மனதின் போர்களம்மாதிரி
ஆராதிக்கும் வேளை!
இந்த சம்பவத்தை நாம் இன்னும் கொஞ்சம் கவனித்துப் பார்ப்போம். பேதுரு விசுவாசித்து, இறங்கினான். அதன் பிறகு, சந்தேகத்தினால் நிறைந்தவனாகி மூழ்க ஆரம்பித்தான். அவனுடைய புத்தி, மனிதன் தண்ணீரின் மேல் நடக்கமுடியாது என்றது. எப்பொழுது அவன் மனம் ஆவிக்குரிய, இயற்கைக்கு அப்பாற்பட்ட சிந்தனையிலிருந்து திரும்பியதோ, அப்பொழுதே அவன் மூழ்க ஆரம்பித்தான்.
இயேசு ஏற்கனவே, “திடன் கொள்ளுங்கள், நான் தானே, பயப்படா திருங்கள்” என்று சொல்லியிருந்தார் (வ.27). இந்த வார்த்தைகள், இயேசுவின் பிரசன்னமும், வல்லமையும் அவர்களைப் பாதுகாக்க போதுமானது என்று நினைவுபடுத்தியது. இருந்தும், அந்த பனிரெண்டு பேரில் - ஒரே ஒருவன் தான், இந்த வார்த்தைககளின்படி செயல்பட்டான்.
பேதுரு ஒருவன்தான், தன் எஜமானரை நோக்கி தண்ணீரில் இறங்கி நடந்தான். ஆனால், பிறகு தடுமாறினான். இயேசுவின் பிரசன்னத்தில் நோக்கமாயிருப்பதை விட்டு விட்டு, பலத்த காற்றின்மேல் கவனம் வைத்தான். சில அடிகள்தான் இயேசுவிற்கும் அவனுக்கும் இருந்தது. ஆனால், அவரை சென்றடைவதற்குள் சந்தேகமும், அவிசுவாசமும் அவனை அழுத்தியது.
நான் அடிக்கடி சிந்தித்து, வியக்கும் காரியம், அவன் கால்கள் மெல்ல தண்ணீருக்குள் இறங்கியதா, அல்லது தண்ணீரில் நேரடியாக அப்படியே மூழ்கி விட்டானா என்று. வேதாகமம் நமக்கு இதைக்குறித்து சொல்லவில்லை. ஆனால், இயேசு எப்படி இந்த சூழ்நிலையில் நடந்துகொண்டார் என்று சொல்லுகிறது. அவர் உடனே கையை நீட்டி, அவனை பிடித்து காப்பாற்றினார்.
இதோடு இந்த சம்பவம் முடிந்து விடவில்லை. இயேசுவும், பேதுருவும் படகில் ஏறியதும், இன்னொரு அற்புதம் நடந்தது. காற்று அமர்ந்தது. இயேசுவானவர் நம்முடன் இருக்கும்போது, வாழ்க்கையில் புயல் வீசுவது நின்று விடும் என்று இதை ஆவிக்குரிய ரீதியில் அர்த்தப்படுத்துவது எளிது. அது உண்மைதான். ஆனால், இது எழுத்தின் படி உண்மையான காற்று, புயல். ஏதோ உவமையாக கூறப்பட்டு, ஆவிக்குரிய அர்த்தம் பொதிந்தது என்று சொல்வதல்ல. நிஜமாகவே காற்று அமர்ந்து, அமைதலாயிற்று.
காற்றடித்து அமைதலான பிறகு, என்ன நடந்தது என்பதை மத்தேயு குறிப்பாக எழுதுகிறார். பேதுரு, தன்னுடைய விசுவாசத்தைப் பயன் படுத்தினான். விசுவாசித்தான், அதை நிரூபித்தான். வேடிக்கை பார்த்த மற்ற சீஷர்களும், இயேசுவானவர் சொன்னதைக் கேட்டார்கள், ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை.
அவர்கள் பயத்தினால் உறைந்து போய், அசையாமல் உட்கார்ந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இயேசுவானவர் திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதேயுங்கள் என்று சொன்னதை கேட்டும் ஒன்றும் செய்யாமல், பேசாமல் இருந்தார்கள். ஒருவரும் அசையவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவும் இல்லை.
இந்த காற்று அமைதலான பிறகு, சீஷர்கள், இயேசுவைப் பணிந்து கொண்டார்கள். அவர்கள் கண்கூடாக கண்ட அற்புதத்தை பாருங்கள். காற்றடித்தது, புயல் வீசியது, இயேசு நடந்து அவர்களிடத்தில் வந்த கொண்டிருந்தார். அவர்கள் பயங்களை அமர்த்த முயன்று, “திடன் கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதேயுங்கள்,” என்று அவர் சொல்லியும் அவர்கள் நம்பாமல், பயந்தார்கள். பேதுரு தன்னுடைய விசுவாசத்தை செயல்படுத்துவதையும், இயேசு காற்றை அமர்த்தினதையும் கண்ட பிறகு தான், “மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன்” என்று அவர்களால் சொல்ல முடிந்தது. கடைசியிலாவது இந்த வார்த்தையை அவர்கள் சொன்னார்களே என்று நான் சந்தோஷப்படுகிறேன். அப்படியென்றால், இயேசுவின் செய்தி அவர்களுக்கும் எட்டியது என்றுதான் அர்த்தம். ஆனால் ஏன் இந்தத் தாமதம்? அவரைப் பணிந்து, அவருக்கு ஆராதனை செய்ய மனம் வருவதற்கு, அவர்களுக்கு அவ்வளவு ஆதாரம் தேவைப்படுகிறது?
உங்களுக்கும், இயேசுவின் அன்பின் பிரசன்னத்தைக் குறித்து இன்னும் எத்தனை சான்றுகள் தேவை?
அன்பின் பிதாவே, சில நேரங்களில், நானும் அந்த பயந்த சீஷர்களில் ஒருவனைப் போல, நான் விசுவாசிப்பதற்கு தடயங்களை தேடிக்கொண்டிருக்கிறேன். உம்மை தேவனுடைய குமாரன் என்று அறிக்கைச் செய்ய எத்தனை அற்புதங்களை இன்னும் நான் காணவேண்டும்? வாழ்க்கையில் வீசும் எல்லா புயல்கள் மத்தியிலும், பேதுருவைப் போல நானும் ஆயத்தமாக உம்முடன் நடப்பதற்கு எனக்கு உதவி செய்யும். என்னை நேசித்து, உற்சாகப்படுத்தி, உம்மை விசுவாசித்து உறுதியாய் பின்பற்ற எனக்கு உதவிச் செய்கிறபடியால் உமக்கு நன்றி. ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/