மனதின் போர்களம்மாதிரி
ஓய்வுநாளின் இளைப்பாறுதல்
பழைய ஏற்பாட்டின் கீழ் வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள், ஓய்வுநாளை ஒவ்வொரு வாரமும் ஆசரிக்கவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார். அவர்கள் வாரக் கடைசியில், வெள்ளி இரவில் இருந்து, சனிக்கிழமை இரவு வரை ஒன்றையும் செய்யக்கூடாது. அவர்கள் இளைப்பாறுவதற்கு அது, ஒரு அடையாளமாக இருந்தது. பழைய ஏற்பாடு முழுவதும் நாம் பார்க்கும்போது, தேவன், ஆறு நாட்களில் இந்த உலகம் முழுவதையும் சிருஷ்டித்தார், ஏழாவது நாள் ஓய்ந்திருந்தார் என்று வாசிக்கிறோம்.
எபிரெயருக்கு நிருபத்தை எழுதியவர், தேவனுடைய பிள்ளைகள் பிரவேசிக்கும் இளைப்பாறுதலைக் குறித்து, ஓய்வு நாளோடு சம்பந்தப் படுத்தி பேசுகிறார். 3ஆம் அதிகாரத்தில், இஸ்ரவேல் மக்கள் எப்படி விசுவாசியாதவர்களாயிருந்தார்கள் என்று சொல்லிவிட்டு, சங்கீதம் 95:11ஐ சுட்டிக்காட்டி, “என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்ப தில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன். சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம், உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடி நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள் (எபிரெயர் 3:11-12), என்று எழுதுகிறார்.
அந்நாட்களில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள், நாற்பது வருடமாக, தினமும் கர்த்தரின் கிரியைகளைக் கண்டார்கள். தினமும் தேவன் அவர்களுக்கு வானத்திலிருந்து மன்னாவையும், கன்மலையிலிருந்து தண்ணீரையும் குறைவில்லாமல் கொடுத்து போஷித்தார். அவர்களும் அதை மகிழ்ச்சியாய் அனுபவித்தார்கள். ஆனாலும், அவர்கள் கர்த்தரை விசுவாசியாமல் இருந்தார்கள். வாக்குத்தத்தம் மாறாத தாயிருக்கிறது. நாம் நம்முடைய கீழ்ப்படியாமையினாலும், அவிசுவாசத் தினாலும், அதை அடைய முடியாத ஆபத்து நமக்கு உண்டு.
“இளைப்பாறுதல்” என்று சொல்லும்போது, வேலை செய்வதை மட்டுமல்ல, அதைக்காட்டிலும் இன்னும் அதிகமான ஒன்றை நமக்கு எழுதுகிறார். நம்முடைய மனதை கஷ்டப்படுத்தும் காரியங்களை தள்ளி வைத்து விடவேண்டும். மற்றொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், தேவனுடைய சமாதானத்தை நாம் அனுபவிக்கத் தடையாக வரும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும், அதைத் தள்ளி வைத்து விடவேண்டும்.
இஸ்ரவேல் மக்கள், பத்து கற்பனைகளையும் மற்ற பிரமாணங்களையும் தினமும் வாசித்தும், கற்பனைகளைக் கைக்கொண்டதை உணர்ந்திருந் தாலும்; தேவன் அவர்களுக்கு என்ன சொல்லுகிறார் என்பதை புரியாதவர்களாய், அல்லது புரிந்தும் அதை விசுவாசியாதவர்களாய் வாழ்ந்திருப்பது, சுவாரஸ்யமானதாய் இருக்கிறது. ஏதோ அவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காக மட்டும், அவர்களை ஓய்வுநாளை கடைபிடிக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிடவில்லை. அதைவிட முக்கியமாக-அவர்களுடைய அன்றாட அலுவல்களை நிறுத்திவிட்டு; ஓய்வு நாளன்று இளைப்பாறி, அமைதியாக கர்த்தர் அவர்களுக்குக் கொடுக்கும் காரியங்களை சிந்திக்கவேண்டும் என்று விரும்பினார்.
எனக்கு அதிகம் பேரைத் தெரியும் - உங்களுக்கும் அப்படிப்பட்ட ஆட்கள் அதிகம் பேரை தெரியும் என்று நம்புகிறேன். வருஷம் முழுவதும், ஒரு நாள் கூட விடாமல் வேலை செய்பவர்கள். ஒரு நாள் விட்டாலும், பணத்தையோ அல்லது வேறு எதையோ இழந்துவிடுவது போல, தங்கள் குடும்பத்திற்கு போஷிக்க முடியாமல் போய்விடும் என்று நினைப்பவர்கள். ஒரு சிலர், வேலை என்று ஒன்று இருந்து சம்பாதித்தாலும், அதிகப்படியான வருமானத்திற்காக, பகுதி நேரமாக இரண்டு மூன்று வேலைகளை அலைந்து செய்வார்கள். அவர்கள் செய்யும் வேலைகளில் கிடைக்கும் சம்பளமே, போதுமானதாக இருக்கும். வேறு அதிகப்படியான வேலை களை அவர்கள் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. நிறையப் பணம் சேர்த்து விட்டால், நிம்மதியும், சந்தோஷமும் கிடைத்துவிடும் என்பது அவர்களது கணிப்பு.
சீக்கிரமாகவே, நிம்மதியும், சமாதானமும் இப்படியெல்லாம் வருவது இல்லை என்பதையும் கண்டுபிடித்து விடுவார்கள்.ஓய்வுநாளில் “இளைப்பாறுவது” என்பது, “நான் எல்லாவற்றையும் என் பொறுப்பில் வைத்திருக்கிறேன். என்னை நம்பு. நான் உன்னை ஆதரிப்பேன்” என்று கர்த்தர் சொல்வது போன்றது.
நாம் தேவனை எப்படி விசுவாசிக்கவேண்டும்? நம்முடைய நேரத்தை ஒதுக்கி, கர்த்தர் எவ்வளவு பெரியவர், அவர் நம்மோடு இருக்கிறார் என்ற முக்கியத்துவத்தை உணர்ந்து, கவலையின்றி விசுவாசிக்கவேண்டும். நம்முடைய செலவுகளைக் குறித்தும், சாப்பிட வேண்டிய ஆகாரத்தைக் குறித்தும், நாம் வீணாக கவலைப்படும் வரை; கர்த்தர் தரும் அந்த இளைப்பாறுதல், ஓய்வுக்குள், நாம் பிரவேசிக்கவே முடியாது.
எல்லோரும் தங்கள் வேலைகளை விட்டு, சும்மா உட்கார்ந்து, கர்த்தர் நல்லவர் என்று தியானித்துக்கொண்டிருங்கள் என்று நான் சொல்லவில்லை. தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் வேலையைச் சிறப்பாக செய்து, கடினமாக உழைத்து; அவருடைய நாமத்தை மகிமைப் படுத்த வேண்டும் என்பதை நம்புகிறவள் நான். ஆனால், கடைசியில் நாம் பார்க்கும் போது, தேவனுடைய அன்பு, அவருடைய சமாதானம், அவருடைய போஷிப்பு, இது தான் நம்மை நடத்தக்கூடியதாயிருக்கிறது. ஆனால், நாம்தான் நம்முடைய தேவைகளுக்காக உழைக்கவேண்டும், நம்முடைய முயற்சியில்தான் எல்லாமே இருக்கிறது என்று பிசாசு கிசுகிசுப்பான். அதைமீறி, கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று அவரைச் சார்ந்து; நம்முடைய சாமார்த்தியமோ, கைபெலனோ இதை செய்யவில்லை என்பதை உணர்ந்து; அவருக் குள்ளாக, நிம்மதியாக, ஓய்வுபெறும் மனநிலையோடு இருப்போம்.
இஸ்ரவேலின் பரிசுத்தரே, நான் அடிக்கடி கவலைப்பட்டு, போதுமான அளவு என் தேவைகள் சந்திக்கப்படவில்லையே என்று புலம்புவதை, எனக்கு மன்னியும். நீரே என் தேவைகளை எல்லாம் சந்திக்கிற தேவன். நான் எப்படியாவது உம்முடைய இந்த இளைப்பாறுதலைப் பெற்றுக்கொண்டு, உம்முடைய பிரசன்னத்தில் மகிழ வேண்டும். இயேசுவின் நாமத்தில் எனக்கு இந்த இளைப்பாறுதலைத் தாரும் என்று கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/