மனதின் போர்களம்மாதிரி
குற்றம் சாட்டுகிற விளையாட்டு
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு நகைச்சுவைக்காரருக்கு மிகவும் பிடித்ததும், அவர் வலியுறுத்தி சொன்னதுமான வாக்கியம், “பிசாசு என்னை செய்ய வைத்தான்,” என்பதாகும். இதைக் கேட்டவர்கள் எல்லாம் ஆரவாரம் செய்வார்கள். ஜனங்கள் ஏன் அவ்வளவு அதிகமாக சிரித்தார்கள்? அது நிஜமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினதினாலேயா? அல்லது, தங்களுடைய செயல்களுக்கு தாங்களே பொறுப்பேற்காமல், உதறி தள்ளி, வெளியில் இருக்கும் ஒரு சக்தியை குற்றம் சாட்டுகிற படியினாலேயா?
நாம் செய்த செயல்களுக்காக எப்பொழுதும் வேறு யாரையாவது, எதையாவது குற்றம் சாட்டுவது மிகவும் எளிது. “என் தந்தை என்னிடத்தில் அன்பாக பேசினதில்லை,” “என் அண்ணன் என்னை தவறாக நடத்தினான்”. “நான் பழைய கிழிந்த ஆடைகளை அணிந்ததால், அருகில் வசிப்பவர்கள் என்னை துரத்தி விட்டார்கள்”. “நான் ஏழ்மையில் வளர்ந்தபடியால், இப்போதும் என் சம்பளம் வந்தவுடன், போய் விடுகிறது,” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.
இவைகளெல்லாம் உண்மையாக இருக்கலாம். ஏன் கஷ்டப்படுகிறோம் என்று இவைகள் விவரிக்கின்றன. ஜனங்கள் இப்படியெல்லாம் வேதனையில் வாழ்கிறார்களே என்று நினைத்தாலே கவலையாகத்தான் உள்ளது.
ஆனாலும் நம்முடைய சுபாவங்களுக்காக, மற்றவர்களையோ அல்லது சூழ்நிலைகளையோ குற்றம் சாட்டுவதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாம் கட்டப்பட்டு கிடப்பதற்கு அவைகளைச் சாக்கு போக்குகளாக பயன்படுத்தக்கூடாது. கிறிஸ்து நம்மை விடுதலையாக்கும்படி வந்தார். சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்தாலும், நம் எல்லோருக்குமே சோதனைகள் நேரிடுகிறது என்று பவுல் தெளிவாக கூறியுள்ளதை, தலைப்பு வசனத்தில், நாம் பார்க்கிறோம். ஆனால் சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், தப்பித்துக்கொள்ளும்படியான வழியை கர்த்தர் நிச்சயமாக வாக்களிக்கிறார். தப்பிக்கும் வழி, கொடுக்கப்பட்டுள்ளது. நாம் தான் அதை பயன்படுத்த வேண்டும்.
தீ பிடித்துக்கொண்ட ஒரு ஓட்டலை, செய்தியாளர், காலை செய்திகளில் காண்பித்தார். அதில் ஒரு பெண், பின் வாசலுக்கு மிக அருகில் இருந்தாலும், அசையாமல் அங்கேயே நின்றுகொண்டு இருந்தாள். இருபது அடி தூரத்திலேயே அவள் நின்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தாள். வெளியே தப்பிச் சென்ற அவளுடன் வேலை செய்பவர், திரும்பவும் உள்ளே வந்து அவளைப் பிடித்துக்கொண்டார். அவருடன் அவள் போராடினாள். ஆனால், எப்படியோ அவளை வெளியே இழுத்து வந்து விட்டார்.
தேவனுடைய பிள்ளைகளும் சில நேரம் இப்படித்தானே நடந்து கொள்ளுகின்றனர்? தப்பிப் பிழைக்கும் வழி நமக்கு தெரிந்திருந்தாலும், நாம் திகைத்து நின்று விடுகிறோம். அல்லது, நாம் செயலற்றுப் போனதற்கு வேறு யாரையாவது, எதையாவது குற்றம் சாட்டி விடுகிறோம். இல்லையென்றால் இதோ திரும்ப வந்து விட்டது. இதை எப்படி சமாளிக்கப்போகிறேனோ தெரியவில்லை. எப்போதும் விட்டுக்கொடுப்பது போல், இப்போதும் விட்டுக் கொடுத்துவிட வேண்டியதுதான். இப்போதைக்கு என்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைக்கிறோம்.
நாம் சொல்லும் பெரிய சாக்கு போக்கு, நம்முடைய “பெலவீனம்” தான். நாம் பெலவீனராக இருந்தாலும், தேவன் பெலமுள்ளவராக இருக்கிறார். அவர் நம்முடைய பெலனாக இருக்க விரும்புகிறார். அவரை நம்பி விசுவாசத்தினாலே எடுக்க வேண்டிய முயற்சிகளை நாம் எடுத்தால், நம்முடைய கட்டுகளிலிருந்து விடுதலை பெற, தேவன் உதவி செய்வார்.
நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், சாத்தான் அதைப் பயன்படுத்தி, நம்முடைய வாழ்க்கையில் அரண்களை கட்டுகிறான் என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய முடியாமையையோ, சிறு வயதிலிருந்து உள்ள பிரச்சனைகளையோ, அல்லது பன்னிரெண்டு வயதில் நாம் செய்த தவறையோ, எதையெல்லாம் பயன்படுத்த முடியுமோ, அவைகளையெல்லாம் உபயோகிப்பான். இனிமேலும் நம்மால் ஜெயிக்க முடியாது என்று நினைக்கிற அளவிற்கு - பிசாசு நம்முடைய மனதை குருடாக்கி விடுவான் என்றால் - நாம் தோற்றுப் போய்விட்டோம் என்று அர்த்தம். பிசாசின் அரண்களை உடைத்தெறியக்கூடிய ஆவிக்குரிய ஆயுதங்களை நமக்குத் தந்திருக்கும் ஒரு வெற்றியுள்ள தேவனுக்கு, நாம் ஊழியம் செய்கிறோம் என்பதை நாம் எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இன்னும் ஒரு விஷயம்: சோதனைகளுக்கு நாம் விட்டுக் கொடுத்துவிடும் போது, தேவனால் நமக்கு உதவி செய்ய முடியவில்லை என்று மறைமுகமாக நாம் சொல்வது போல் இல்லையா? நம்முடைய செயல்களுக்கும், நாம் செய்யாமல் விட்டவைகளுக்கும் நாமே முழுப்பொறுப்பையும் எடுக்க விரும்புவதில்லை. ஆனால், நாம் தான் பொறுப்பெடுக்க வேண்டும். நாம் நம்மைக் குறித்தே பரிதாபப்பட்டு, மற்றவர்களை பழிசுமத்தி, சூழ்நிலைகளை தவிர்த்துவிடுவதை நிறுத்த வேண்டும். உண்மையுள்ள தேவன், நம்மை குறித்த நேரத்தில் விடுவிப்பார் என்று விசுவாசிக்கவேண்டும். நம்முடைய பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லையே என்று நாம் பயந்து வாழத் தேவையில்லை. நம்மால் செய்ய முடியும் என்ற மனப்பான்மை இருக்கவேண்டும். “தேவையானதை செய்வேன், தேவைப்படும்போது செய்வேன்” என்று சொல்வது போல், சில நேரம், நாம் தேவனையே குற்றம் சாட்டி விடுகிறோம். ஆனாலும், “...நம்முடைய தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்”. ...உங்கள் திராணிக்கு மேலாக... நீங்கள் சோதிக்கப்படுவதற்கு இடங்கொடாமல்...” என்று முன்பு சொன்ன வசனங்களை நினைவில் கொள்ளவேண்டும்.
இது தான் கர்த்தருடைய வாக்குத்தத்தம். இதை செய்ய அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்மை உதவியற்றவராக, தனிமையில் தேவன் ஒரு போதும் விட்டுவிடமாட்டார். கூச்சல் போட்டு அங்கேயே நின்ற பெண்ணைப் போல் நாம் இருக்கலாம். அல்லது இதோ தப்பிக்கும் வழி! தேவனே உமக்கு ஸ்தோத்திரம்! என்றும் சொல்லி தப்பிக்கலாம்.
நம்முடைய பிரச்சனைகள் தனிப்பட்டவைகள், பெரும்பாலும் நம் சிந்தனைகளையும், மனநிலைகளையும் கொண்ட உள்ளானவைகள். ஆனால் விளைவுகளோ வெளியரங்கமாயிருக்கும். எனவே, நாம் நம்முடைய மனதை இயேசுவில் பதித்து, அவருடைய நடத்துதலுக்கு செவி சாய்த்தால், தப்பிக்கொள்ளும்படியான போக்கை நாம்...எப்போதும்...தெரிந்துக் கொள்ள முடியும்.
பிதாவாகிய தேவனே, நான் செய்த தவறுகளுக்காக, உம்மையும், மற்றவர்களையும், என் சூழ்நிலைகளையும் குற்றம் சாட்டி வந்த படியால் என்னை மன்னியும். என்னுடைய ஒவ்வொரு சோதனைகளிலும் நீர் தான் தப்பிக்கும் வழியை உண்டு பண்ணுகிறவர். என்னுடைய மனதிலிருக்கும் பிசாசின் அரண்களை முறியடிக்க உம்மையே நான் நம்புகிறேன். இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/