மனதின் போர்களம்மாதிரி
நினைவுபடுத்தும் காரியங்கள்
நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்படிப்பட்ட பிரச்சனையுள்ளவர்களாக இருந்தாலும், நாம் வெற்றியடையவும், அதைக் காத்துக்கொள்ளவும் நமக்கு ஒரு சுயக்கட்டுப்பாடும், ஒழுங்கும் அவசியம். நம்முடைய மனதின் போராட்டத்திலும், நம் சிந்தனைகளிலும் இது முற்றிலும் உண்மை என்று நான் நம்புகிறேன். நம்முடைய மனதிலுள்ளதை, யாராவது கேட்டால், நம்மையுமறியாமலேயே அப்படியே சொல்லிவிடுகிறோம். நம்முடைய மனது, பேச்சு, உணர்வுகள் மற்றும் செயல்களை நாம் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் செய்லபட வைக்க, ஒரு ஒழுங்கிற்குள் கொண்டுவரவேண்டும்.
நாம் இரட்சிக்கப்பட்ட நாளிலேயே, தேவன் தம்முடைய ஒவ்வொரு சுபாவங்களையும், ஒரு விதையை போல நமக்குள் விதைத்திருக்கிறார் (கொலோசேயர் 2:10ஐ காணவும்). நாளடைவில், நம்முடைய வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம்; நமக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இந்த கிறிஸ்துவின் சுபாவங்கள் வளர்ந்து, அன்பு, சந்தோஷம், சமாதானம், தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் மற்றும் இச்சையடக்கம் ஆகிய ஆவியின் கனியை கொடுக்கும் (கலாத்தியர் 5:22,23ஐ காணவும்).
“இச்சையடக்கத்தை” நாம் கடைபிடிக்காதவரைக்கும், மற்ற எட்டு ஆவியின் கனியையும் நம்முடைய வாழ்க்கையில் அப்பியாசப்படுத்து முடியாது. நமக்கு கோபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில், நம்முடைய கோபத்தை நாம் “அடக்காவிட்டால்,” நம்மால் எப்படி பொறுமையின் கனியை வெளிப்படுத்த முடியும்? நமக்கு “இச்சையடக்கம்” இல்லையென்றால், நம்மைக் கோபப்படுத்துபவர்களிடத்தில் எப்படி “அன்பை” கனியாக வெளிப்படுத்த முடியும்?
விசுவாசிகளாகிய நமக்குள் ஆவியின் கனி இருக்கத்தான் செய்கிறது. நாம்தான் அதை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தீர்மானமாக இருக்கவேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், நம்முடைய சாதாரண உள்ளுணர்வுகளின்படியும், மாம்ச இச்சைகளின்படியும் நடக் கின்ற மாம்சீக விசுவாசிகளாய் மாறிவிடுவோம் (1 கொரிந் 3:3ஐ காணவும்). நம்முடைய வாழ்க்கையில் எதை அதிகமாக செயல்படுத்துகிறோமோ, அதுவே பலம் வாய்ந்ததாக இருக்கும்.
நம்முடைய சிந்தனை, வார்த்தை ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஆவியானவர் நம்மை இச்சையடக்கத்தை தொடர்ந்து பயிற்றுவிக்க உதவி செய்கிறார். “...அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; ...இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” என்று (நீதி 23:7; லூக்கா 6:45 கடைசியில்) வேதம் கூறுகிறது. தேவன் நம் மீது வைத்திருக்கும் அன்பினால் நமக்கு கொடுத்திருக்கும் எல்லாவற்றையும், நன்மையானவை அல்ல என்றும், நமக்குத் தீமைதான் நடக்கப்போகிறது என்றும், பிசாசானவன் நம்முடைய மனதிலே, எப்பொழுதும் எதிர்மாறாக பொய் சொல்லுகிறான். நாம் அவனுடைய பொய்களை ஏற்றுக்கொண்டு, அதை நம்ப ஆரம்பித்தால், அடுத்த நிமிடமே அதை வார்த்தைகளாக நம்முடைய வாயினால் பேசிவிடுவோம் என்று அவனுக்கு நன்கு தெரியும். தவறான காரியங்களை நாம் பேசும்போது, நம்முடைய வாழ்க்கையில் தவறான காரியங்கள் நிகழ்வதற்கு நாம் வாசலைத் திறந்தது போல் ஆகிவிடுகிறது ( நீதிமொழிகள் 18:20-21ஐ பார்க்கவும்).
பிசாசானவன் நம்முடைய மனதிலே போட்ட எல்லா தவறான சிந்தனைகளையும், நம்முடைய மனம் திரும்பத் திரும்ப சிந்தித்து புண்படுவதற்கு பதிலாக, தேவன் நம்முடைய வாழ்க்கையிலே செய்த நன்மையான காரியங்களை நினைவுக்குக் கொண்டு வந்து அதை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? பிசாசு நம்முடைய மனதை, கவலை, கஷ்டம், சந்தேகம் ஆகிவைகளினால் நிறைக்கும்போது; நல்ல தீர்மானங்களை எடுக்க முடியாமல் நாம் பெலவீனமாக போய்விடுகிறோம். கவலை என்பது, இயற்கையாகவே “நன்றியில்லாத” ஒன்றாகவும் உள்ளது. கவலைப்படுகிறவர்கள், தங்கள் வாழ்க்கையில் கர்த்தர் செய்த நன்மைகளை காண்கிறதில்லை. அவர்கள் பரிதாபம், தோல்வி, வியாதி, இழப்பு ஆகியவைகளை குறித்தே பேசுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் அப்போதுள்ள நன்மையை கூட கண்ணோக்கிப் பார்க்க முடியாதவர்கள்.
பின்வரும் காரியத்தை, நீங்கள் தினமும் முயற்சி செய்து பாருங்கள். கர்த்தர் உங்களுக்கு கடந்தகாலத்தில் செய்த நன்மைகளை, நோக்கிப் பாருங்கள். வருங்காலத்திலும், நன்மைகளை கர்த்தரிடம் பெற்றுக் கொள்வோம் என்பதை உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளும். பழைய ஏற்பாட்டு நாட்களில், ஜனங்கள் ஒவ்வொரு முறையும், கர்த்தர் தங்களுக்கு தரிசனமாகும்போதும், அவர்கள் விடுதலைகளைப் பெற்றுக்கொள்ளும் போதும்; கற்களை குவியலாக குவித்து, அதை நினைவுகூருதலாக அவர்கள் செய்வது வழக்கம். அதை அவர்கள் திரும்பிப்பார்த்து நினைவு கூரும்போது, அவர்கள் முன்னோக்கி விசுவாசிக்க, அது உதவியாக இருந்தது.
“என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன்மலைகளிலும், சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்” (சங்கீதம் 42:6), என்று சங்கீதக்காரன் எழுதுகிறான். அவன் கடந்த கால வெற்றிகளை நினைவு கூருகிறான். அவன் உபத்திரவப்படும்போதும், தேவனுடைய பிள்ளைகளுக்கு அவர் செய்த மகத்தான கிரியைகளை நினைவுக்குக் கொண்டுவருகிறான்.
ஒருவேளை, சந்தேகம் மெல்ல உங்கள் மனதில் நுழையப்பார்த்தால், சங்கீதக்காரனைப் போல நீங்களும் செய்யலாம். தேவன் எப்பொழுதும் தம்முடைய ஜனங்களோடு இருந்ததை, நீங்கள் திரும்பிப்பார்த்து நினைவுகூரலாம். நாம் அனைவருமே, நம்மால் முடியுமோ என்று திகைத்த நேரங்கள் உண்டு. ஆனால், செய்து முடித்திருக்கிறோம். அதனால், உங்களால் முடியும் என்று விசுவாசியுங்கள்.
என் பெரிய தேவனே, சிறு சிறு காரியங்களும் உம் மேலுள்ள என்னுடைய கவனத்தையும், நினைவுகளையும் திசை திருப்புவதை எனக்கு மன்னியும். நல்ல நேரங்களிலும், என்னுடைய கடினமான நேரங்களிலும், என்னோடு கூட எப்பொழுதும் நீர் இருக்கிறீர் என்பதை, நான் நினைவில் கொள்ள எனக்கு உதவி செய்யும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/