மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 5 நாள்

சத்தியத்தை அறிதல்

மனதின் போர்களம் எனும் என்னுடைய புத்தகத்தில், நான் மேரியின் கணவரைக் குறித்தும், எழுதியிருக்கிறேன். அவர் ஒரு அமைதியான மனிதர். அவர் சிறுவனாக இருந்தபோது, அவருடைய தாயார் அவரை எப்போதும் திட்டிக்கொண்டேயிருப்பார்கள். அவருடன் விளையாடின சிறுவர்களும், அவரை பயமுறுத்திக்கொண்டே இருப்பார்கள். அவர் வாக்குவாதங்களை வெறுப்பார். மேரியின் பிடிவாதத்தை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒரு விதத்தில், ஜானும் தன்னுடைய மனைவியைப் போலவே, அவரைப் பொறுத்தவரையில், ஒரு கட்டுக்குள்தான் இருந்தார். இவர், அவளை குற்றஞ்சாட்டுவார். அவள் இவரைக் குற்றம் சாட்டுவாள் - இங்கும் சாத்தானுடைய தந்திரங்களை நாம் காண முடிகிறது.

யாரையும் எதிர்த்து நிற்பதில் எந்த பயனும் இல்லை என்பதில் ஜான் நிச்சயமுள்ளவராக இருந்தார். தான் எப்படியும் தோற்று போய்விடுவோம் என்று அவருக்குத் தெரியும். நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக சகிப்பதுதான் ஒரே வழி, என்று அவர் நினைத்தார்.

தேவன் தன்னை உண்மையாகவே நேசிக்கவில்லை - எனும் பிசாசினுடைய பொய்யையும் அவர் நம்பினார். தேவன் என்னை எப்படி நேசிக்க முடியும்? நான் தான் தகுதியில்லாதவனாயிற்றே என்று இவருக்கு ஓர் எண்ணம்! அவர் இப்படி நினைத்தபடியால் பிசாசின் பொய்களையே நம்பிக்கொண்டு வந்தார். மேலும், “இயேசுவை விசுவாசித்தால், இரட்சிக்கப்படுவீர்கள், என்று இயேசு உலகத்தாருக்கு சொன்னது போல் நான் உணர்ந்தேன். ஆனால், இந்த மாபெரும் திட்டத்தில் எனக்கும் பங்கு இருக்கக்கூடும் என்று நான் நினைத்தாலும், அன்புகூறப்படுவதற்கு நான் தகுதியில்லாதவன் என்றே உணர்ந்தேன்,” என்றான் ஜான்.

“நீ ஒன்றுமில்லை, நீ எதற்கும் உதவாதவன்,” என்று சொல்வது சாத்தானின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாகும். சத்துருவானவன், நீங்கள் மிகவும் மோசமானவர்கள், எதற்கும் தகுதியில்லாதவர்கள், என்று உங்கள் மனதிலே, நம்ப வைத்து விட்டால், அவன் உங்கள் மனதில் அரண்களைக் கட்ட துவங்கி விட்டான் என்று அர்த்தம்.

ஜான் ஒரு விசுவாசியாக இருந்தாலும், சத்துருவானவன் அவருடைய மனதை சிறைப்படுத்தியிருந்தான். தானும் தேவனுடைய பார்வையில் முக்கியமானவர் என்பதை ஜான் புரிந்துகொள்ள வேண்டியதாக இருந்தது. நீண்டகாலமாக அவர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை. அவர் நல்லவர், தகுதியானவர், தேவனுடைய பிள்ளை என்றெல்லாம் அவருடைய தாயார் அவரிடம் சொன்னதேயில்லை. நண்பர்களும் அவரை தைரியப்படுத்தினதும் இல்லை. மேரியுடன் திருமணமான சில ஆண்டுகளாகவே அவளும் இவரை குறை கூறியே வந்ததால், தான் ஒரு நம்பிக்கையிழந்த, தோல்வியடைந்தவர் என்கிற நினைப்பு அவருக்கு மேலும் அதிகமானது.

தேவன் தன்னில் அன்புகூறுகிறார் என்றும், பவுல், மேரி மற்றும் எல்லாரைப் போலவும் தேவனுடைய இராஜ்ஜியத்தில் இவரும் விலையேறப்பெற்றவர் என்றும் ஜான் புரிந்துகொள்ள வேண்டியதாயிருந்தது. இயேசு ஜானுடன் இருப்பதால், அவர் மேல் கரிசனையுள்ளவராகவும் இருக்கிறார். ஆனாலும், தன்னுடைய மனதில் பிசாசு கட்டியிருக்கும் அரண்களை உடைத்து, தனது போராட்டத்தை ஜெயிக்க, ஜான் சத்தியத்தை அறிந்திருப்பது அவசியம். “...நீங்கள் என் உபதேசத்தில் நிலைத் திருந்தால், மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,” என்று இயேசு சொன்னார் (யோவான் 8:31). ஜான் தேவனுடைய வார்த்தையை படித்து ஜெபத்துடன் தியானித்து வருகிறார். வேத வசனங்களை தன்னுடைய வாழ்க்கையில் செயல்படுத்தி, இயேசு சொல்லியிருக்கிற விதமாகவே அவைகள் கிரியை செய்வதையும் அவர் கண்டு வருகிறார். அனுபவமே, அநேக வேளைகளில், அற்புத ஆசிரியர்! தேவனுடைய வார்த்தை வல்லமையினால் நிறைந்திருந்து, சாத்தான் நம்முடைய மனதில் கட்டியுள்ள அரண்களையெல்லாம் தகர்த்தெறிந்துவிடும் என்று வேத வசனங்கள் மூலமும், அனுபவரீதியாகவும் நான் கற்றிருக்கிறேன்.

போராயுதங்கள் உங்களுக்கு உண்டென்றும், உங்களால் அவைகளை பயன்படுத்தக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிந்து கொண்டால் தான், நீங்கள் விடுதலையுடன் இருக்க முடியும். சாத்தானை எதிர்த்து, அவனை பொய்யனென்று அழைக்க நீங்கள் கற்றுக்கொண்டால், உங்கள் வாழ்க்கையில் வெளிப்படையான ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் பார்க்க முடியும்.


பரலோக தேவனே, நான் அன்புகூறப்படுவதை உணராமல் போனாலும், நீர் என்னில் அன்புகூறுகிறீர் என்றும், உம்முடைய பார்வையில் நான் முக்கியமானவன் என்றும் எனக்கு நினைவுபடுத்தும். மற்ற விசுவாசிகளைப் போலவே, நானும் உமக்கு முக்கியமானவன் என்றும், மற்றவர்களை நேசிப்பது போலவே, நீர் என்னையும் நேசிக்கிறீர் என்றும் கற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு நன்றி. ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/