மனதின் போர்களம்மாதிரி
ஆவியின் வல்லமை
“நான் ஒன்றுமேயில்லை,” என்று என் நண்பர் கேரி சொன்னார். “மேலும், தேவன் கோடிக்கணக்கான மக்களை கவனிக்கும் வேலையில் இருக்கிறார், அதிலும் ஒரு சிலரது பிரச்சனையோடு ஒப்பிடும்போது, என்னுடைய பிரச்சனைகள் மிகவும் சிறியவை”.
அவருடைய வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. தேவனுக்கு கோடிக்கணக்கான மக்களை கவனிக்க வேண்டிய வேலை இருக்கிறது உண்மை தான்; ஆனால், அனைவரையுமே ஒரே நேரத்தில் கவனிக்க அவரால் முடியும்.
கேரி முக்கியமான ஒன்றை தவறவிட்டு விட்டார். அதாவது, நாம் தேவனிடம் உதவி கேட்க வேண்டும் என்பது தேவனுடைய விருப்பமாய் இருக்கிறது. அதுவும், நாம் அடிக்கடி அவரை கேட்க வேண்டும் என்று விரும்புகிறார். சாத்தான் நம்முடைய மனதை தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருந்தால், நாம் வேறு எந்த விதத்தில் நம்முடைய மனதை நாமே பலப்படுத்திக்கொள்ள முடியும்? நாம் சாத்தானை எதிர்த்து போராடினாலும்...தேவனை நோக்கி என்னை பெலப்படுத்தும், எனக்கு உதவி செய்யும் என்று கதறுகிறோமே; அதுவே, நம்முடைய பெரிய ஆயுதமாயிருக்கிறது.
அநேக வேளையிலே, நாமே, இதை செய்துவிடமுடியும் என்றுதான் நினைக்கிறோம். சில விஷயங்களில் இது உண்மையாகவும் இருக்கலாம். நம் மனதில் பிசாசின் போராட்டங்களை எதிர்த்து நின்று, தொடர்ந்து வெற்றியை காணவேண்டும் என்றால், நம்முடைய பலமோ, சாமர்த்தியமோ மட்டும் வேலை செய்யாது. தாழ்மையோடு, பரிசுத்த ஆவியானவரை அணுகி, நம்மை பெலப்படுத்த சொல்லி அவரிடம் கேட்பதுதான் நமக்கு மிகவும் அவசியம்.
அநேகர், கர்த்தர் தங்களுடைய வாழ்க்கையில் எப்படி அன்போடு செயல்படுகிறார் என்பதை புரிந்துகொள்வதில்லையென்று நான் நினைக்கிறேன். தேவன் நம்மை ஒரு தகப்பனைப் போல் நேசிப்பதோடு மின்றி, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கரிசனையோடு, நம்மைக் கவனிக்கிறார். நம் பரமபிதா, இதன் நடுவில் நமக்கு உதவி செய்யவும் விரும்புகிறார். ஆனால், நாம் அவரிடம் கேட்க வேண்டும் என்று காத்திருக்கிறார். ஜெபத்தின் மூலம் நாம் இதை நடைபெற செய்ய வேண்டும். கர்த்தருடைய வார்த்தையும் இதைத்தான் சொல்லுகிறது, “நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்கு சித்திக்கிறதில்லை” (யாக்கோபு 4:2).
ஒருவேளை நாம் இப்படி நினைக்கலாம். தேவன் எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார். நாம் எதிர்நேர்க்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், கடினமான சூழ்நிலைகள் எல்லாம் அவருக்குத் தெரியும். நாம் அனைவருமே இவையெல்லாவற்றையும் எதிர்நோக்குகிறோம். நாமே இவைகளையெல்லாம் சமாளித்துவிட முடியும் என்று நாம் நினைக்கும் போது, தேவன் எதுவும் செய்யாதிருக்கிறார். ஆனால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமை என் வாழ்க்கையில் இப்போது கிரியை செய்யட்டும் என்று நாம் அவரை நோக்கி கேட்கும் வேளையில், அந்த நேரமே, அவர் வந்து நம்மை காப்பாற்ற ஆயத்தமாக இருக்கிறார்.
நாம் சரியாக சிந்திக்கும் போது தான், நம்முடைய வெற்றி ஆரம்பமாகும். தேவன் நம்மேல் கரிசனை உள்ளவர். அவர் நமக்காக செயல்பட விரும்புகிறார், நாம் எப்போது கூப்பிடுவோம் என்று காத்திருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். நாம் அவரை நோக்கி கூப்பிடும் போது, பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய பரிசுத்த ஆவியானவராலே நமக்கு ஜெயம் வரும் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம்.
உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். தேவனோடு நாம் கொண்டுள்ள நம்முடைய தனிப்பட்ட ஐக்கியம் என்பது, நாம் தினமும் ஜெபத்திலும் வேதம் வாசிப்பிலும் செலவிடும் நேரமேயாகும். தேவனும் இதைத்தான் விரும்புகிறார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் முதிர்ச்சியடைய, நமக்கு இது தேவை என்றும் விசுவாசிகளாகிய நாம் அறிவோம்.
ஒரு சமயம், என் வாழ்க்கையில் நான் சுயமாக ஒரு ஆவிக்குரிய ஒழுங்கை கடைப்பிடிக்க முயற்சித்தேன்; நான் தினமும் வேதத்தை வாசித்து ஜெபிக்க தீர்மானித்தேன். இரண்டு, மூன்று நாட்கள் வரை, இதை நான் நன்றாக செய்துகொண்டிருப்பேன். அதன் பிறகு, ஏதாவது குறுக்கிடும், என் குடும்பமோ, அல்லது சபையின் காரியமோ, என பெரும்பாலும் சிறுசிறு காரியங்களே தேவனோடுள்ள என் ஐக்கியத்தைக் கெடுத்துவிடும்.
ஒரு நாள், “உம்முடைய உதவி இல்லாமல், நான் உண்மையாகவே இதைச் செயல்படுத்த முடியாது,” என்று நான் தவிப்போடு தேவனை நோக்கி கதறினேன். அந்நேரமே பரிசுத்த ஆவியானவர் வந்து, எனக்கு இந்த விஷயத்தில் தேவையான ஒழுங்கைக் கொடுத்தார். நான் போராடி, வெறுத்துப் போய், என் மேல் கோபப்படுவதை தேவன் பார்த்துக் கொண்டேயிருப்பது போல் இருந்தது. ஆனால் நான் உண்மையாய் அவருடைய உதவியை நாடிய பொழுதுதான், பரிசுத்த ஆவியானவர் என் உதவிக்கு வந்தார். நாம் தேவனுடைய உதவியை நாடாததினாலே தான், நாம் தன்னேச்சையாக செயல்பட்டு, தேவையற்ற பிரச்சனைகளுக்குள் ஆளாகிறோம்.
நான் எதை நினைக்க வேண்டும் என்பதை, நானே தெரிந்துக் கொள்ள முடியும் என்று ஆவியானவருடைய உதவியோடு, நான் கற்றுக் கொள்ளுகிறேன் -ஆம் நான் இன்னும் கற்றுக்கொண்டுதான் வருகிறேன். நான் தேவனோடு ஒழுங்கான ஐக்கியம் கொள்ளாதவரை, எது ஆரோக்கியமான சிந்தனை என்றும், எது ஆரோக்கியமற்ற சிந்தனை என்றும் வித்தியாசம் தெரியாததால், பிசாசானவன் என் மனதில் நுழைந்து, என்னை பாடுபடுத்த, இடம் கொடுப்பது போல் ஆகிவிடும். தேவனுடைய வார்த்தையில், அதிகமான நேரத்தை நாம் செலவிடுவோம். அப்பொழுது, பிசாசு நம் மனதில் விதைக்க முயலும் ஒவ்வொரு பொய்யையும் நாம் இனம் கண்டுக்கொள்வோம்.
அன்புள்ள தேவனே, உம்மைக் கனப்படுத்தும் சிந்தனைகளை நான் சிந்திக்க விரும்புகிறேன். உம்மையே சுற்றிருக்கும் ஒரு மனதை நான் பெற விரும்புகிறேன். உம்மோடு தினமும் நேரம் செலவிடாவிட்டால் என்னால் இதைச் செய்ய முடியாது. பரிசுத்த ஆவியானவரே எனக்கு உதவி செய்யும். உமக்கு கீழ்ப்படியவும், எப்பொழுதும் உம்மோடு உறவுகொள்ள ஆவலுடன் இருக்கவும், எனக்கு உதவி செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/