மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 56 நாள்

சந்தேகம் நாம் தேர்ந்தெடுக்கும் ஒன்று

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிரோடே எழுந்த உடனே நடந்த சம்பவங்களை குறிக்கும் வசனங்கள்தான் மேலே கூறப்பட்டுள்ளவை. இதை நமக்கு கர்த்தர் கொடுத்த “பெரிய வேலை” அல்லது “பெரிய கட்டளை,” என்று நாம் அடிக்கடி குறிப்பிடுவோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, கலிலேயாவிலுள்ள ஒரு குறிப்பிட்ட மலையின்மேல் தன்னுடைய சீஷர்களுக்குத் தோன்றி, பிதாவாகிய தேவனால், அவருக்கு வானத்திலும், பூமியிலும், சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறதைச் சொல்லி; அதனால், நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்று கட்டளையிட்டார்.

சீஷர்கள் இயேசுவை கண்டவுடன், அவர் தான் என்று அறிந்த மாத்திரத்திலே, அவரை பணிந்துகொண்டார்கள் என்று மத்தேயு கூறுகிறார். ஆனால், வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த வசனத்தின் முடிவில் (வ.17), சிலரோ சந்தேகப்பட்டார்கள் என்று எழுதுகிறார்.

அது எப்படி ஆகும்? யூதாஸ் மரித்துவிட்டான். ஆனால் மற்றவர்கள் பின் நாட்களில், உலகமுழுதும் சென்று இயேசுவைப் பிரசித்தப் படுத்தியவர்கள் அல்லவா? அவர்களா சந்தேகித்தார்கள்? அவர்கள் எப்படி அப்படிப்பட்ட செயலைச் செய்ய முடியும்? அற்புதங்களை கண்ணாரக் கண்டவர்களாயிற்றே? சப்பாணி நடந்ததையும், குருடன் கண்கள் திறந்ததையும், பிசாசு பிடித்தவர்கள் சுகமடைந்ததையும், அவர்கள் பார்த்தார்களே? இயேசுவானவர் சிலுவையிலறையப்பட்டு, மரித்ததை காணவில்லையா? அவருடைய கரத்திலே, ஆணிகள் பாய்ந்த தழும்பை - இன்னும் கவனிக்க தவறிவிட்டார்களா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் - “ஆம்” என்ற பதிலைத்தான் கூறமுடியும். இருந்தும் - “சிலர் சந்தேகப்பட்டார்கள்,” என்று மத்தேயு சொல்லுகிறார். இயேசுவானவரால் விசேஷமாக தெரிந்துகொள்ளப்பட்டு, அவரை பின்பற்றிய சீஷர்கள், அவிசுவாசத்தினாலும், சந்தேகத்தினாலும் தடுமாறினார்கள்.

ஆகையால், அநேக இடங்களில், இயேசுவானவர் விசுவாசத்தை வலியுறுத்தி சீஷர்களுக்குக் கூறுவதில் ஆச்சரியமில்லை. சந்தேகப் படுகிற இந்த விசுவாசிகளை, ஏன் அவர் கடிந்துகொள்ளக்கூடாது? சந்தேகப்படக்கூடாது என்று, ஏன் அவர்களுக்கு அடிக்கடி வலியுறுத்தி சொல்லவேண்டும்? ஏனென்றால், மனுஷருடைய இருதயங்களை அவர் அறிந்திருக்கிறபடியால், அவர் அப்படியெல்லாம் கூறினார். 

இதற்கு முன்பு மத்தேயு, அத்திரமரத்தில் இலைகள் நிறைந்திருந்தும், கனிகள் இல்லாமல் இருந்ததை, இயேசு அதைக்கண்டதை குறித்து எழுதுகிறார். அத்திமரத்தில் வழக்கமாக இலைகள் தோன்றும் முன்பு, அல்லது இலைகள் தோன்றும்போதே, காய்களும் தோன்றி, கனியாக மாறும். அதனால், அந்த மரத்தில் இயேசு கனிகளை எதிர்பார்த்ததில் தவறில்லையே. “இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது,” என்றார் (மத்தேயு 21:19).

சீஷர்கள் அதைக் கண்டு; “இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய் பட்டுப்போயிற்று?” என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள் (வ.20).

இந்த அத்திமரத்தின் உவமையில் இயேசுவானவர் கொடுத்த பதிலும், விசுவாசத்தைக் குறித்தாகும். “நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாச முள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திதற்கு செய்தததை, நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொன்னாலும், அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (வ.21).

அவர் சொன்ன குறிப்பு இதுதான்: நாம் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அற்புதங்களை நாம் செய்ய முடியும். ஆபிரகாம் விசுவாசித்தான். அவன் உண்மையாய் இருந்ததினிமித்தம், கர்த்தர் அவனைக் கனப்படுத்தினார். விசுவாசம் என்பது, தேவன் தரும் ஒரு வரம். சந்தேகமோ, நாம் தெரிந்துகொள்ளும் ஒன்றாகும். தேவனுடைய வார்த்தைக்கு எதிர்மாறாக நம்முடைய மனதிலே தோன்றும் எண்ணங் களின் விளைவு தான் “சந்தேகம்”. அதனால்தான், நாம் தேவனுடைய வார்த்தையை அறிந்துகொள்வது, மிகவும். தேவனுடைய வார்த்தையை ஒழுங்காக அறிந்திருந்தால், பிசாசின் பொய்களை உடனுக்குடன் பகுத்தறிந்து செயல்பட முடியும். சந்தேகம் என்பது, நமக்கு எதிராக பிசாசு பிரயோகிக்கும் ஆயுதங்களின் கிடங்காக இருக்கிறது.

இந்த புத்தகம் முழுவதிலும் நாம் சிந்திக்கும் நம்முடைய சிந்தனை களை, நாமே எப்படி தேர்வு செய்யக் கூடியவர்களாயிருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியிருக்கிறேன். நம்முடைய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளவும், புறக்கணிக்கவும் தேர்வு செய்யவேண்டியது, நம்முடைய கரத்தில்தான் உள்ளது. நம்முடைய மனக்கதவை, சந்தேகம் வந்து தட்டும்போது, நாம் வரவேற்கவும் செய்யலாம்; அல்லது அமைதியாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் உதறியும் தள்ளலாம். தெரிந்து கொள்ளும் காரியம் நம்முடையது. நாம் விசுவாசிக்கவும் முடியும், சந்தேகப்படவும் முடியும். விசுவாசத்தின் பாதை, நம்மை தேவனுடைய ஆசீர்வாதங்களுக்குள்ளாக வழிநடத்தும்.


அன்பின் பிதாவே, சந்தேகத்திற்கு என் மனதில் இடமளித்து விட்டேன். அநேக தடவைகள் சாத்தான் என் மனதை, தன்னுடைய நினைவுகளால் அலைகழிக்க அனுமதித்து விட்டேன்; இவற்றை நான் அறிக்கையிடுகிறேன். என்னை மன்னியும். விசுவாசத்தினால் என் மனதை நிறைத்து, பொல்லாத சிந்தனைகளை என்னை விட்டு அகற்றும். உம்மை மாத்திரம் நான் விசுவாசிக்கிறபடியால், நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆமென்.

  

வேதவசனங்கள்

நாள் 55நாள் 57

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/