மனதின் போர்களம்மாதிரி
பிசாசானவனின் பொய்கள்
பிசாசு பொய் சொல்லக்கூடியவன். மேலும், அவனுக்கு உண்மையை பேசவே தெரியாது.
பல விசுவாசிகளுக்கு இது நன்றாகத் தெரியும். ஆனாலும், அவனுடைய பொல்லாத வஞ்சனைகளை கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். எந்த காரணமுமின்றி, மனதிலிருந்து சில நேரம் பொய் சொல்லிவிடுகிறோம். சில நேரம், சாத்தான் மற்றவர்கள் மூலம் பேசுவான். நம்மைக் குற்றஞ்சாட்டி, பாதிக்கக்கூடிய காரியங்களை அவர்கள் மனதில் போட்டு, அதை நாம் கேட்கிற விதமாக அவர்களை பேச வைப்பான். அப்படிக் கேட்டதை, நாம் கவனித்து, ஏற்றுக்கொண்டால், நம்முடைய சத்துருவுக்கு ரொம்பவும் சந்தோஷம். நீண்ட நேரம் இந்த பொய்யான விவரங்களையே நாம் கவனித்துக்கொண்டிருந்தால், பிறகு நாம் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உண்மையில்லாத, சாத்தானுடைய வஞ்சனைகளையே கவனித்துக்கொண்டிருப்பதை நாம் தவிர்த்து; இந்த சூழ்நிலையில் இயேசு என்ன செய்தார் என்பதைப் பார்த்து, அவருடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும். நாற்பது நாட்கள் உபவாசித்த பின்பு, வனாந்திரத்தில் சாத்தான் அவரை மூன்று முறை சோதித்தான். ஒவ்வொரு முறையும் தேவனுடைய வார்த்தையில் இப்படி “எழுதியிருக்கிறதே” என்று அறிக்கை செய்து, இயேசு பிசாசை ஜெயித்தார். அவன் அவரை விட்டு ஓடிப்போனதில் ஆச்சரியமில்லையே! (மத்.4:1-11). ஒவ்வொரு முறையும் சாத்தான் உங்களிடத்தில் பொய் சொல்லும் போது, தேவனுடைய வார்த்தையின், சத்தியங்களை நன்கு கற்றறிந்தவர்களாய், வேத வசனங்களை அவனுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். பிசாசினிடத்தில் எதிர்த்துப் பேச நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
அநேகருக்கு எப்படி தேவனுடைய வார்த்தையை பயன்படுத்தி சாத்தானுடைய பொய்களை ஜெயிப்பது என்று தெரிவதில்லை. அவன் சொல்வதை நாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை பலர் - விசுவாசிகளும் கூட - புரிந்துகொள்வதில்லை. எதிர்மறையான, தவறான சிந்தனைகளால், பிசாசானவன் தங்கள் மனதைத் தாக்குகிறான் என்று உணருவதுமில்லை. பொய் சொல்லுவதே அவனுடைய சுபாவம். எல்லோரையும் அடிமைத்தனத்திற்குள் கொண்டுவர அவன் அலைகிறான்.
இப்படிப்பட்ட ஆவிக்குரிய யுத்தத்தில், நீங்கள் மாத்திரம் தனியாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டு உற்சாகமடையுங்கள். உங்கள் மனதை மட்டும் அவன் தாக்குவதில்லை. சாத்தான் எல்லோரையும் எதிர்க்கிறான். அவனுடைய லட்சியமே திருடுவதும், கொல்வதும், அழிப்பதும் தான். ஆனால் இயேசுவோ, நாம் ஜீவனைப் பெறவும், அதை நாம் பரிபூரணமாக அடையும்படிக்கு வந்தார் (யோவான் 10:10ஐ காண்க). கர்த்தர் நமக்கு தந்திருக்கும் போராயுதங்களை அறிந்துகொண்டு, அவைகளையெல்லாம் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துவைத்துக்கொள்வதின் மூலம்; நாம் ஜெயம் பெற முடியும். பிசாசானவன், நம்முடைய மனதில் கட்டியிருக்கும் அரண்களை நம்மால் உடைக்கமுடியும். நாம் சத்தியத்தை அறிந்து கொண்டால்; சாத்தானின் அரண்களிலிருந்து, அந்த சத்தியம் நம்மை விடுதலையாக்கிவிடும் (யோவான் 8:32ஐ காண்க).
ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரி தான் என்று பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட மேரியைக் குறித்து உதாரணமாகச் சொன்னேன். அவள் பெண்களையும் கூட பாதித்து, தனக்கு சாதகமாக நடத்தினாள். மேரி வேதாகமத்தை வாசித்து, அதிக ஜாக்கிரதையுடன் ஜெபித்த போது, பிசாசு தான் அவளை பலவந்தம் பண்ணியிருக்கிறான் என்பதைக் கற்றுக் கொண்டாள். இப்பொழுதோ, அவள் விடுதலையுடன் வாழ முடியும் என்பதை அறிந்திருக்கிறாள்.
தேவனோடுள்ள உறவில் மேரி முன்னேறி வருவதால், தன்னுடைய மனதின் போராட்டத்தை மேற்கொள்ள, தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். தேவனைப் பற்றியும், ஊக்கமாக ஜெபிப்பது எப்படி என்பதைப் பற்றியும் அவள் கற்று வருகிறாள்.
“இயேசு என்னுடைய நண்பராகிவிட்டார்,” என்றாள் மேரி. அவரை இரட்சகராக அறிந்து, ஆண்டவராக ஆராதித்து வந்தாலும், இது அவளுக்கு ஒரு புது வெளிப்பாடாக அமைந்தது. ஒரு நாள், (எபிரேயர் 2:18)ஐ ஒரு புதிய கண்ணோட்டத்தோடு வாசித்தாள். “ஆதலால், அவர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்”, என்று இது இயேசுவைக் குறித்துச் சொல்லுகிறது.
அந்த வேதப்பகுதி அவளுக்கு உயிருள்ளதாகத் தோன்றினபடியால், மேரி இயேசுவை தேவனாக கண்டது மட்டுமின்றி, சோதனை, பாடுகள் என்றால் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்கின்ற...தன்னுடைய நண்பராகவும் அவரைப் பார்க்கத் துவங்கினாள். “இயேசு சிலுவையில் மரித்தார் என்று எனக்குத் தெரியும். ஆனால், எனக்காக எல்லா வலிகளையும் சுமந்தார் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. என்னுடைய வேதனைகளையும், பிரச்சனைகளையும் அவர் புரிந்து கொள்ளுகிறார் என்று நான் உணர்ந்தபோது, அது எனக்கு ஒரு புதிய வெளிப்பாடாக இருந்தது”, என்றாள் மேரி.
எதிர்மறையான, இழிவான, அருவருப்பான சிந்தனைகள் தன்னுடைய மனதில் வரும்போதெல்லாம், அவைகளைத் தடுத்து நிறுத்தக் கற்று வருவதாக மேரி கூறுகிறாள். “இயேசு அப்படி பேசமாட்டார், இயேசு இப்படி குறைகூறி, குற்றம் சாட்டவும் மாட்டார். அப்படியென்றால் பிசாசு தான் என் மனதைத் தாக்குகிறான்’, என்றும் அவள் கண்டு வருகிறாள்.
மேரி எல்லா போராட்டங்களையும் ஜெயிக்கவில்லை, ஆனால், மிகப்பெரிய இந்த பொய்யனை எதிர்த்துப் போராடக் கற்றுக்கொண்டாள். ஒவ்வொரு போராட்டத்தையும் அவள் ஜெயிக்கும் போது, அடுத்தது இலகுவாகிவிடுகிறது.
சர்வவல்லமையுள்ள தேவனே, பிசாசின் பொய்களை, ஜெயிக்கக்கூடிய ஆயுதங்களை எனக்குத் தந்திருக்கின்ற படியால், உமக்கு நன்றி. இவைகளை எப்பொழுதும் சரியாக பயன்படுத்த எனக்கு உதவி செய்தருளும். என்னுடைய கஷ்டங்களிலும், போராட்டங்களிலும் என்னோடு, என்னுடைய நண்பராக நீர் இருப்பதால், இயேசுவே உமக்கு நன்றி. ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/