மனதின் போர்களம்மாதிரி
அவிசுவாசத்தை தோற்கடிப்பது!
ஆவிக்குரிய போராட்டத்தைக் குறித்து, சில வேளைகளில் நாம் தவறான கருத்துக்களை, தெரியாமல் கொடுத்து விடுகிறோம். பிசாசானவன்தான் நம்முடைய எதிரி என்றும், அவனை நாம் தினமும் எதிர்த்து ஜெயம் பெறவேண்டும் என்றும் நமக்கு தெரிந்திருந்தாலும், அதுதான் நமக்கு எல்லாம் என்று நினைக்ககூடாது. விசுவாச வாழ்க்கை என்பது எப்பொழுதும் போராட்டம்தான் என்று இருந்தால், பிறகு ஒவ்வொரு நாளின், ஒவ்வொரு மணி நேரமும், நமக்கு சேர்வு நிறைந்ததாகவே இருக்கும்.
அப்படியிருந்தால், நாம் கொஞ்ச நேரங்கூட தளர்ந்து இருக்கலாமென்று நினைக்கவே முடியாது; ஒருவேளை அப்படி தளர்ந்து இருந்தால், பிசாசு உடனே திரும்பவும் வாலாட்ட ஆரம்பித்துவிடக்கூடும், என்ற இப்படிப்பட்ட அபிப்பிராயத்தை நான் உங்களுக்கு கொடுக்க விரும்பவில்லை. விசுவாச வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும், சமாதானமும் நிறைந்ததாகும். நாம் வாழும் நம்முடைய வாழ்க்கையின் மூலம், நாம் கர்த்தரை கனப் படுத்துவதால்; நமக்கு ஒரு மன நிறைவையும், இளைப்பாறுதலையும் அவர் தருகிறார்.
பேதுரு, விசுவாசிகளுக்கு எழுதும் போது, அவர்கள் எதிராளியாகிய பிசாசைக் குறித்து நாம் ஜாக்கிரதையாக விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். நாமும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால், இதை சொல்வதற்கு முன்பு, “அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்,” என்று அவர் எழுதுகிறார். இதை நாம் முதலில் செய்யும்போது, இது தேவனுடைய அளவில்லாத அன்பையும், நம் மேலுள்ள அவருடைய கரிசனையையும் நமக்கு நினைவு படுத்துகிறது.
இது நம்முடைய அஸ்திபாரத்திற்கு மிகவும் அவசியம். நமக்கு விசுவாசமே இல்லையென்று சொல்லிவிடமுடியாது. “தேவன் உன் மேல் கரிசனையுள்ளவராக இருந்தால், இந்த சோதனைகளை கடந்து செல்ல உன்னை அனுமதிப்பாரா? உன்னை தேவன் உண்மையாகவே நேசித்தால், உன்னை இப்படி நடத்துவாரா?” என்று பிசாசானவன், நம்முடைய விசுவாசத்தை அழிக்க பொய்களை கூறுவான்.
பிசாசு தன்னுடைய பொய்களை, கேள்விகளாக உங்கள் மேல் அள்ளி வீசி; ஆண்டவருக்கு உங்கள் மேல் அக்கறை இல்லை, கரிசனை இல்லை, அன்பு கிடையாது என்ற அவிசுவாசத்தின் சிறிய விதைகளை விதைப்பான். ஆனால், ஆபிரகாமைப் போலவும், மற்ற விசுவாச வீரர்களைப் போலவும், நாம் உறுதியாக இருக்கவேண்டும் என்பதையே தேவன் விரும்புகிறார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஊழியம் செய்யும்போது, நான் கற்றுக்கொண்டக் காரியம்; பயங்கரமான, எதிர்மறையான பிரச்சனைகள் மட்டும், நம்மை கர்த்தரிடத்திலிருந்து திருப்புவதில்லை. அந்த பிரச்சினைகள் நம்மை தாக்கும்போது, அதற்கு நாம் எப்படி பிரதிபலிக் கிறோமோ, அதுதான் வித்தியாசத்தை உண்டு பண்ணக்கூடியவை. மறுபடியுமாக, ஆபிரகாமைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். தேவன் அவனுக்கு ஒரு குமாரனை தருவேன் என்று வாக்குப்பண்ணினபோது, அவன் வயது சென்றவனாக இருந்தான். “இது எப்படி ஆகும்? நான் ஒரு பிள்ளைக்கு தகப்பனாகி, அதை வளர்க்க எனக்கு வயதாகிவிட்டதே,” என்று சொல்லாமல்; அதற்கு பதிலாக, “இது அற்புதம்! நான் இதை விசுவாசிக்கிறேன்,” என்று சொல்லியிருப்பான்.
பிரச்சனைகள், போராட்டங்கள், கஷ்டங்கள் எப்பொழுதும் போல் நம்முடைய வாழ்க்கையில் வரும்போது, பேதுருவின் வார்த்தைகளை கேட்டு, நம்முடைய கவலைகளை, பாரங்கள், கஷ்டங்கள் எல்லாவற்றையும் தேவனிடம் கொடுத்து விட தீர்மானிக்க வேண்டும். இரவு வேளை எவ்வளவு இருள் நிறைந்ததாக இருந்தாலும், சூழ்நிலைகள் பயங்கரமாக இருந்தாலும், தேவன் நம்மோடு அந்த சூழ்நிலைகளில் இருப்பதோடு மட்டுமல்லாமல, அவர் நம் மேல் அன்புள்ளவராகவும், கரிசனையுள்ளவராகவும், நம்முடைய தேவைகளை சந்திக்கிறவர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கடினமான சூழ்நிலையிலும், “விழித்திருப்பதுதான்” நம்முடைய வேலை. எல்லாம் நன்றாக இருக்கும்போது, நாம் தேவனை துதித்து, அவருடைய அன்பில் அகமகிழவேண்டும் என்று அவர் விரும்புவார். ஆனால், நம்முடைய சோர்வான, மகிழ்ச்சியற்ற நேரங்களில், பிசாசானவன் எப்படி நம்மை மடக்குவான், தோற்கடிக்க முனைவான் என்பதை மறந்து விடக்கூடாது.
இன்னுமொரு விஷயம். நமக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை, சோதனைகள் என்று ஒருவேளை நாம் வியக்கலாம். கர்த்தருடைய அநாதி தீர்மானம் உங்கள் வாழ்க்கையில் இருப்பதை, அவன் எப்படியோ இனம் கண்டு கொண்டு உங்களை குறிவைத்து தாக்க முயற்சிப்பான். நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாயிருக்க விரும்புகிறீர்களோ, அந்த அளவுக்கு பிசாசின் பொய்களையும், அவிசுவாசத்தைக் கொண்டுவரும் காரியங்களையும் எதிர்க்க வேண்டும்.
அன்புள்ள பரலோக பிதாவே, எதிராளியானவன் என்னை அடிக்கடி அவிசுவாசத்தினால் நிறைத்து என் மேலுள்ள உம்முடைய ஆழமான அன்பை மறக்கச் செய்கிறான். ஆனால், ஆபிரகாமைப் போல உம்முடைய வாக்குதத்த் தங்களை உறுதியாக பற்றிக்கொண்டு நிற்க விரும்புகிறேன். என்னோடு எப்பொழுதும் இருக்கிறேன் என்று சொல்லும் உம்முடைய வாக்குறுதிக்காகவும், அதனால் நான் அடையும் ஆறுதலுக்காகவும் உமக்கு நன்றி. ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/