினைத்தாள். ஆம் மிகப்பெரிய வெற்றிகள் இருப்பது உண்மைதான். ஆனாலும், வெற்றிகள் பெரும்பாலும் கொஞ்சங்கொஞ்சமாகவே வருபவை. நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் மெதுவாக முன்னேறுவதால், நாம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்பதை பலமுறை தெரியாமல் இருந்து விடுகிறோம்.

இப்படிக் கஷ்டப்படுகிற செரிலுக்கும், அவளைப் போன்ற மற்ற விசுவாசிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை நாம் கவனிக்கவேண்டும். “நாம் தளர்ந்துப் போகாதிருப்போமானால்...” என்று பவுல் சொல்லுகிறார். ஒரு மொழிபெயர்ப்பில் “இருதயத்தில் தொய்ந்து போகவேண்டாம்,” என்று சொல்லுகிறது. அதாவது, “விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து முன்னேறுங்கள்,” என்று அவர் சொல்லுகிறார்.

வாழ்க்கை ஒரு போராட்டமாயிருப்பதினால், பிசாசு நம்மை தோற்கடித்து, அழிக்கத்தீர்மானமாக இருக்கிறான். நாம் போராட அவசியமே இல்லை என்ற நிலையை அடையவே முடியாது! ஆகிலும், இது நம்முடைய போராட்டம் மட்டுமல்ல. இயேசு நம்முடன் இருப்பது மட்டுமின்றி, அவர் நமக்காகவும் இருக்கிறார். நம்மை ஊக்குவித்து முன்னேற வைக்கும் படிக்கு அவர் நமக்கு பக்கபலமாகவும், நம்முடைய அருகில் இருக்கிறார்.

தான் தோல்வியடைந்த நேரங்களை மட்டும் தான், செரில் நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் நானோ, அவள் வெற்றியடைந்த காலங்களை அவளுக்கு நினைப்பூட்டினேன். “பிசாசு உன்னை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான் என்று நீ நினைக்கிறாய், ஆனால் அது உண்மையல்ல. நீ தோல்வியடைந்திருந்தாலும், வெற்றியையும் பெற்றிருக்கிறாயே. ஆகவே நீ முன்னேறி இருக்கிறாய்”.

“விட்டு விடாதே, விட்டுக்கொடுக்காதே.” இந்த செய்திதான் நமக்கு தேவை. “...பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னை பேர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். நீ தண்ணீர்களை கடக்கும் போது, நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளை கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜூவாலை உன் பேரில் பற்றாது (ஏசாயா 43:1-2).

இது தேவனுடைய வாக்குத்தத்தம். நம்முடைய பிரச்சனை களையும், போராட்டங்களையும் முழுவதுமாக எடுத்து விடுவேன் என்று தேவன் வாக்களியாமல், நீ அவைகளின் ஊடே கடந்து சென்றாலும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். “பயப்படாதே” என்று சொல்லுகிறார். இந்த வார்த்தையைத்தான் நாம் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். தேவன் நம்மோடிருப்பதால், நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. தேவன் நம்மோடிருக்கும்போது, நாம் கவலைப்பட என்ன இருக்கிறது?


தேவனே, என் தோல்விகளுக்கு மத்தியிலும் நீர் என்னோடு இருந்து “விட்டுக்கொடுக்காதே” என்று என்னை உற்சாகப்படுத்துகிறீர். உமது உதவியோடு நான் ஜெயிக்க முடியும் என்பதை எப்பொழுதும் நான் நினைவில் கொள்ள எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/