மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 51 நாள்

அவிசுவாசம் எனும் பாவம்!

நான் ஏற்கனவே சொன்னது போல; சந்தேகமானது, “தேவன் உண்மையாகவே சொன்னாரா...? தேவனுடைய வார்த்தையின் அர்த்தம் இது தானா...?” என்று கேள்விகளை எழுப்பும். சந்தேகம் என்பது, பிசாசு நம் மனதில் நுழையும் வாயிலாக இருக்கிறது. எளிய, சாதாரணமாகத் தோன்றும் அந்த கேள்விகள், நம்மைத் தாக்குவதற்கு பிசாசுக்கு போதுமானதாக உள்ளது.

“அவிசுவாசம்,” சந்தேகத்தை விட மோசமானது. சந்தேகம் கேள்வி களை எழுப்பினாலும், “அவிசுவாசமே” அதன் விளைவாகும். விசுவாசிகளின் வாழ்க்கையில் ஒரு கேள்வியை எழுப்பி, அதன் விளைவாக சந்தேகத்தை கொண்டு வரும் பிசாசின் தாக்குதல் மற்றும் படைமுயற்சிகளை, நான் கண்டிருக்கிறேன். ஏதேன் தோட்டத்தில், இந்த விதத்தில்தான் பாவம் மேற்கொள்ள ஆரம்பித்தது. சாத்தான் ஏவாளைப் பார்த்து, “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று சொன்னது உண்டோ?” என்று கேட்டான் (ஆதி 3:1). அதுதான் தந்திரம். சாத்தான் ஒருபோதும் தேவனுடன் சண்டைபோட முடியாது. வேதத்தை எதிர்த்து தர்க்கம் பண்ணவும் முடியாது. ஒரே ஒரு கேள்வியை எழுப்பிவிடுவான், நம்முடைய மனது மீதி காரியத்தை செய்து விடும்.

அவன் இப்படி எளிதாக கேள்வி கேட்கும் போது, உடனே நாம், “இல்லை, ஆண்டவர் அப்படி எதுவும் சொல்லவில்லை...” என்று கூறிவிடுகிறோம். நம்முடைய இந்த பிரதிபலிப்பை பிசாசு பயன்படுத்தி, நம் மனதில் தன் அரண்களை நிலைநாட்டி விடுவான். அங்கிருந்து இன்னும் கொஞ்சம் உங்களை நகர்த்தினால் போதும், நீங்கள் முழுவதும் அவிசுவாசத்தில் இறங்கிவிடுவீர்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, ஒரு காலத்தில் உண்மையோடு வாழ்ந்து, இப்பொழுது வழி தவறி போனவர்களிடத்தில் நான் பேசியிருக்கிறேன். பிசாசு அவர்கள் மனதில் சந்தேகம், அவிசுவாசம், இரண்டையும் விதைத்து, அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில், அவர்களை பின்தங்கி இருக்க செய்து விட்டான். அப்படிப்பட்ட ஒருவர், “நான் அந்த நாட்களில், எளிய, கபடற்றவனாக இருந்தேன். நான் கேட்ட காரியங்களை அப்படியே நம்பிவிடுவேன். ஆனால், இப்பொழுது அப்படி இருப்பதில்லை. எல்லாம் தெரிந்தவனாகிவிட்டேன்,” என்று என்னிடம் சொன்னார். பிசாசானவன் அவருடைய விசுவாசத்தை திருடி, அதன் மூலம் அவரின் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை இழக்க செய்து விட்டான்.

இந்தப் போராட்டம், நான் ஏற்கனவே சந்தித்து பழகின ஒன்றாகும். ஜாய்ஸ் மேயராகிய எனக்கு; எல்லாம் நன்றாக அமைந்திருக்கிறது, எனக்கு எந்தப் போராட்டமும் இல்லை என்று என்னுடைய ஊழியத்தைப் பார்த்து ஒரு சிலர் நினைக்கிறார்கள். நான் ஒரு காரியத்தை, உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எந்த ஒரு விசுவாசியும், போராட்டமில்லாத வாழ்க்கையை இந்த உலகில் வாழ முடியாது. நம்மை நாமே தற்காத்துக்கொள்ளாமல், ஒரு சிறிய இடம் கொடுத்தாலும்; பிசாசானவன், நமக்குப் பின்னால் நின்று அவனுடைய பொய்களை நம்முடைய செவிகளில் முணுமுணுக்கத் தொடங்கிவிடுவான்.

இதுதான் காரணமோ என்னவோ, ஆபிரகாமின் வாழ்க்கை இன்றும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. தேவனுடைய வார்த்தையை முழுவதுமாக அப்படியே நான் விசுவாசிக்க தீர்மானிக்கும்போது, எனக்கு போராட்டங்கள் வரும். அப்பொழுது நான், ரோமர் 4ஆம் அதிகாரத்தை திரும்ப வாசிப்பேன். அந்த தேவனுடைய மனுஷனின் முன்மாதிரி என்னை அதிரவைக்கும். இயற்கையாக பார்க்கும்போது, சூழ்நிலைகளெல்லாம் தேவனுடைய வாக்குதத்தத்திற்கு எதிர்மாறாக இருப்பதுபோல் இருந்தது. ஆபிரகாமின் அந்த வயதில், “எனக்கு, தேவன் ஒரு மகனை தரப்போகிறார்,” என்று சொன்னதும், ஆபிரகாமின் நண்பர்கள் அவனைப் பார்த்து நகைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். பேலியாளின் மக்கள் அவனை கேலி செய்திருந்தாலும், அவன் பரீட்சையில் உறுதியாக நின்றான். “அவன் விசுவாசத்தில் பலவீனமாயிருக்கவில்லை...”

தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்...தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப் படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான் (ரோமர் 4:19,20,21). இந்த பகுதி எனக்கு மிகவும் பிடிக்கும். 

என்னை பரிசுத்த ஆவியானவர் ஊழியத்திற்கு அழைத்தபோது, நான் உயர்த்தப்பட்டேன். அதே வேளையில், நான் தாழ்த்தவும் பட்டேன். என்னைக் கர்த்தர் அழைப்பதற்கு, “நான் யார்”? ஜாய்ஸ் மேயர் இல்லாமல், வேறு யாரை வேண்டுமானாலும் கர்த்தர் பயன்படுத்தலாமே என்பதற்கு நான் நூற்றுக்கணக்கான காரணங்களை யோசித்தேன். ஆனால், நான் சற்றும் சந்தேகப்படாமல், அவருடைய அழைப்பை அப்படியே, விசுவாசித்து ஏற்றுக்கொண்டேன்.

தேவன் என்னை அழைத்த பிறகும், சில மாதங்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல், எல்லாமே மெதுவாகத்தான் சென்றன. நான் எத்தனையோ தடவை ஆபிரகாமைக் குறித்தும், தேவனுடைய வாக்குத் தத்தத்தைக் குறித்தும் தியானித்தேன். ஆபிரகாம் ஒரு மனுஷனாக இருந்து, தடுமாறாமல், தேவனை அந்த அளவு விசுவாசிக்க முடியும் என்றால், ஏன் ஜாய்ஸ் மேயரால் முடியாது? எத்தனையோ போராட்டங்களை போராடி, முடிவில், தேவனுடைய கிருபையால் வெற்றியை பெற்றேன். ஒவ்வொரு முறையும் அப்படித்தான் - ஒரு புத்தம் புதிய போராட்டம், அதற்குப் பின் மகிழ்ச்சியான வெற்றி.


பிதாவாகிய தேவனே, ஆபிரகாமின் முன் மாதிரியான உதாரணத்திற்காக உமக்கு நன்றி. உம்மை முழுவதுமாக விசுவாசித்து, உம்முடைய வாக்குத்தத்தத்தைப் பிடித்து நிற்கவும், பிசாசு எதிர்நோக்கி வருவதை தள்ளி விடவும், உதவி செய்யும் என்று ஜெபிக்கிறேன் பிதாவே. ஆமென்.

  

வேதவசனங்கள்

நாள் 50நாள் 52

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/