மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 55 நாள்

புயல்கள் ஏன்?

நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் புயல்களை நான் சிந்தித்துப் பார்த்தேன். “புயல்கள் ஏன்?” வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பிரச்சனைகளும் போராட்டங்களும் நமக்கு வருகிறது? கர்த்தருடைய பிள்ளைகள் ஏன் இவ்வளவுப் பாடுகளை கடந்து செல்ல வேண்டும்?

இந்த கேள்விகளைக் குறித்து நான் சிந்திக்கும்போது, சாத்தான்தான் நம்முடைய மனதில் இத்தகைய கேள்விகளை போடுகிறான் என்பதைப் புரிந்துகொண்டேன். தேவனுடைய நன்மைகளை சிந்திப்பதை விட்டு விட்டு நம்முடைய பிரச்சனைகளையே நாம் நோக்கிப் பார்க்க, இது பிசாசினுடைய முயற்சி என்று விளங்கிக்கொண்டேன். நாம் கேள்விகளை கேட்பதைப் பார்த்தால், நம்முடைய பிரச்சனைகளுக்கெல்லாம் தேவன்தான் காரணம் என்று அவர் மேல் பழிபோடுவது போல் இருக்கிறது. ஆனால், “ஏன் இப்படி” என்று தேவனிடம் கேள்விகள் கேட்பதை, தவறு என்று நான் நினைக்கவில்லை. சங்கீதக்காரன் நிச்சயமாக கேள்விக்கேட்க தயங்க வில்லை.

லாசரு மரித்த பிறகு, இயேசுவானவர் மரியாள், மார்த்தாளுடைய வீட்டிற்கு சென்ற சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன். லாசரு மரிக்கும் தருவாயில் இருந்தபொழுது, இயேசுவோ நான்கு நாள் கழித்துதான் வந்தார். மார்த்தாள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்,” என்றாள் (யோவான் 11:21). “இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வது எதுவோ,அதை தேவன் உமக்கு தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்,” என்றாள் (யோவான் 11:22).

அவள் இந்த வார்த்தைகளை உண்மையாகவே விசுவாசித்தாளா? இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்று இயேசு அவளிடம் சொன்னபோது, அதற்கு மார்த்தாள்: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்,” என்றாள் (வ. 23,24). இயேசு சொன்ன கருத்தை அவள் புரிந்துகொள்ளவில்லை.

நான் மார்த்தாளிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லவில்லை. அவர் சொன்னதை அவள் தவற விட்டாள். இயேசு வந்த போது, “நீர் ஏன் ஒன்றும் செய்யவில்லை,” என்று அவள் கேட்கவில்லை. அதற்கு பதிலாக, “நீர் இங்கே இருந்தீரானால் - என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.

இயேசுவானவர், லாசரு உயிர்த்தெழுந்திருப்பான் என்று சொன்ன போதும், அது அப்போதே நடக்கும் என்று நினைக்கவில்லை. அவள் அறிந்திருந்த, கடைசி நாளில் உயிர்த்தெழுந்திருக்கும் நிகழ்ச்சியை சொன்னாள். அப்போதே கர்த்தர் லாசருவை உயிரோட எழுப்பமுடியும், என்பதை அவள் புரிந்துகொள்ள தவறி விட்டாள்.

நாமும் கூட, அநேக நேரங்களில், மார்த்தாளைப் போல் தான் இருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். அப்படி நன்றாக இருக்காவிட்டால், நாம் “ஏன்” என்ற கேள்வியைத்தான் கேட்போம். ஆனால், நாம் என்ன அர்த்தத்தில் இந்தக் கேள்வியை கேட்கிறோம் என்றால், “ஆண்டவரே, நீர் என்னை உண்மையாகவே நேசித்தால், என் மேல் உமக்கு கரிசனை இருந்ததிருந்தால் இப்படிப்பட்ட காரியம் எனக்கு நடந்திருக்காது,” என்று கேட்போம்.

“ஏன்” என்ற கேள்வியைக் குறித்து சற்று சிந்திப்போம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், யாராவது ஒருவர் விபத்தில் இறந்து விட்டால், அந்த குடும்பத்தின் அங்கத்தினர்கள் கேட்கும் முதல் கேள்வி - ஏன்? ஏன் அவள்? ஏன் இப்பொழுது? ஏன் இந்த விபத்து?

தேவன் காரணத்தை விளக்குகிறார் என்று, ஒரு நிமிடம் இப்படியாக யோசித்து பாருங்கள். அந்த விளக்கமானது எதையாவது மாற்ற போகிறதா? நிச்சயமாக இல்லை. நமக்கு அன்பானவர் போனது போனது தான். அதன் வலி, வேதனை இன்னும் நமக்குள் பயங்கரமாக இருக்கத்தான் செய்கிறது. பின், அந்த விளக்கத்தின் மூலம் என்னதான் கற்றுக் கொண்டோம்?

விசுவாசிகள், பொதுவாக “ஏன்” என்ற கேள்வியை தேவனிடத்தில் உண்மையாகவே நேரிடையாகக் கேட்பதில்லை என்று, சமீப நாட்களில் நான் கற்றுக்கொண்டது, ஒரு வேளை நாம், “தேவனே, என்னில் அன்புகூருகிறீரா? என்னுடைய வேதனையான, கஷ்டமான சூழ்நிலைகளில் என்னை பார்த்துக்கொள்வீரா? என்னை என்னுடைய கஷ்டத்தில் தனியாக விட்டு விடமாட்டீர் இல்லையா?” நம்மை தேவன் கரிசனையோடு கவனிக்க மாட்டார் என்று பயப்படுவதினால் நாம் இப்படி விளக்கங்களை அவரிடம் கேட்கிறோமா?

அதற்கு பதிலாக, நாம் “கர்த்தராகிய தேவனே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். கெட்ட காரியங்கள் ஏன் நடக்கின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ளவோ, கிரகித்துக்கொள்ளவோ முடிவதில்லை. ஆனால், ஒன்றை நான் நிச்சயமாக அறிவேன். நீர் என் மேல் அன்பாயிருக்கிறீர், நீர் என்னோடு கூட எப்போதும் இருக்கிறீர்,” என்று அவரிடம் சொல்லவேண்டும்.


பரலோக பிதாவே,“ஏன்”என்ற கேள்விகளுக்கு, பதில்களை எதிர்பார்க்காமல், நீர் என்மேல் எவ்வளவு அன்பாயிருக்கிறீர் என்று கவனிக்க உதவி செய்யும். பிசாசானவன் என்னுடைய மனதை கஷ்டமான கேள்விகளால் நிறைக்கும்போது, உம்முடைய அன்பான அரவணைக்கும் கரத்தின் பாதுகாப்பை நான் உணரச்செய்யும். நீர் எனக்குச் செய்கிற எல்லா நன்மைகளுக்கும், உமக்கு நன்றியையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்த எனக்கு உதவிச் செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

நாள் 54நாள் 56

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/