மனதின் போர்களம்மாதிரி
உள்ளத்திலிருந்து...
“நீ என்ன செய்யப் போகிறாய்?” இது பிசாசுக்கு பிடித்தமான ஒரு கேள்வி என்று ஒரு ஆவிக்குரிய தலைவராக, நான் நினைக்கிறேன். சில நேரம், பிசாசு தன்னுடைய அசுத்த ஆவிகளை, ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அனுப்புவது போல: “நீ என்ன செய்யப்போகிறாய்,” என்ற இந்தக் கேள்வியை; விசுவாசிகளின் காதில், முனுமுனுத்துக் கொண்டிருங்கள்,” என்று சொல்லுவான் என்று நினைக்கிறேன். இதை நீங்கள் சற்று கவனித்துப் பார்த்தால் அந்தக் கேள்வி அதிகரிக்கும். அது அதிகமாக, அதிகமாக, அது அதிக பலமாகவும், பிற்போக்கானதாகவும் உருவெடுக்கும். நீண்ட நேரமாகாது, அதற்குள் நீங்கள் உங்கள் பாதையில் குறுக்கிடும் எல்லா தடைகளையும் யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள், உங்கள் வாழ்க்கையில் எதுவும் சரியில்லை என்று உணரத் தொடங்குவீர்கள்.
இதுதான் பிசாசின் வேலை, அவனும் அவன் கூட்டாளிகளும் நம்முடைய மனதின் போராட்டத்தில் போர்தொடுக்கிறார்கள். நம்மையும், மற்ற விசுவாசிகளையும் நீண்ட, இழுபறி, மற்றும் கிரயம் செலுத்தக்கூடிய விலையுயர்ந்த சண்டையில் ஈடுபடுத்துவான். கேள்விகளும், நிச்சயமற்ற நிலையும் அதிகமாகிக்கொண்டேயிருக்கும்போது, அவனுக்கு நம் மனதின் மேல் வெற்றி பெரும் வாய்ப்பும் அதிகமாகிறது.
இயேசு நமக்கு கற்பித்தது போல, நாம் நம்முடைய வாழ்க்கையைக் குறித்து கவலைப்படவேண்டாம், என்னத்தை சாப்பிடுவது அல்லது குடிப்பது; அல்லது நம்முடைய சரீரத்திற்கு எதை உடுப்பது; என்ற கவலையே வேண்டாம். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும், விசேஷித்தவைகள் அல்லவா?
முதலாவது நீங்கள் நினைவுகூர வேண்டிய காரியம் என்னவென்றால், உங்கள் மனதை, நீங்கள் கவலையால் நிறைக்கும்போது, இயேசுவுக்கு கீழ்ப்படியாமல் வாழுகிறீர்கள். அதை விட்டுவிடுங்கள் என்று இயேசு கூறுகிறார்.
இரண்டாவதாக நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய காரியம், நீங்கள் கவலைப்படும்போது, தவறான காரியங்களை பார்க்கிறீர்கள். பள்ளியில் நாம் படிக்கும்போது, நமக்கு நிறைய படங்களை காட்டியிருப்பார்கள். அவை நேரில் ஒரு மாதிரியும், கண்ணாடியில் அதன் பிம்பங்கள் வேறு மாதிரியும் காட்சி அளிப்பதைக் கண்டிருப்பீர்கள். ஒரு பக்கம் பார்க்கும்போது, ஒரு பெண்ணின் முகம் போல் தெரியும். அடுத்த பக்கம் வேறு விதமாக பார்த்தால், ரோஜாப்பூவைப் போல் தெரியும்.
இதை நம்முடைய மனநிலைக்கு ஒப்பிட்டு பார்ப்போம். ஒரு பக்கம் இயேசுவானவர் விரித்த கரங்களோடு உங்களுக்காக நிற்கிறார். நீங்கள் அவரிடம் போய், சமாதானத்துடன் வாழ்கிறீர்கள். அவர் உங்களோடு இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். உங்களோடு அவர் இருப்பதால் உங்கள் தேவைகளையெல்லாம் சந்திக்கிறார். நீங்கள் அடுத்த படத்தில் உங்கள் கவனத்தை செலுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில், நீங்கள் காண்பது, ஒரே பிரச்சனைகள், தோல்விகள், மனச்சோர்வுகள். நீங்கள் உங்கள் கவனத்தை எதில் செலுத்த விரும்பு கிறீர்களோ அதை சார்ந்துதான் உங்கள் நிலைமை இருக்கும்.
உங்கள் மனதுக்கு எவ்வளவு நாட்கள் போஷிக்க முடியுமோ, எவ்வளவு நீண்ட நாட்களாகத் தவறான காரியங்களைப் போடுவானோ, அவ்வளவு நாட்களும் உங்களைத் தவறாக நினைக்கவைக்கவும், உணரவைக்கவும் அவனால் முடியும் என்று எதிரியானவனுக்கு நன்கு தெரியும். உதாரணத் திற்கு, உங்கள் கஷ்டமான இருண்ட வேளைகளில், உங்களுடன் இயேசு இருந்ததை நன்றியோடு நினைவுகூருவதற்கு பதிலாக; “நான் எப்படி இங்கு வந்தேன்? இந்த நிலைமையில் நான் என்ன செய்ய போகிறேன்?ஆண்டவர் உண்மையாகவே என்மேல் அன்புகூருகிறாரா...” என்று அவன் நினைக்க வைப்பான்.
இதோடு முடிந்து விடுவதில்லை. உங்கள் மனதை விஷமாக்கும் விஷயத்தில் பிசாசு ஜெயிக்கத் தொடங்கி, மெல்ல முன்னேறிச் சென்று, விரைவில், நீங்கள் பிசாசின் வார்த்தைகளைத் திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்துவிடத் தூண்டுவான். நீங்கள் உங்களை மட்டும் கெடுத்து விடுவதில்லை, மற்றவர்களையும் புண்படுத்தி, அவர்களையும் பாழாக்கிவிடுவீர்கள். இதில், பிசாசுக்கு இரட்டை வெற்றி - உங்களை சிக்க வைத்ததோடல்லாமல் - மற்றவர்களையும் உங்கள் மூலம் வசப்படுத்தி விட்டான்.
இயேசு, அவர் வாழ்ந்த நாட்களில் இருந்த ஜனங்களைப் பார்த்து, “விரியன் பாம்புக்குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமான வைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும், நல்ல மனுஷன், இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான். பொல்லாத மனுஷன், பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்” (மத்தேயு 12:23-35) என்று சொன்னார்.
இது மிகவும் கடுமையான வார்த்தைகளாகும். பிசாசானவன் ஒரு சிறிய முனுமுனுப்பில் ஆரம்பிப்பான். உங்கள் காதில், ஒரு சிறு சந்தேகத்தின் வார்த்தை. அந்த வார்த்தையை நீங்கள் கேட்க, கேட்க அது பலமாக ஒலிக்க ஆரம்பித்து, இன்னும் நிறைய வார்த்தைகளை கேட்க வைக்கும். விரைவில், அவனுடைய தவறான வழிநடத்துதலுக்குள், உங்களையு மறியாமல் கொண்டு சென்று விடும்.
இப்பொழுது உங்கள் இருதயத்தில் நிறைந்திருக்கும் தவறான காரியங்கள், வார்த்தைகளாக வெளிவரும். அது எதுவாக இருந்தாலும்; அதை பேசுவதோடு அல்லாமல், அதைச் செய்யவும் தொடங்குவீர்கள். தேவனோடுள்ள உங்கள் உறவை நீங்கள் கெடுத்துப்போ டுவதோடல்லாமல்; மற்றவர்களையும் சந்தேகத்தினாலும், பயத்தினாலும் கலக்கும் கருவிகளாக மாறிவிடுவீர்கள்.
நீங்கள் பிசாசுக்கு செவிக்கொடாமல் இருப்பதே, இதை நீங்கள் மேற் கொள்வதற்கு ஒரே வழி. நீங்கள் அவன் வார்த்தையை கேட்டவுடனே, “பிசாசே, கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக. என்னுடைய மனதை விட்டு போ,” என்று விசுவாசத்தோடு கட்டளையிடுங்கள்!
ஆண்டவரே, என் சிந்தனைகளும், என் வார்த்தைகளும் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என்று எனக்கு ஞாபகப்படுத்தியதால், உமக்கு நன்றி. உம்முடைய அளவில்லா சமாதானத்தினாலும், மகிழ்ச்சியினாலும் பிசாசு ஊடுருவ முடியாத அளவுக்கு என் உள்ளத்தை நிரப்பும். என் வார்த்தைகள், உம்முடைய பிரசன்னத்தை என் வாழ்வில் பிரதிபலிக்கட்டும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/